Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கனமழையால் பாலாற்றில் பெருகிய தண்ணீர்.. உடைத்த தரைப்பாலம் - குற்றால அருவிகளில் 'தெறி' வெள்ளம்

குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை, சாரல் மழையுடன் இதமான சுழலை சுற்றுலா பயணிகள்.

Subscribe to Oneindia Tamil

வேலூர்: திருப்பத்தூர் அருகே கன மழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலம் உடைந்து வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் பெய்துள்ள கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாரல் மலையோடு நிலவும் இதமான சீசனை சுற்றுலா பயணிகள் அனுபவித்தாலும் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Recommended Video

    கனமழையால் பாலாற்றில் பெருகிய தண்ணீர்.. உடைத்த தரைப்பாலம் - வீடியோ

    கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் நிலவுவதால் தமிழகத்தில் கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    தமிழகத்தில் நேற்று பரவலாக மழை பெய்துள்ளது. இன்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

     குற்றால அருவிகளில் வெள்ளம்

    குற்றால அருவிகளில் வெள்ளம்

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் குற்றால அருவிகள் அமைந்துள்ளது. குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் காலகட்டமாகும். தற்போது தென்மேற்கு பருவமழை கேரளாவில் முன்கூட்டியே தொடங்கி உள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலையின் உட்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவிகளில் நீர்வரத்து துவங்கி சீசன் துவங்கி உள்ளது. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவி பழைய குற்றாலம் சிற்றருவி புலியருவிகளில் உற்சாகமாக குளித்தனர்.

    குளிக்கத் தடையால் ஏமாற்றம்

    குளிக்கத் தடையால் ஏமாற்றம்

    இந்த நிலையில் நேற்று மாலை முதல் குற்றாலம் மலைப் பகுதியிலும் பெய்த சாரல் மழையால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது மேலும் காலை முதல் பிரதான அருவி குற்றாலம் மலைப்பகுதியில் பெய்த கனமழையால் பாதுகாப்பு வளைவை தாண்டி அருவிகளில் தண்ணீர் விழுந்ததால் பாதுகாப்பு நலன் கருதி சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு காவல்துறையினர் தடை விதித்தனர்.

     களைகட்டும் சீசன்

    களைகட்டும் சீசன்

    ஓரிரு வாரத்தில் குற்றால சீசன் களைகட்ட தொடங்க உள்ள நிலையில் தென்மேற்கு பருவ மழை காரணமாக அருவிகளில் நீர்வரத்தும், அவ்வப்போது பெய்து வரும் சாரல் மழையும் சீசன் முன் அனுபவத்தை அளித்துள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் அருவிகளில் செல்பி எடுத்தும் சாரல் மழையில் நனைந்தும் இதமான காலநிலையை அனுபவிக்கின்றனர்.

    பாலாறு வெள்ளத்தால் பாலம் துண்டிப்பு

    பாலாறு வெள்ளத்தால் பாலம் துண்டிப்பு

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மதனூரில் இருந்து உள்ளி செல்லும் தரை பாலம் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த பாலம் ஆனது கடந்து ஆண்டு பெய்த கன மழையால் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் பாலத்தை தற்காலிகமாக பொதுமக்களின் கோரிக்கையின் பேரில் சரி செயப்பட்டு இருந்தது. இந்நிலையில் 4 நாட்களாக பெய்து வரும் கன மழையால் பாலாற்றில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டு பாலம் உடைந்து உள்ளது.இதனால் மதனூறில் இருந்து உள்ளி, குடியாத்தம் உட்பட செல்லும் வாகனங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    கடலூரில் கனமழை

    கடலூரில் கனமழை

    அதன்படி கடலூர் நேற்று காலை வெயில் வாட்டி வதைத்த நிலையில் மதியம் 12.30 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 1 மணி நேரம் தூறிக் கொண்டே இருந்தது. அதன் பிறகு மீண்டும் வெயில் அடித்து. பின்னர் பிற்பகல் 3.30 மணி அளவில் திடீரென மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக கொட்டியது. இந்த மழை சுமார் அரை மணி நேரம் கொட்டி தீர்த்தது. இதனால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கியது. இதேபோல் சிதம்பரம், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விருத்தாசலம் என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. வெயிலுக்கு மத்தியிலும் மழை பெய்து, பூமி குளிர்ந்து வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    17 மாவட்டங்களில் இன்று மழை

    17 மாவட்டங்களில் இன்று மழை

    இன்று தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை ,திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் மற்றும் கரூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுமையம் குறிப்பிட்டுள்ளது. நாளை முதல் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவித்துள்ளன.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+