ஆடி மாசம்.. தலையில் கிரீடம் சூடி அம்மனாகவே மாறிய அன்னபூரணி அரசு அம்மா..பாத பூஜை செய்த பக்தர்கள்
திருவண்ணாமலை: ஆடி மாத இறுதியை முன்னிட்டு அன்னபூரணி அரசு அம்மா அம்மன் வேடத்தில் சிறப்பு தரிசனம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்ததோடு பாத பூஜை செய்து வழிபட்டனர்.
Recommended Video
அன்னபூரணியின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த, கடைக்குட்டி பெண். இவரது கணவர் பெயர் சங்கரநாராயணன். ஆனால் அவருக்கு இவர் ரெண்டாவது மனைவியாம். சங்கரநாராயணன் வேலைக்காக சென்னைக்கு மாறி வந்த நிலையில், குடியிருந்த பகுதியில் அன்னபூரணிக்கு சகஜமாக சில ஆண் நண்பர்கள் உருவாகினர்.
இதனால் அந்த வீட்டுப் பெண்கள் புகார் கிளப்பினராம். இவர்களின் எதிர்வீட்டுக்கு இண்டீரியர் வேலை பார்க்க வந்தவர்தான் அரசு. இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆன்லைனில் ஆசி கொடுத்த அம்மா
இயற்கை ஒளி எனும் அறக்கட்டளையை துவக்கி, அதன் மூலம் ஆன்மிக பயிற்சி வகுப்பு நடத்துகிறேன், மன ஆறுதல் அளிக்கிறேன், குறைகளை தீர்க்கிறேன்! என்று சொல்லி மக்களை கவர ஆரம்பித்தனர். சமூக வலைதளங்களில் தற்போதைய சென்சேஷனல் அம்மா, ஆதிபராசக்தி என்ற பல்வேறு பெயர்களால் வலம் வரும் அன்னப்பூரணி அரசு.

ஆதிபராசக்தி மறு அவதாரம்
தன்னை ஆதிபராசக்தியின் மறு அவதாரம் என கூறி, பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தார். இதை தொடர்ந்து யூ டியூப்பில் ஆன்மீக சொற்பொழிவை நடத்தி வந்தார். பக்தி பரவசத்துடன் அன்னபூரணி அருள் வாக்கு சொல்லும் வீடியோக்கள் காவல்துறை வரை சென்றது. இதனால் அன்னபூரணி ஏற்கனவே திட்டமிட்டிருந்த திவ்ய தரிசனம் ரத்தானது என்பது குறிப்பிடத்தக்கது. நெட்டிசன்கள் வழக்கம் போல, அன்னபூரணியை ஆன்லைனில் ட்ரோல் செய்யத் தொடங்கினர்.

ஆடி மாதம்
ஆடி மாதம் அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டும். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ராஜாதோப்பு பகுதியில் ஆஸ்ரமம் அமைக்கப்பட்டு அன்னபூரணி அரசு பொதுமக்களுக்கு ஆன்மீக சொற்பொழிவை வழங்கினார். அதனைத் தொடர்ந்து ஆடி மாதம் முன்னிட்டு இன்று அன்னபூரணி அரசு அம்மா பக்தர்கள் அம்மன் வடிவத்தில் பார்க்க வேண்டும் என்பதற்காக சூலம், கிரீடம் அணிவித்து அம்மன் வேடத்தில் பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் அளித்தனர்.

பாதபூஜை
கீழ்பென்னாத்தூர் ராஜாதோப்பு பகுதியில் ஆஸ்ரமம் அமைத்து அங்கு குடும்பம் சார்ந்த பிரச்சனை, மன பிரச்சினை, வாழ்வாதாரப் பிரச்சினை, திருமணதடை, குழந்தை வரம் உள்ளிட்டவை அம்மாவின் ஆசியாலும் நடைபெற்று வந்த நிலையில் இன்று ஆடி மாதம் முன்னிட்டு அம்மன் வேடத்தில் ஆன்மிக சிறப்பு தரிசனம் நடைபெற்றது. அப்போது ஆண்கள், பெண்கள் பாத பூஜை செய்து கால் தொட்டு வணங்கிச் சூடம் ஏற்றி வழிபட்டனர். இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு ஆசி பெற்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications