அபாரமாக வீசும் காற்று.. வேகமாக உயரும் காற்றாலை மின் உற்பத்தி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லையில் வெயிலின் தாக்கம் இருந்த போதிலும் காற்று நன்றாக வீசுவருகிறது. இதனால் காற்றாலை மின் உற்பத்தி உயர்ந்து வருகிறது.

நெல்லை மாவ்ட்டத்தில் தற்போது குற்றால சீசன் காலம் ஆகும். பருவமழை போக்கு காட்டி வருகிறது. இருப்பினும் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் காற்றாலை மின் உற்பத்தி நன்றாக உள்ளது. மாலை நிலவரப்படி காற்றாலை மின் உற்பத்தி 3856 மெகா வாட் அளவில் உயர்ந்தது.

Wind power generation has increased in Nellai

தமிழகத்திற்கு தற்போது 15 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் தேவைப்படு்ம் நிலையில் மின் வாரியம் காற்றாலை மின்சாரத்தை 2 ஆயிரம் மெகா வாட் அளவிலேயே கொள்முதல் செய்கிறது. உற்பத்தியாகும் மொத்த மின்சாரத்தையும் அதிகாரிகள் கொள்முதல் செய்ய வேண்டும் என காற்றாலை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் சுமார் 11 ஆயிரம் காற்றாலைகள் மூலம் அதிகபட்சமாக 7 ஆயிரம் மெகா வாட் வரை மின் உற்பத்தி செய்ய முடியும். தற்போது காற்றின் வேகம் காரணமாக சராசரியாக 3 ஆயிரம் மெகாவாட் வரை காற்றாலை மின்சாரம் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Nellai district wind throws well. Due to this wind power generation has increased.
Please Wait while comments are loading...