Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வியர்வை சிந்திய விவசாயிகள் பணத்தில் மோசடி.. வீஏஓ தில்லுமுல்லு.. விவசாயிகளுக்கு நீதி கிடைக்குமா?

Subscribe to Oneindia Tamil

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டத்தில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து விவசாயிகளுக்கு சேர வேண்டிய பணத்தை மோசடி செய்த புகாரில் கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Recommended Video

    பயிர்க்காப்பீட்டில் பல லட்சம் மோசடி.. விவசாயிகள் அடிமடியில் கைவைத்த மயிலாடுதுறை விஏஓ.. ஷாக் சம்பவம்

    விவசாயிகள் பெயரில் வங்கிகளில் கடன் பெற்றதாகவும், அவர்களின் காப்பீடு பணத்தை தன்னுடைய கணக்கில் வரவு வைத்தததாகவும் எழுந்த புகாரில் அகரகீரங்குடி ஊராட்சி அருகே முட்டம் கிராம நிர்வாக அலுவலர் மீது புகார் எழுந்துள்ளது.

    பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்ததை அடுத்து முட்டம் கிராம நிர்வாக அலுவலர் திருமலைசங்கு என்பவரை பணியிடை நீக்கம் செய்து கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    சம்பா சாகுபடி

    சம்பா சாகுபடி

    மயிலாடுதுறை மாவட்டம் அகரகீரங்குடி ஊராட்சிக்குட்பட்டது முட்டம் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த கிராம நிர்வாக அலுலவர் அதாவது வீஏஓ பெயர் திருமலைசங்கு. இந்நிலையில் 2020 ஆண்டு விவசாயிகள் சம்பா சாகுபடி செய்திருந்தனர். மழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களில் பயிர்கள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீடு தொகை பெறுவதற்காக விவசாயிகள் பயிர்க்காப்பீட்டினை செய்துள்ளனர். தங்களுடைய நிலத்தின் சிட்டா, அடங்கல் ஆவணங்கள் மூலம் கிராம நிர்வாக அலுவலர் திருமலைசங்கு உதவியுடன் பயிர்க் காப்பீடு செய்திருந்தனர்.

    விவசாயிகள் ஏமாற்றம்

    விவசாயிகள் ஏமாற்றம்

    இந்நிலையில் கடந்த ஆண்டு பெய்த கனமழையின்போது பயிர்கள் நீரில் நனைந்து சேதமடைந்தது. இதையடுத்து பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகையில் 68 சதவீதம் அதாவது 22 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என காப்பீட்டு நிறுவனங்கள் அறிவித்திருந்தன. காப்பீடு நிறுவனம் அறிவித்த தொகையில் விவசாயிகளுக்கு சென்று சேரவேண்டிய நான்கில் ஒரு பங்கு பணம் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு சென்றடையவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த விவசாயிகள் வேளாண்துறை அதிகாரிடம் விசாரித்தனர். இதையடுத்து உழவன் செயலியை வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது விவசாயிகளின் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இழப்பீடு பணம் மோசடி

    இழப்பீடு பணம் மோசடி

    அந்த பணம் முழுவதும் முட்டம் கிராம நிர்வாக அலுவலரின் வங்கிக் கணக்கு, அவரது மனைவி, மகன் மற்றும் உறவினர்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது விவசாயிகளின் நிலத்தின் புல எண்ணைப் பயன்படுத்தி வேறு ஒருவரின் பெயரில் காப்பீடு செய்யப்பட்டு இழப்பீடு தொகை பெறப்பட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து நியாயம் கேட்க சென்ற விவசாயிகளிடம் திருமலைசங்கு அலட்சியமாக நடந்து கொண்டதாக தெரிகிறது. பின்னர் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். புகார் ஏற்றுக்கொண்ட ஆட்சியர் அலுவலகம் விசாரணையை தொடங்கியது. அப்போது மேலும் ஒரு அதிர்ச்சி விவசாயிகளுக்குக் காத்திருந்தது. அதாவது திருமலைசங்கு காப்பீடு தொகை மட்டும் மோசடி செய்யவில்லை. போலியான ஆவணங்கள் தயாரித்து மறையூர் கூட்டுறவு வங்கியில் கடன் பெற்றது மட்டுமின்றி அதற்கு காப்பீடும் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டார் எனவும் கூறப்படுகிறது.

    வீஏஓ சஸ்பெண்ட்

    வீஏஓ சஸ்பெண்ட்

    அதாவது விவசாயிகளின் காப்பீடு தொகையில் மோசடி மற்றும் வங்கிக் கடன் மோசடி என இதுவரை 30 லட்சம் ரூபாய்க்கும் மேல் ஏய்ப்பு செய்ததாக தகவல்கள் தெரிக்கின்றன. பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து திருமலைசங்குவை தற்காலிகமாக பணிநீக்கம் செய்து கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+