எப்போதும் செல்போனா? ஒழுங்கா சமையல் செய்ய கத்துக்கோ! அதட்டிய தாய்.. கல்யாண பெண் எடுத்த விபரீத முடிவு!
திருநெல்வேலி : திருமணம் நிச்சயித்த இளம் பெண் எப்போதும் செல்போன் பார்த்துக் கொண்டிருந்ததால் அவரது தாய் சமையல் செய்ய கற்றுக்கொள் எனக் கூறியிருக்கிறார். இதனால் அந்த பெண் எடுத்த விபரீத முடிவு நெல்லை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு சில நிமிடங்கள் அற்ப மகிழ்ச்சியை தரும் பேஸ்புக் லைக்குகளுக்காகவும், ஃபேஸ்புக் கமெண்ட்களுக்காகவும் அடிமையாகி தங்களது வாழ்வையே தொலைக்கும் கல்லூரி மாணவிகள் பள்ளி மாணவிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக சமூக வலைதளங்கள் மூலம் நடைபெறும் குற்றங்கள் தான் பெற்றோர்களை பெறும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டு விட்டு லைக்ஸ் எப்போது வரும் என பார்த்துக் கொண்டே இருப்பது பலருக்கு வாடிக்கையாகி விட்டது.

செல்போன் அடிமை
எப்போதும் செல்போனும் கையுமாக இருக்கும் பல இளம் பெண்களை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். சிலருக்கு செல்போன் இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலை கூட ஏற்பட்டு விட்டது என்பதை உண்மை. அப்படி செல்போன் பார்த்துக் கொண்டிருந்ததை கண்டித்ததால் திருமணம் நிச்சயக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் எடுத்த விபரீத முடிவுதான் நெல்லை மாவட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

விபரீத சம்பவம்
பிப்ரவரி 1 ஆம் தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில் செல்போன் பார்த்துக் கொண்டிருக்காதே சமையல் செய்ய கற்றுக்கொள் என தாய் அதட்டியதால் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது தான் அந்த சம்பவம். திருநெல்வேலி அருகே கீழகோடான்குளம் பகுதியைச் சேர்ந்த குப்புராஜ் என்பவரது மகள் கிறிஸ்டில்லா மேரி. கல்லூரி படிப்பை தொடர்ந்து வரும் அவருக்கு திருமணம் செய்ய அவர்கள் பெற்றோர் முடிவெடுத்து மணமகன் தேடியுள்ளனர்.

திருமணம்
இந்நிலையில் நெல்லையைச் சேர்ந்த ஒருவருடன் கிறிஸ்டில்லா மேரிக்கு பிப்ரவரி ஒன்றாம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நிச்சயதார்த்தம் முடிவடைந்த நிலையில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தது. நகை உடைகள் கல்யாண மண்டபம் என அனைத்து வேலைகளும் சுறுசுறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் அவரது தந்தையும் உறவினர்களும் பத்திரிக்கை வைக்கும் பணியில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். ஆனால் கிஸ்டில்லாவோ எப்போதும், பார்த்துக் கொண்டிருப்பது வழக்கமாம். நேற்று முன் தினம் வழக்கம்போல் திருமண வேலைகள் எதுவும் செய்யாமல் செல்போனில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

கண்டித்த தாய்
இதனால் கடும் கோபம் அடைந்த அவரது தாயார் இன்னும் ஒரு வாரத்தில் உனக்கு திருமணம் நடக்க இருக்கிறது.. ஆனால் உனக்கு எதுவுமே தெரியவில்லை. இப்படியே போனால் மாப்பிள்ளை வீட்டில் என்ன செய்வாய். ஒழுங்காக சமையல் வேலைகளை எல்லாம் கற்றுக்கொள். கண்டித்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த கிறிஸ்டினா மேரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இதனால் அதிர்ந்து போன அவரது பெற்றோர் வீட்டில் அவர் சரிந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றனர்.

அதிர்ச்சி
பின்னர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து உடல் நலம் மோசமானதால் மேரி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இரு நாட்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். திருமணத்திற்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில் செல்போன் மயக்கத்தில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications