தமிழக பாஜக தலைவராவாரா ஓபிஎஸ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை பாஜகவில் இணைத்து, தமிழக தலைவராக்க பாஜக மேலிடம் விரும்புவதாக தகவல்கள் கூறுகின்றன. அதிமுக அணிகள் இணைப்புக்கு சாத்தியமற்ற சூழல் இல்லை என்பதால் ஓபிஎஸ் பாஜகவில் ஐக்கியமாவார் என்றும் கூறப்படுகிறது.

ஜெயலலிதாவின் மறைவால், அதிமுக அம்மா அணி மற்றும் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி என்று சிதறி போயுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இப்போதுவரைக்கும் அதிமுகவில் தினமும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல், குழு மோதல்கள் நடந்துவருகின்றன.

ஜெயலலிதாவின் தோழி சசிகலாவையும் அவரின் உறவுகளையும் அதிமுகவில் இருந்து வெளியேற்ற நாளொரு திட்டம் போட்டு, ஓபிஎஸ் , ஈபிஎஸ் தரப்பினர் நிறைவேற்றி வருகிறார்கள்.

நொறுங்கிக் கொண்டிருக்கும் அதிமுக

நொறுங்கிக் கொண்டிருக்கும் அதிமுக

சிட்டிங் அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் ஆகியோரின் பதவி அரசியலில், அதிமுக நொறுங்கிக் கொண்டிருப்பதாக, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவிக்கிறார்கள்.

2 நாட்களாக பரபரப்பு

2 நாட்களாக பரபரப்பு

இந்த நிலையில், கடந்த 2 நாளாக, அதிமுக அணிகள் இணையும் என்று பரபரப்பாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதற்கு வாய்ப்பு இருப்பதாக ஓபிஎஸ் தரப்பு கருதவில்லை என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில். இதனால், ஓபிஎஸ் அணி அடுத்து என்ன செய்யலாம் என்கிற ஆலோசனையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

பாஜகவுக்கு வாருங்கள்

பாஜகவுக்கு வாருங்கள்

'அணிகள் இணையவில்லை என்றால் என்ன, நீங்க தமிழக பாஜகவுக்கு தலைவராக பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள். அதன் பின்னர் அதிமுகவில் உள்ள எம்எல்ஏ, எம்பிக்கள், அமைச்சர்கள் என முக்கிய நபர்களை பாஜகவுக்கு அழைத்து வாருங்கள், கட்சியை பலப்படுத்துங்கள் ' என்று அகில இந்திய பாஜக தலைமை பன்னீர் செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

Police Security in ADMK Head office-OneindiaTamil
தீவிர ஆலோசனை

தீவிர ஆலோசனை

இது தொடர்பாக பன்னீர்செல்வத்துடன் பிரதமர் மோடியும் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓபிஎஸ் அணியில் உள்ள எம்எல்ஏ க்கள் மற்றும் சில எம்பிக்கள், பாஜகவில் முதன்மை பொறுப்புக்களில் எப்படி அமரலாம் என்று சிந்திக்க தொடங்கிவிட்டதாகவும், நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sensation in Tamilnadu politics, Because OPS will become a BJP Leader of Tamilnadu.
Please Wait while comments are loading...