திருப்பூர் மார்க்கெட்டில் தக்காளி விலை சர்ப்ரைஸ்.. செடியிலேயே அழுகும் பழம்? மிரண்ட உடுமலை விவசாயிகள்
சென்னை: இப்போதே வெயில் கொளுத்த துவங்கிய நிலையில், விளைவிக்கும் பயிர்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளன.. அதிலும் தக்காளி பழங்களின் விலை வீழ்ச்சியை சந்தித்து, இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை தந்துவருகிறது.. ஆனால் அதேசமயம்,பறிப்பு கூலிக்கும் வழியின்றி தக்காளி செடியிலேயே அழுகி போகும் அவலமும் உள்ளது.. இதன் பின்னணியில் இருக்கும் அதிர்ச்சிகரமான காரணங்கள் என்னென்ன???
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தக்காளி சாகுபடி பிரதான தொழிலாக உள்ளது.. இங்கு விளையும் தக்காளி உள்ளூர் சந்தைகள் மட்டுமின்றி, அண்டை மாநிலமான கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது..

திருப்பூர் விவசாயிகள்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை ஓரளவுக்கு சீரான நிலையில் இருந்த தக்காளி விவசாயம், இப்போது இயற்கை மற்றும் பொருளாதார காரணங்களால் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது..
குறிப்பாக, பருவமழை பொய்த்தது மற்றும் நிலவும் கடும் வறட்சி காரணமாக தக்காளி மகசூல் அடியோடு பாதித்துள்ளது.. இதற்கு முன்பாக நாளொன்றுக்கு சராசரியாக 50 ஆயிரம் பெட்டிகள் வரை தக்காளி வரத்து இருந்த நிலையில், இப்போது வெறும் 3 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பெட்டிகளாக குறைந்துள்ளதாம்.
தக்காளி விலை சர்ப்ரைஸ்
வரத்து குறைந்தால் விலை உயரும் என்பதே சந்தை விதியாக இருந்து வந்த நிலையில், இப்போது நிலைமை தலைகீழாக உள்ளது.. வரத்து குறைந்த நிலையிலும் வியாபாரிகளின் வருகை பெருமளவு குறைந்துள்ளதால், தக்காளி விலை அதலபாதாளத்திற்கு சென்று விட்டதாக சொல்கிறார்கள்.
கடந்த மாதம் ஒரு பெட்டி 600 ரூபாய் வரை விற்பனையான நிலையில், இப்போது அதே விலை 100 ரூபாயாக சரிந்துள்ளது. அதாவது, மொத்த விற்பனை சந்தையில் ஒரு கிலோ தக்காளி வெறும் 7 ரூபாய்க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.. சில்லறை விற்பனைக் கடைகளில் 10 முதல் 12 ரூபாய்க்கு தக்காளி கிடைப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், இதனை உற்பத்தி செய்யும் விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள்.
ஒரு ஏக்கர் தக்காளி சாகுபடி செய்ய சுமார் 60 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் சூழலில், இப்போதைய சூழலில் வருமானம் பறிப்பு கூலி மற்றும் போக்குவரத்து செலவுக்குக் கூட ஈடுகொடுக்கவில்லை என்று விவசாயிகள் நொந்து கொள்கிறார்கள்..
உடுமலை விவசாயிகள்
அதுமட்டுமல்ல, நோய் தாக்குதல் மற்றும் வெயிலின் உக்கிரம் காரணமாக தரம் குறைந்த காய்கள் உருவாவதும், போதிய சந்தை வாய்ப்பு இல்லாததும் விவசாயிகளை நிலைகுலைய செய்துள்ளது.. இதனால் மனமுடைந்த பல விவசாயிகள், தக்காளியை பறித்து சந்தைக்குக் கொண்டு சென்றால் நஷ்டமே மிஞ்சும் என்பதால், அவற்றை செடிகளிலேயே விட்டுவிடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது..
மற்றொருபுறம் ஹோட்டல்களில் நிலவும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக காய்கறி கொள்முதல் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.. இது கோயம்பேடு, மதுரை, ஒசூர் போன்ற முக்கிய சந்தைகளில் காய்கறிகள் தேக்கமடைய ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது..
தமிழக அரசுக்கு கோரிக்கை
ஒட்டுமொத்தமாக பார்த்தால், இயற்கை சீற்றம் ஒருபுறம் விவசாயிகளை வாட்டினால், சந்தை நிலவரம் மற்றும் எரிபொருள் சிக்கல்கள் மறுபுறம் அவர்களை நெருக்கி தள்ளுகிறது.
நுகர்வோருக்கு விலை மலிவு என்பது தற்காலிக நிம்மதியை தந்தாலும், முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகள் நஷ்டத்தை சந்திப்பது நீண்ட கால அடிப்படையில் உணவுப் பாதுகாப்பு மற்றும் விவசாய உற்பத்தியைப் பாதிக்கும் என்கிறார்கள் விவசாயிகள்.. இதுபோன்ற இக்கட்டான காலங்களில் கட்டுப்படியான விலை கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்ணீருடன் கோரிக்கை விடுக்கிறார்கள்...!!
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications