Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிள்ளையார்சுழி போட்ட தஞ்சாவூர்! கெட்டியாக பற்றிக்கொண்ட திருச்சி அதிமுக! திமுக கவுன்சிலருக்கு சிக்கல்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி மாநகராட்சி திமுக கவுன்சிலர் விஜயா ஜெயராஜை தகுதி நீக்கம் செய்யக் கோரி அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வனிதா வழக்குத் தொடர்ந்துள்ளார்.

திமுக கவுன்சிலர் விஜயா தனது கணவர் ஜெயராஜ் மாநகராட்சி ஒப்பந்ததாரர் என்பதை மறைத்து சட்டவிதிமுறைகளை மீறி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த வழக்கு மீதான விசாரணை திருச்சி ஷெசன்ஸ் கோர்ட்டில் ஜூன் 6-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இன்ஸ்டாகிராமில் காதல் வலை... கல்லூரி மாணவிகளை ஆபாச படம் எடுத்து மிரட்டிய திருச்சி இளைஞர் கைது.

திமுக கவுன்சிலர்கள்

திமுக கவுன்சிலர்கள்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்றி பெருவாரியான இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில், திமுக கவுன்சிலர்களுக்கு எதிராக அதிமுக சட்டரீதியிலான குடைச்சலை கொடுக்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் திருச்சி மாநகராட்சி 11-வது வார்டு கவுன்சிலரும், முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினரிடம் நேரடி அறிமுகம் உள்ளவருமான விஜய ஜெயராஜ் பதவிக்கு இப்போது புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 மாநகராட்சி ஒப்பந்ததாரர்

மாநகராட்சி ஒப்பந்ததாரர்


அதாவது இவரது கணவர் ஜெயராஜ் திருச்சி மாநகராட்சி ஒப்பந்ததாரராக இருக்கும் சூழலில் அந்த விவரத்தை முழுமையாக வேட்புமனுவில் மறைத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றதாகவும் இதனால் திமுக கவுன்சிலர் விஜயா ஜெயராஜை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் கோரி அவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த அதிமுக வேட்பாளர் வனிதா வழக்குத் தொடர்ந்துள்ளார்.

 அதிமுக வழக்கு

அதிமுக வழக்கு

அதிமுக வேட்பாளர் வனிதா இப்படி ஒரு வழக்குத் தொடர்ந்ததற்கு காரணமே தஞ்சை மாநகராட்சியில் நடைபெற்ற ஒரு நிகழ்வை தான் முன்னுதாரணமாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது தஞ்சை மாநகராட்சியில் திமுக கவுன்சிலர் அண்ணா பிரகாஷை தகுதி நீக்கம் செய்து அந்த மாநகராட்சியின் ஆணையர் சரவணக்குமார் அதிரடி நடவடிக்கை எடுத்தார். அண்ணா பிரகாஷ் தனது தம்பி மாநகராட்சி ஒப்பந்ததாரர் என்பதை மறைத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் என்பதே அவர் மீதான நடவடிக்கைக்கு காரணமாகும்.

 பிள்ளையார் சுழி

பிள்ளையார் சுழி

இந்தச் சூழலில் அந்த நிகழ்வை முன்னுதாரணமாகவும் கெட்டியாகவும் பற்றிக்கொண்ட திருச்சியை சேர்ந்த அதிமுக வேட்பாளர் வனிதா வழக்குத் தொடர்ந்துள்ளார். தஞ்சை திமுக கவுன்சிலர் அண்ணா பிரகாஷ் எப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டாரோ அதேபோல் திருச்சி திமுக கவுன்சிலர் விஜயா ஜெயராஜும் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என அதிமுக கங்கணம் கட்டத் தொடங்கியுள்ளது. கவுன்சிலர் தகுதி நீக்கத்துக்கு தெரிந்தோ தெரியாமலோ தஞ்சையில் போடப்பட்ட பிள்ளையார் சுழி இப்போது அதிமுகவுக்கு வசமாக அமைந்துவிட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+