For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மூளை தொப்பி.. உணவுச் சங்கிலி.. ஊசித் துளை கேமரா.. "கம்மி" செலவில் அறிவியல் உபகரண தயாரிப்பு...!

Google Oneindia Tamil News

தேவகோட்டை: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான குறைந்த செலவில் அறிவியல் உபகரணங்கள் தயாரிக்கும் பயிற்சி நடைபெற்றது.

பயிற்சிக்கு வந்தவர்களை ஆசிரியை சாந்தி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். அகஸ்தியா பயிற்சி நிறுவனத்தின் பயிற்சியாளர் மோகன்தாஸ் முன்னிலை வகித்தார். பயிற்சியாளர்கள் மகேஷ், கவியரசு, முத்துச்செல்வன் ஆகியோர் ஆசிரியர்களுக்கு மூளை தொப்பி, உணவு சங்கிலி, பார்வை நீட்டிப்பு திறன், பெரிஸ்கோப், கலைடாஸ்கோப், ஆழ்துளை கிணறு மாதிரி போன்ற அமைப்பு, ஊசி துளை கேமரா, பாஸ்கல் விதி போன்ற பல்வேறு அறிவியல் உபகரணங்களை நேரடியாக செயல் விளக்கத்துடன் செய்து காண்பித்ததுடன், ஆசிரியர்களே செய்வதற்கும் பயிற்சி அளித்தனர்.

 Workshop for school teachers held in Devakottai school

பயிற்சியில் கீளகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர் ஆரோக்கியசாமி, செவல்புஞ்சை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர் ஆரோக்கிய பாஸ்கர், 1வது வார்டு நகராட்சி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை காளீஸ்வரி, பணிபுலான்வயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர் கார்த்திகேயன், காரைக்குடி இந்திய ஆயுள் காப்பிட்டு கழக வளர்ச்சி அதிகாரி முருகப்பன், ஆரோவில் சுந்தரவள்ளி, ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லுரி இயற்பியல் துறை மாணவ, மாணவியர் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பயிற்சியில் கலந்து கொண்டனர்.

 Workshop for school teachers held in Devakottai school

பயிற்சிக்கான ஏற்பாடுகளை அகஸ்தியா அறிவியல் நிறுவனமும், பள்ளத்தூர் அ.மு.மு.அறக்கட்டளையும் இணைந்து செய்து இருந்தனர். நிறைவாக ஆசிரியை வாசுகி நன்றி கூறினார்.

English summary
A science workshop for school teachers was held in Chairman Manickavasgam middle school in Devakottai recently. School teachers were trained to make science instruments with low cost and asked to do the same on their own.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X