வெற்றி தோல்வி சகஜம்! ’அவர்’ பேச்சை கேட்காமல் கருணாநிதியே முடிவெடுக்க மாட்டார்!கனிமொழி சொன்ன ரகசியம்
திருப்பத்தூர் : கருணாநிதி தனக்கு ஆலோசனை வேண்டும் என்றால் அன்பழகனை தான் அழைப்பார். எந்த ஒரு முடிவை எடுத்தாலும் அவரின் கருத்தை கேட்காமல் கருணாநிதி முடிவெடுக்க மாட்டார் என திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்பியுமான கனிமொழி கருணாநிதி கூறியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட திராவிட கழகம் சார்பில் திருப்பத்தூர் பகுதியை AD கோபால் நூற்றாண்டு விழா, திராவிட கழக தலைவர் கி.வீரமணியின் 90-வது பிறந்தநாள் விழா மற்றும் விடுதலை நாளிதழின் சந்தா வழங்கும் விழா என முப்பெரும் விழாவாக நடைபெற்றது.
இதில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி, பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ வ வேலு, திமுக எம்.பி கனிமொழி மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கனிமொழி
விழாவில் பேசிய கனிமொழி," பேராசிரியர் அன்பழகன் தமிழ் மண்ணுக்காகவும் தமிழ் மொழிக்கவும் தந்தை பெரியாரின் பகுத்தறிவு வளர்க்க வேண்டும் என்பதற்காகவும் அயராது பாடுபட்டார். அதைப்போலவே நாமும் அவர் வழியில் சென்று மண்ணையும் மனிதனையும் காப்பாற்ற பாடுபட வேண்டும். கருணாநிதி தனக்கு ஆலோசனை வேண்டும் என்றால் அன்பழகனை தான் அழைப்பார் எந்த ஒரு முடிவை எடுத்தாலும் அன்பழகனின் கருத்தை கேட்காமல் கருணாநிதி முடிவெடுக்க மாட்டார்.

கருணாநிதி
கருணாநிதிக்கும் அன்பழகனுக்கும் கொள்கையின் அடிப்படையில் உறவு இருந்தது. ஆசிரியர் சட்ட நுணுக்கங்கள் அதிகம் அறிந்தவர். தந்தை பெரியாரின் கொள்கையில் அதிக ஈடுபாடு கொண்டவர் ஆசிரியர். அவர் சொன்ன கருத்தை நான் இன்றும் பின்பற்றி வருகிறேன். ஆசிரியர் சொன்ன கருத்து என்னவென்றால் தனிப்பட்ட வாழ்க்கையில் நான் என்ற உணர்வை தூக்கி எறிந்து விட்டு சமூகத்தின் மீது மட்டுமே அக்கறை காட்ட வேண்டும் பொது வாழ்வில் வந்துவிட்டால் வெற்றி தோல்வி நிரந்தரம் இல்லை என்று அரசியல் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என கூறினார் .

சுயமரியாதை
அதையே நான் இன்றும் பின்பற்றி வருகிறேன். கொள்கை அடிப்படையில் சுயமரியாதை உலகத்தையே உருவாக்க வேண்டும். சமூக நீதிக்காக நாம் பாடுபடுகிறோம் நமக்கு எதிராக உள்ளவர்கள் சமூக அநீதிக்காக செயல்படுகிறார்கள். புதிய கல்வி கொள்கை என்ற ஒரு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது புதிய கொள்கையால் மீண்டும் அடிமை தனத்திற்கு மக்களை எடுத்துச் செல்கிறது.

திராவிட மாடல்
ஒருவர் ஒரு பள்ளியில் படித்தால் கூட அந்தப் பள்ளி இயங்க வேண்டும் என்பது திராவிட ஆட்சியின் மாடல். ஆனால் புதிய கொள்கை என்ற திட்டத்தினால் அனைவரையும் ஒரே இடத்தில் கொண்டு வர வேண்டுமென பள்ளிகளை மூடச் சொல்கிறது. 10% இட ஒதுக்கீடு என்ற அடிப்படையில் தனக்கான இட ஒதுக்கீட்டை உருவாக்கியுள்ளது. எனவே இந்த சமூகத்தையும் இந்த மண்ணையும் காப்பாற்ற நாம் ஒவ்வொருவராக சென்று பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என பேசினார். முன்னதாக திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜ், நல்லதம்பி, வில்வநாத் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.
-
கமல்ஹாசன் கையில் இறுதி அஸ்திரம்.. திமுக நிபந்தனையால் ஆடிப்போன மநீம.. இன்று அவசர ஆலோசனை கூட்டம் -
கோவையை விடமாட்டோம்.. 3 தொகுதிகளை குறிவைத்த காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் முட்டி மோதும் கட்சிகள் -
BJP- TVK- DMK: தவெகவில் இருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார் திமுகவில் ஐக்கியம்! -
“2 மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை?” அதிமுக தலைவர்களின் பேச்சுக்கு ஸ்டாலின் காட்டிய ரியாக்ஷன்! -
29 சீட் டீல் ஓகே? சென்னை வரும் டெல்லி விஐபி.. புஸ்ஸான தவெக பிளான்.. ஜெட் வேகத்தில் திமுக -
மதுரையில் 8 தொகுதிகளில் உதயசூரியன்.. வேட்பாளர்கள் தேர்வு கிட்டத்தட்ட ஓவர்.. செல்லூர் ராஜுவுக்கு செக் -
1989ல் திமுக இமாலய வெற்றி! 91இல் ஆட்சியைக் கலைத்த ஜெயலலிதா.. சிவாஜியின் புதுக்கட்சி எங்கே? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
ஸ்டாலின் டூ அண்ணாமலை வரை... 2021 தேர்தலில் டாப் 10 லீடர்கள் தொகுதிகளின் ரிசல்ட் இதுதான்.. ரீவைண்ட் -
2021ல் திமுக vs அதிமுக.. வாக்கு வித்தியாசம் வெறும் 5.7% தான்.. கேம்சேஞ்சரான நாதக, அமமுக, கமல்ஹாசன்! -
தமிழ்நாடு, புதுச்சேரியில்.. தேர்தல் ரிசல்டை தீர்மானிக்க போகும் 5 மேஜர் விஷயங்கள்! இதுதான் பிரச்சனையே -
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு ஸ்கெட்ச்.. ஐகோர்ட்டில் பரபர மனு!












Click it and Unblock the Notifications