Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சந்திர கிரகணம்.. திருப்பதி, மதுரை மீனாட்சி அம்மன் கோவில்கள் 11 மணி நேரம் கோவில் நடை மூடல்..முழு விபரம்

Subscribe to Oneindia Tamil

திருப்பதி:

சந்திர கிரகணம் நிகழ உள்ளதன் காரணமாக நாளை 11 மணி நேரம் திருப்பதி பெருமாள் கோயில் நடை அடைக்கப்படும் எனத் தேவஸ்தானம் சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அன்னதானமும் வழங்கப்பட மாட்டாது எனவும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட உப கோவில்கள் காலை 9.30 மணி முதல் நடை அடைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசியையொட்டி சனிக்கிழமையன்று அதிகாலை ஸ்ரீதேவி பூதேவி சமேத உக்கிர சீனிவாச மூர்த்தி 4 மாடவீதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி சுப்ரபாத சேவை, தோமாலை சேவைக்கு பிறகு சூரிய உதயத்துக்கு முன்பாக அதிகாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணி வரை உக்கிர சீனிவாசமூர்த்தி ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி 4 மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பக்தர்கள் உக்கிர சீனிவாசமூர்த்தியை, வெங்கடதுரைவார் என்றும் அழைப்பர். வீதி உலா முடிந்ததும் உற்சவர்கள் கோயிலுக்குள் கொண்டு செல்லப்பட்டு கோயில் உள்ளே கருடாழ்வார் சன்னதி அருகே காலை 7 மணி அளவில் கைசிக துவாதசி ஆஸ்தானம் நடைபெற்றது.

சந்திர கிரகணம்

சந்திர கிரகணம்

கிரகண காலத்தில் பொதுவாக கோவில்கள் திறந்திருக்காது. கடந்த மாதம் 25ஆம் தேதி நிகழ்ந்த சூரிய கிரகணத்தின் போது திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்பட்டது அன்னதானம் ரத்து செய்யப்பட்டது. அதே போல நாளைய தினம் சந்திர கிரகணம் நிகழ உள்ளதால் காலை 8.30 மணி முதல் இரவு 7:30 மணி வரை கோயில் நடை சாத்தப்படும் எனவும், அதன் பின்னர் நடை திறக்கப்பட்டு பூஜை நடைபெறும் எனவும் தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதரிசனம் ரத்து

சர்வதரிசனம் ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 8 ஆம் தேதி, ஸ்ரீ வாணி அறக்கட்டளை தரிசனம், ரூ.300 சிறப்புத் தரிசனம், ஆர்ஜித சேவைகள் மற்றும் மூத்த குடிமகன்களுக்கான தரிசனம், மாற்றுத் திறனாளிகளுக்கான தரிசனம் போன்ற அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 8ஆம் தேதியன்று திருப்பதியில் சர்வ தரிசனத்திற்கான டோக்கன்கள் வழங்குவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அன்னதானம் ரத்து

அன்னதானம் ரத்து

பக்தர்கள் திருமலைக்கு சென்று, அங்குள்ள வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் 2ன் வழியாக சர்வ தரிசன வரிசையில் சென்று மட்டுமே கோயில் நடை திறந்த பின்னர் சுவாமியை தரிசிக்க இயலும். கிரகணத்தின்போது சமைக்க மாட்டார்கள் என்பதால், அன்றைய தினம் திருமலையில் உள்ள இலவச அன்னதான மையத்தில் இலவச உணவு விநியோகமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு பக்தர்கள் திருப்பதிக்கு வர வேண்டுமென திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஏழுமலையான் சொத்துக்கள் எவ்வளவு

ஏழுமலையான் சொத்துக்கள் எவ்வளவு

திருமலை தேவஸ்தானம் சார்பில் ஏழுமலையான் கோயிலின் வங்கி முதலீடு தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை 24 வகையான தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.13,025.09 கோடி முதலீடு செய்யப்பட்டது. தற்போதைய நிலவரப்படி 2022ம் ஆண்டு செப்டம்பர் 30 வரை ரூ.15,938.68 கோடி வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

தங்கக் கட்டிகள் முதலீடு

தங்கக் கட்டிகள் முதலீடு

கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 5,387.56 கிலோ, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 1,952.18 கிலோ தங்க கட்டிகளாக மாற்றி முதலீடு செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் ரூ.7,339.74 கிலோ வங்கியில் தங்கம் முதலீடு செய்யப்பட்டது. தற்போது வரை 2022 ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வரை எஸ்பிஐ வங்கியில் ரூ.9,819.38 கிலோவும், ஐஓபி வங்கியில் ரூ.438.99 கிலோ என மொத்தம் ரூ.10,258.37 கிலோ தங்க கட்டிகளாக மாற்றி வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. உலகின் பணக்கார கடவுளாக வணங்கப்படும் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தால் திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றன. தினமும் பல கோடி ரூபாய் காணிக்கையாகவும் பக்தர்கள் ஏழுமலையான் உண்டியலில் செலுத்துகின்றனர்.

மீனாட்சி அம்மன் கோவில்

மீனாட்சி அம்மன் கோவில்

செவ்வாய்க்கிழமை சந்திர கிரகணத்தை முன்னிட்டு அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதன் 22 உப கோவில்களின் நடை சாத்தப்படும் எனக் கோவில் நிர்வாகத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் இரவு 7.30 மணிக்கு மேல் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+