“மதவாத பித்தர்கள்”.. அம்பேத்கருக்கே காவியா? உடனே கைது பண்ணுங்க - போஸ்டரால் கொதித்தெழுந்த திருமாவளவன்
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 67 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர் காவி உடை அணிந்திருப்பதைபோன்று சுவரொட்டியை ஒட்டியதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 67 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கும்பகோணம் முழுவதும் அர்ஜுன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சி சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
அதில் அர்ஜுன் சம்பத் படத்துடன் அம்பேத்கர் காவி உடை அணிந்து இருப்பதை போன்றும், அவர் தலையில் திருநீறு, குங்குமம், பட்டை பூசி இருப்பதை போலவும் போட்டோஷாப் செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

கிழிக்கப்பட்ட போஸ்டர்கள்
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல் துறையிடமும் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து கும்பகோணம் நகரம் முழுவதும் இந்து மக்கள் கட்சியினர் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை காவல் துறையினர் கிழித்தனர். இருப்பினும் அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகின.

விடுதலை சிறுத்தைகள் முற்றுகை போராட்டம்
இந்த நிலையில் அம்பேத்கருக்கு காவி உடை அணிவித்து இந்து மக்கள் கட்சி போஸ்டர்கள் ஒட்டியதை கண்டித்தும், இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் குருமூர்த்தியை கைது செய்ய வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

கைது செய்ய கோரிக்கை
விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் உறவுழகன், மண்டல செயலாளர் விவேகானந்தன், இளம் சிறுத்தை எழுச்சி பாசறை மாநில செயலாளர் தமிழனி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் காரணமாக கும்பகோணத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குருமூர்த்தி கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தெரிவித்தனர்.

இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது
இதனை தொடர்ந்து கும்பகோணம் போலீசார் இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் குருமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்களின் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர். இந்த நிலையில் அம்பேத்கருக்கு காவி உடை அணிவித்த இந்து மக்கள் கட்சியினருக்கு விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

திருமாவளவன் கடும் கண்டனம்
இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டு இருப்பதாவது, "சனாதன சங்கத்துவ வர்ணாஸ்ரம பாகுபாடுகளை, பார்ப்பனீய மனுஸ்மிருதி மேலாதிக்கத்தை, தன் இறுதிமூச்சு வரையில் மூர்க்கமாக எதிர்த்து 10 இலட்சம் பேருடன் இந்து மதத்திலிருந்து வெளியேறி மதவெறியர்களின் பல்லைப் பிடுங்கிய புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை இழிவுபடுத்தும் மதவாத மனநோயாளிகளை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மதவாத பித்தர்கள்
சிவன், விஷ்ணு, பிரம்மா முதலிய கடவுள்களை வணங்க மாட்டேன் என உறுதிமொழி ஏற்ற புரட்சியாளர் அம்பேத்கருக்கு பட்டை - குங்குமமிட்டு காவி உடைபோட்டு அவரை அவமதித்துள்ள மதவாதப் பித்தர்களைக் கைதுசெய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications