LPG shortage: நயினார் நாகேந்திரன் கேஸ் டீலர்னு சொன்னாலும் சொன்னார்! அப்பாவு கிண்டலை பாருங்களேன்!
நெல்லை: சமையல் எரிவாயு தீர்ந்துவிட்டால் நயினார் நாகேந்திரன் அண்ணனிடம் வாங்கிக் கொள்வேன் என சட்டசபை சபாநாயகர் அப்பாவு நகைச்சுவையாக தெரிவித்தார். நெல்லையில் நயினாருக்கு கேஸ் ஏஜென்சி இருக்கிறது. இதை அவரே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 11 ஆண்டுகளில் எந்த ஒரு ரயில்வே அமைச்சராவது ஒரு ரயில் சேவையை தொடங்கி வைத்திருக்கிறாரா, வெளியுறவுத் துறை அமைச்சரோ, பாதுகாப்புத் துறை அமைச்சரோ சுயேச்சையாக ஏதாவது திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார்களா?

அனைத்துமே பிரதமரின் பெயரிலேயே நடக்கிறது. இது தனிநபர் ஆட்சி போல உள்ளது. பாஜகவின் உண்மையான கூட்டணி என்பது அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சிபிஐ, தேர்தல் ஆணையம் ஆகியவைதான்.
இவர்களை வைத்துக் கொண்டுதான் ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக அரசியல் செய்கிறது. தமிழகம் இந்தியாவில் ஒரு பகுதியாக இருப்பதால் இங்கே நடந்த வளர்ச்சியை அவர்கள் செய்ததாக மத்திய அரசு விளம்பரம் செய்து கொள்கிறது. வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 53 சதவீத வாக்குகளைப் பெறும்.
மீண்டும் ஸ்டாலினின் ஆட்சி அமையும் என அவர் தெரிவித்திருந்தார். அவரிடம் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் "சமையல் எரிவாயு தீர்ந்துவிட்டால் நயினார் அண்ணனிடம் வாங்கிக் கொள்வேன்" என சிரித்துக் கொண்டே பதில் அளித்தார்.
திருச்சியில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில் தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு என்பது முழுக்க முழுக்க முதல்வர் சொன்ன பொய். ஒரு முறை சிலிண்டர் பெற்ற பிறகு அடுத்த 20 நாட்களுக்கு பின்னரே மீண்டும் முன்பதிவு செய்ய முடியும் வகையில் கணினி தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
நானே கேஸ் சிலிண்டர் டீலர், சிலிண்டர் தட்டுப்பாடு எங்குமே கிடையாது. 20 நாட்களுக்குள் யாருக்காவது சிலிண்டர் தேவைப்பட்டால் உங்களுக்கு நான் தருகிறேன். நீங்கள் எங்கு புக் செய்தீர்களோ அங்கு நான் தருகிறேன். எங்கு வேண்டுமானாலும் நான் தர சொல்கிறேன். ஹோட்டல்களில் உணவு குறைக்கப்பட்டதற்கும் சிலிண்டர் தட்டுப்பாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
ஹோட்டல்களில் சிலிண்டர் தட்டுப்பாடு என எதிர்க்கட்சியினர் எழுதி போட்டிருக்கலாம். உலகப் போரால் இந்தியாவில் பொருளாதார நெருக்கடியோ அல்லது கட்டுப்பாடோ எதுவும் இல்லை. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தவில்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார்.
கேஸ் ஏஜென்சி குறித்து நயினார் நாகேந்திரன் கூறிய கருத்தால் காலி சிலிண்டர்களுடன் அவரது ஏஜென்சியை பலர் முற்றுகையிட்டதாக பொய்யான தகவலும் பரவி வருகின்றன.
ஈரான்- இஸ்ரேல்- அமெரிக்கா போரால் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அது போல் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு என பரவும் வதந்தியால் ஏராளமானோர் பெட்ரோல் நிரப்பும் நிலையங்களில் குவிந்து வருகிறார்கள். 20 லிட்டர் கேன்களில் கூட பெட்ரோலை மக்கள் நிரப்பிக் கொண்டு செல்கிறார்கள். அது போல் எச்சிஎல் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வொர்க் பிரம் ஹோம் செய்ய அனுமதி கொடுத்துள்ளது.
-
தமிழ்நாடு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.. யார் இவர்? வெங்கடராமனை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு -
ராகுலிடம் போன டாக்குமெண்ட்! நள்ளிரவில் நடந்த மீட்டிங்! இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
அதிமுகவை நம்பி சாத்தூரில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.. கைகொடுக்குமா முக்குலத்தோர் வாக்குகள்? -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
தமிழகத்தின் 44 தனித்தொகுதிகளில் 90% வேட்பாளர்கள் தகுதி நீக்கம்? அர்ஜுன் சம்பத் பொதுநல வழக்கு -
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
ஏழை மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. தனியார் பள்ளிகளில் LKG முதல் இலவசம்.. ஹென்றி சொன்ன தேதியை பாருங்க -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார்












Click it and Unblock the Notifications