ஓகே.. "முருகன்" மீது சத்தியமா ஒத்துக்கறேன்.. திமுக செய்றது சரியா.. அறிவாலயத்தையே டென்ஷனாக்கிய சீமான்
: திமுகவை சரமாரியாக விமர்சித்து நாம் தமிழர் கட்சி சீமான் கேள்வி கேட்டுள்ளார்
தூத்துக்குடி: குட்கா, கஞ்சா, ஹெராயின் போன்றவை மட்டும் தான் போதைப்பொருட்களா?.. டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுபானங்கள் எல்லாம் கோவில் தீர்த்தமா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிக்க, முதல்வர் ஸ்டாலின் சில அதிரடிகளை மேற்கொண்டார்.
அந்தவகையில், தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பும், ஆதரவும் அளிக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளின் எம்எல்ஏக்களுக்கும் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

TASMAC
அந்த கடிதத்தில், 'இது அரசியல் பிரச்சனை கிடையாது.. நம் நாட்டின் எதிர்காலம் குறித்த பிரச்சனை... குறிப்பாக, இளைய சமுதாயத்தினரின் வாழ்க்கை குறித்த பிரச்சனை. அதனால், அனைவரும் ஆதரவு வழங்கிட வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருந்தார்.. இந்த சமயத்தில், சீமான் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.. அந்த அறிக்கையில், திமுக அரசை மிக மிக மோசமாக விமர்சித்தும், சில கேள்விகளை காட்டமாகவும் எழுப்பியிருந்தார்.

திராவிட மாடல்
குறிப்பாக, "அதிமுக ஆட்சிக்காலத்தில் போதைப்பொருட்களை ஒழிக்க முடியவில்லை என குற்றஞ்சாட்டி, குட்காவுடன் சட்டமன்றத்திற்குள் நுழைந்த முதல்வர் ஸ்டாலின், இந்தியாவிற்கே வழிகாட்டும் 'திராவிட மாடல்' ஆட்சிப் பொறுப்பேற்று 15 மாதங்களாகியும், இதுவரை போதைப்பொருட்களை ஒழிக்க முடியவில்லை என்பதாலேயே கடிதம் எழுதுகிறாரா? இப்படி எம்எல்ஏக்களுக்கு கடிதம் எழுதி வேண்டுகோள் வைக்கும் அளவுக்கு தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் மூலைமுடுக்கெல்லாம் அதிகரித்துள்ளதை இந்த அரசு ஒப்புக்கொள்கிறதா?

தீர்த்தம் + புனிதநீர்
மதுபானங்களை தெருவுக்கு தெரு 2 கடைகள் வைத்து, அதிகாரப்பூர்வமாக அரசே விற்பனை செய்யும் நிலையில், போதைப்பொருள் பயன்படுத்த வேண்டாம் என்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு குறைந்தபட்ச தகுதியாவது திமுகவுக்கு இருக்கிறதா? அப்படியே கஞ்சா, குட்கா விற்கும் சமூகவிரோதிகளை அரசு கைது செய்தாலும், பான்பராக், குட்கா, கஞ்சா போன்றவை மட்டும்தான் போதைப்பொருளா? டாஸ்மாக்கில் மலிவு விலையில் அரசே விற்கும் மதுபானங்கள் போதைப்பொருள் இல்லாமல் கோயில் தீர்த்தமா? புனித நீரா? போதைப்பொருள் விற்றால் அரசு தண்டிக்கிறது? ஆனால், போதைப்பொருள் விற்கும் அரசை யார் தண்டிப்பது? என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியிருந்தார்.

மொட்டை
சீமானின் இந்த கேள்விகள் அனைத்தும் திமுகவுக்கு எரிச்சலை தந்திருந்தது.. இப்படிப்பட்ட சூழலில், இன்றும் திமுகவை விமர்சித்து ஒரு பேட்டி தந்துள்ளார் சீமான்.. தனது மகனுக்கு முடி காணிக்கை செலுத்துவதற்காக, இன்று குடும்பத்தினருடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார் சீமான்.. பிறகு, செய்தியாளர்களிடம் அவர் சொன்னதாவது: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் நடைபயணம் அவரது உடலுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் புத்துணர்வை கொடுக்குமே தவிர மக்களுக்காக இல்லை...

CAA + GST
தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யலாம் என்ற உத்தரவு இருந்தாலும் சரியாக நடைமுறைப்படுத்தவில்லை. அதனால் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். குஜராத் மாடல், டெல்லி மாடல் என்பதை போல் திராவிட மாடல் என்று சொல்கிறார்கள்.. திராவிட மாடல் என்று சொல்வதை விட, தமிழ்மாடல் என்று சொன்னால் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்.. ஜிஎஸ்டி, நீட், சிஏஏ போன்ற திட்டங்களுக்கு தொடக்கமே காங்கிரஸ் கட்சிதான்... இதனால் தான் காங்கிரஸ் கட்சியால் எதிர்த்து பாராளுமன்றத்தில் எதுவுமே பேச முடியவில்லை என்றார்..

டென்ஷனில் திமுக
அப்போது போதைபொருட்கள் பயன்பாடு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சீமான், குட்கா, கஞ்சா, ஹெராயின் போன்றவை போதை பொருட்கள் என்பதை முருகன் மீது ஆணையாக ஒத்துக்கொள்கிறேன்... ஆனால், அதுமட்டும் தான் போதைப்பொருட்களா? டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுபானங்கள் கோவில் தீர்த்தமா? அதனையும் தடை செய்ய வேண்டியதுதானே? செய்வாங்களா? என்று மறுபடியும் அதே கேள்விகளை கேட்டு, திமுகவை டென்ஷனாக்கி உள்ளார்.

ரம்மி கந்துவட்டி
இதே, போதைப்பொருள் விவகாரத்தைதான், பாஜக உட்பட எதிர்க்கட்சிகள் அத்தனையும் கையில் எடுத்து வருகின்றன.. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி கடந்த 3 மாத காலமாகவே இதைதான் சொல்லி கொண்டிருக்கிறார்.. போதைப்பொருள் மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது, ஆன்லைன் ரம்மி கந்துவட்டி கொடுமை ஆகியவற்றால் பலர் தற்கொலை செய்துள்ளனர், தமிழக அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்றும் எடப்பாடி கோரிக்கை வைத்து வருகிறார்.

உதயகுமார்
அதேபோல, இந்த போதைப் பொருள் வழக்கில் குண்டர் சட்டத்தில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதை முதல்வர் வெள்ளை அறிக்கை கொடுக்க முன்வர வேண்டும், போதைப்பொருள் விற்பனை செய்பவரின் எத்தனை பேர் சொத்துக்கள் முடக்கப்பட்டது என்பதை வெள்ள அறிக்கை வெளியிட முதல்வர் முன்வர வேண்டும் என்று ஆர்பி உதயகுமாரும் கிடுக்கிப்பிடியாக கேட்டிருந்த நிலையில், சீமானும் விரட்டி விரட்டி இதுகுறித்து கேள்வி எழுப்பி வருவது, திமுகவுக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.
-
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
என்னோட 4% வாக்கு வங்கியை 2% மாத்த இன்னொருத்தன் வந்துட்டானா.. அண்ணாமலையால் புலம்பும் சீமான்.. மீம்ஸ்!












Click it and Unblock the Notifications