Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்த போட்டோவை பாருங்க! தஞ்சை தேர் விபத்து.. தூக்கி வீசப்பட்ட சிறுவர்கள்! 2 நிமிடத்தில் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தஞ்சாவூர் தேர் விபத்து குறித்த புகைப்படங்களும், கூடுதல் தகவல்களும் தற்போது வெளியாகி உள்ளன.

Recommended Video

    தஞ்சை தேர் திருவிழா விபத்து நடந்தது எப்படி? | Oneindia Tamil

    தஞ்சாவூர் அப்பர் கோவிலில் தேர் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 11 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூரில் இருக்கும் களிமேடு அப்பர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கடந்த 93 ஆண்டுகளாக இரவு நேரத்தில் நடப்பது வழக்கம்.

    நேற்று இந்த தேரோட்டத்தின் போது அங்கு தேரில் மின்சாரம் தாக்கி தீ விபத்து ஏற்பட்டது. இதில் மேலும் 10 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    புகைப்படங்கள்

    புகைப்படங்கள்

    இந்த நிலையில் இந்த தேர் விபத்து குறித்த புகைப்படங்களும், கூடுதல் தகவல்களும் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி ஊரை சுற்றிவிட்டு கடைசி வீட்டிற்கு அடுத்து தேரை திருப்பும் போதுதான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கடைசி வீட்டில் தேரை திருப்பும் முன் அங்கு தேங்காய் உடைத்து உள்ளனர். கடைசி வீட்டில் சாமிக்கு சிறப்பு பூஜை செய்துள்ளனர். இதன் பின்னர் தேரை திருப்ப முயன்ற போது ஜெனரேட்டர் வாகனம் அங்கு பள்ளத்தில் சிக்கி உள்ளது.

    எப்படி நடந்தது?

    எப்படி நடந்தது?

    இதனால் தேரை வேகமாக பின்னால் இழுத்து அப்படியே முன் பக்கம் தள்ளி உள்ளனர். பின்னர் சாலைதான் பெரிதாக இருக்கிறதே என்று அப்படியே திருப்பி உள்ளனர். ஜெனரேட்டர் வாகனம் சாலையில் சிக்காமல் இருக்கிறதா என்பதை கவனித்தவர்கள் மேலே இருந்த மின்சார வயரை கவனிக்க மறந்துவிட்டனர். அப்போது மின் கம்பத்தில் தேர் உரச அது அப்படியே தீ பற்றிக்கொண்டு எறிந்துள்ளது.

    அலங்காரம்

    அலங்காரம்

    அந்த தேருக்கு சமீபத்தில்தான் சிறப்பு அலங்காரம் செய்து ஊர்வலத்திற்காக ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் தேர் மிகவும் நன்றாக காட்சி அளித்துள்ளது. மின்சாரம் தாக்கிய நிலையில் முதலில் தேரின் தலை பகுதி தீ பிடித்து இருக்கிறது. இது போன்ற சமயங்களில் ஷார்ட் சர்க்யூட் ஆகி மின்சாரம் சட்டென நின்று போகும். ஆனால் இங்கு மின்சாரம் தாக்கிய போது உடனே மின்சாரம் நிற்கவில்லை. மின்சாரம் நிற்பதற்குள் தேர் தீ பிடித்துவிட்டது. தேரில் இருந்த கம்பிகள் வழியே வாகனம் முழுக்க மின்சாரம் பாய்ந்துள்ளது.

    தூக்கி வீசப்பட்டனர்

    தூக்கி வீசப்பட்டனர்

    தேரில் தொங்கிக்கொண்டு இருந்த சிறுவர்கள் முதல் எல்லோரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த தேர் விபத்து குறித்த தீவிரத்தை உணர இந்த புகைப்படங்களை பார்த்தாலே உங்களுக்கு தெரியும். தேர் முழுக்க மொத்தாமாக் தீ பிடித்து எறிந்துள்ளது. மேல் பகுதியில் இருந்து கீழே சக்கரத்திற்கு தீ பரவ 2 நிமிடம் கூட ஆகவில்லை. ஆனால் அதற்கு முன்பே மின்சாரம் தாக்கி தேரில் இருந்தவர்கள், அதை பிடித்து இருந்தவர்கள் பலியாகிவிட்டனர்.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    இந்த தேர் விபத்து தொடர்பான புகைப்படங்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கின்றன. தேரில் இருந்த சாமி சிலை சேதம் அடைந்துள்ளது. மொத்தமாக சேர் சிதிலம் அடைந்துள்ளது. அதில் விளக்கு ஏற்றுவதற்காக இருந்த ஜெனரேட்டர் வயர்கள் மட்டும் சேதம் அடையாமல் இருந்துள்ளன. மற்றபடி தேர் மொத்தமாக சேதம் அடைந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+