தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரீவைண்ட் 2020.. யாருடா என் பொண்டாடிட்டி கிட்ட அப்படி பேசுனது.. நிர்வாண இளைஞர்.. தேனி டாப்-10.!

Google Oneindia Tamil News

தேனி: 2021 புது வருடம் பிறக்க போகிறது. இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் 2020ல் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை பார்க்கலாம்.

Recommended Video

    ரீ வைண்ட் 2020... தேனி டாப்-10..!

    யாருடா என் பொண்டாடிட்டி கிட்ட அநாகரீகமாக பேசுனது வெட்டாம போக மாட்டேன் அரிவாளுடன் பாய்ந்தவர் முதல் இடத்தில் இருக்கிறார். தேனி மாவட்டம் கம்பம் நகரில் ஒரு தனியார் பைனான்ஸ் கம்பெனி இயங்கி வருகிறது. இவர் வீட்டுக்குத் தேவையான பொருட்களை இஎம்ஐயில் வாங்கிவிட்டு தவனையை கட்டவில்லையாம். இதனால் ஊழியர்கள் சம்பந்தப்பட்டவரின் மனைவிக்கு போன் போட்டு பணத்தை தருமாறு மிரட்டும் தொணியில் பேசியிருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த கணவன் அரிவாளுடன் பைனானஸ் கம்பெனிக்கு போய் உண்டு இல்லைன்னு பண்ணிவிட்டார்.

    3வதும் பெண்ணாக போய்விட்டதே என்று சிசுவை எருக்கம்பாலை ஊற்றி கொலை செய்த சம்பவம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே இருக்கின்ற ராமநாதபுரம் என்ற கிராமத்தில் ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதால் 3வதும் பெண் குழந்தையா என்று மாமியார் வாய்க்கு வந்தபடி பேசியிருக்கிறார். மாமியாரின் தூண்டுதலின் பெயரில் பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூர தாய் கவிதாவும், இரக்கமற்ற மாமியார் செல்லம்மாவும் இப்போது ஜெயிலில் கம்பி எண்ணி வருகிறார்கள்.

    டிஎஸ்பிக்கு அரிவாள் வெட்டு, அமைச்சர்களிடம் சரமாரி கேள்வி ... 2020ல் விருதுநகர் டாப் 10 நிகழ்வுகள்!டிஎஸ்பிக்கு அரிவாள் வெட்டு, அமைச்சர்களிடம் சரமாரி கேள்வி ... 2020ல் விருதுநகர் டாப் 10 நிகழ்வுகள்!

    கழுத்தை கடித்தார்

    கழுத்தை கடித்தார்

    தனிமைப்படுத்தப்பட்டதால் மன உளைச்சல் ஏற்பட்டு நிர்வாணமாக ஓடிய இளைஞர் ஒரு மூதாட்டியின் கழுத்தை கடித்துக்கொன்ற சம்பவம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. தேனி மாவட்டம் ஜக்கமநாயக்கன் பட்டியைச் சேர்ந்த இளைஞர், வியாபாரத்திற்காக இலங்கை சென்று வந்திருந்திருக்கிறார். அவரை தனிமைப்படுத்தி இருக்கிறார்கள். வீட்டில் இருந்து வெளியே வந்தவர், தன் மொத்த ஆடையையும் கழற்றிவிட்டு, திடீரென பித்து பிடித்தது மாதிரி நிர்வாணமாக ஓடி, எதிரில் வந்த மூதாட்டியின் கழுத்தை கடித்துக் கொன்றுள்ளார். தனிமை எவ்வளவு கொடியது என்பது கண் முன்னே இந்த சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

    கொரோனா நோயாளி

    கொரோனா நோயாளி

    கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவருக்கு பட்டாசு வெடித்து, கேக் வெட்டித்த சம்பவம் 4வது இடத்தை பிடித்துள்ளது. கொரோனா என்றாலே தலைதெறிக்க ஓடிய நிலையில், தேனி மாவட்டம் கம்பம் அருகே இருக்கிற காமயகவுண்டன்பட்டியில் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியவருக்கு பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்து கேக் வெட்டி, ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

    ஓடிப்போன மகள்

    ஓடிப்போன மகள்

    காதலனோடு மகன் ஓடிப்போனதால், தன் மகள் செத்துப்போய்விட்டார் என்று கதறி அழுது கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தந்தை 5வது இடத்தை பிடித்துள்ளார். தேனி மாவட்டம் வேப்பம்பட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால், இவரது மனைவி செல்வி. இவர்களின் மகள் கீர்த்தனா தந்தைய எதிர்த்து தான் காதலித்த நபருடன் சென்றுவிட்டார் ஆத்திரம் அடைந்த ஜெயபால், கீர்த்தனாவுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டினார், பெற்ற மகள் உயிருடன் இருக்கும் போதே தந்தை கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.,

    நீட் தேர்வில் முதலிடம்

    நீட் தேர்வில் முதலிடம்

    நீட் நுழைவுதேர்வில் அகில இந்திய அளவில் அரசு பள்ளியில் படித்த தேனி மாணவர் ஜீவித் குமார் 6வது இடத்தை பிடித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சில்வார்பட்டியைச் சேர்ந்தவர் தான் ஜீவித்குமார். இவர் இந்த அளவிற்கு மதிப்பெண் பெற அவர் பயின்ற அரசு பள்ளியும் உதவி உள்ளது. இதை அனைவரும் பாராட்ட வேண்டும். அவர் சாதனை படைப்பார் என்று நினைத்த ஆசிரியர்கள், தனி கவனம் செலுத்தி இருக்கிறார்கள்.

    கையில் செருப்பு

    கையில் செருப்பு

    ஒரு கையில் செருப்புடனும், இன்னொரு கையில் வேஷ்டியையும் பிடித்துக்கொண்டு போடி அருகே மலைவாழ் கிராமத்திற்கு சென்று குறைகளை தீர்த்து வைத்தார் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம். இந்த சம்பவம் 7வது இடத்தை பிடித்துள்ளது

    மஞ்சள் நீர் விழா

    மஞ்சள் நீர் விழா

    கம்பம் பகவதி கோயில் நீராட்டம் 8வது இடத்தை பிடித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் டிராக்டர், மாட்டு வண்டியில் தண்ணீருடன் கலந்து கொண்டனர். பகவதியமன்ன கோவில் தொடங்கி பார்க்ரோடு, காந்திஜி வீதி வழியாக ஊர்வலமாக வந்து மீண்டும் கோயிலுக்கு வந்தார்கள். இந்த விழாவில் மஞ்சள் நீரை ஒருவருக்கு ஒருவர் தெளித்து கொண்டாடினார்கள்.

    ஆற்றில் கொட்டிய விவசாயிகள்

    ஆற்றில் கொட்டிய விவசாயிகள்

    விளைச்சல் இருந்தும் விலை இல்லை என்று ஆற்றில் வண்டி வண்டியாக கொட்டப்பட்ட வெண்டைக்காய் 9வது இடத்தை பிடித்துள்ளது. தேனி மாவட்டத்தில் வெண்டைக்காய் விளைச்சல் அதிக அளவு இருந்தது. ஆனால் வெளிமாவட்டம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த வியாபாரிகள் வெண்டைக்காய் வாங்க ஆர்வம் காட்டவில்லை. ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் செலவு செய்து விளைவித்த வெண்டைக்காய் விலை ஒரு ரூபாய்க்கு கீழ் சென்றதால் அப்படியே வண்டியில் கொண்டு வந்து வைகை ஆற்றில் தூக்கிபோட்டார்கள்.

    மனநோயாளி

    மனநோயாளி

    தேனி அருகே பப்ஜியால் பாதிக்கப்பட்டு பயங்கர ஆயுதங்களுடன் நடமாடிய இளைஞரை போலீசார் கைது செய்தார்கள், இந்த சம்பவம் 10வது இடத்தை பிடித்துள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் நகர் பகுதியில் இளைஞர் ஒருவர் பயங்கர ஆயதங்களுடன் சுற்றி திரிந்துள்ளார். அவரை கைது செய்த போலீசார் நடத்திய விசாரணையில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதையும் பப்ஜி கேம் தடை செய்யப்பட்டுவிட்டதால், ஆயுதங்களை உடலில் கட்டி சுற்றியதும் தெரியவந்தது. இதுதான் தேனி மாவட்டத்தில் நடந்த சம்பவங்கள் ஆகும்.

    English summary
    flashback 2020: Now you can see the interesting collections that took place in theni last 2020 year
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X