அன்று ராஜா இன்று கடலூர் மாணவி! சக்தி பள்ளியில் தொடர் மரணங்கள்! 17 ஆண்டுகளுக்கு முன்னரே பகீர் புகார்!
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரண விவகாரம் பூதகரமாக வெடித்துக் கிளம்பி உள்ள நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு ராஜா என்ற மாணவன் விஷம் குடித்து மரணம் அடைந்ததாகவும், 2005ஆம் ஆண்டு எல்கேஜி மாணவி ஒருவர் பலியானதாகக் கூறப்படுகிறது. இதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 2005ஆம் ஆண்டிலேயே போராட்டம் நடத்தியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கணியமூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வந்த மாணவி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாணவிக்கு நீதி கேட்டு கடந்த சில நாட்களாக அவரது பெற்றோர்கள் உறவினர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று திடீரென பள்ளி முன்பு அதிக அளவில் கூட்டம் கூடி போராட்டம் நடைபெற்றது அப்போது திடீரென வன்முறை மூண்டு பள்ளி சூறையாடப்பட்டதோடு வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

மாணவி மர்ம மரணம்
கலவரத்தை கட்டுப்படுத்த முயற்சித்த காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது கலவரக்காரர்கள் போலீசாரை அங்கிருந்து அடித்து விரட்டினர். இதில் பல போலீசார் காயமடைந்ததோடு காவல்துறை வாகனங்களும் சேதம் அடைந்தன. இதையடுத்து கடலூர் உள்ளிட்ட அருகாமை மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு போராட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்து நிலையில் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார். இதனை தொடர்ந்து வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பள்ளியின் தாளாளர் முதல்வர் செயலாளர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதாக தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு கூறினார்.

சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி
இதனடையே புகாருக்குள்ளாகி இருக்கும் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஏற்கனவே இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், 2005 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தியுள்ளது இது தொடர்பாக அப்போது அச்சடிக்கப்பட்ட பிரசுரம் சமூக வலைதளங்களை பரவி வருகிறது. அதில் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் கடந்த சில வருடங்களாக கொலைகளும் ஒழுக்கக்கேடான செயல்களும் அரங்கேறி வருகிறது.

கொடுமைகள்
மாணவ மாணவிகள் கல்விக் கட்டணத்தை காலதாமதமாக கட்டினால் அவர்களை மழையிலும் வெயிலிலும் முட்டி போட வைத்து துன்புறுத்துவது என கொடுமைகள் அரங்கேறியிருக்கிறது. மேலும் மாணவர்களை, அறைக்குள் பூட்டி வைத்து கைதிகள் போல நடத்துவது விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களை பாதுகாப்பாற்ற முறையில் மண் தரையில் உணவு கொடுத்து உட்கார வைப்பது, அரசு விடுமுறைகளை மீறி, நிர்ணயத்த கல்வி கட்டணம் பல மடங்கு சேர்த்து வசூலிப்பது" உள்ளிட்ட புகார்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

மர்ம மரணங்கள்
இதேபோல 2003 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் பள்ளி வேன் அம்மாகளத்தூர் பகுதியில் மாணவர்களை ஏற்றிச்சென்று மோதி விபத்தில் பல மாணவர்கள் காயங்கள் அடைந்துள்ளனர். 2004ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஏழாம் தேதி அப்பள்ளியின் மாணவன் ஆர்.ராஜா உயிரிழந்தது. 16.07.2004ஆம் ஆண்டில் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து பல மாணவர்கள் கால்களை இழந்தது. 2004ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஏழாம் வகுப்பு மாணவன் ராஜா ஆசிரியர் திட்டியதால் மனம் உடைந்து பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது.
Recommended Video

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
8.12.2005 அன்று பள்ளி வளாகத்தில் எல்கேஜி படிக்கும் மாணவி பிரதிக்ஷா பள்ளி வளாகத்தில் வாகனம் ஏறியதால் உயிரிழந்தது. என பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று உள்ளது யாக பூஜை என்ற பெயரில் பள்ளிக்குள்ளேயே மாணவர்களை நரபலி தருவதாக கூறப்படுகிறது எனவே இது குறித்து போராட்ட மக்கள் திரள வேண்டும்" என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சின்ன சேலம் ஒன்றிய குழு போராட்டம் நடத்தியுள்ளது. இதற்காக அச்சடிக்கப்பட்ட நோட்டீஸ் தான் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications