சத்தம் வராமல் சுவரில் ஓட்டைபோடுவது எப்படி? யூ-டியூப் பார்த்து நடந்த கொள்ளை
சிவ பக்தரான டீக்கா ராமன், நகைக் கடையில் முதலில் தங்கத்தினால் ஆன ருத்ராட்சத்தை திருடி அணிந்து கொண்டு பிறகு மற்ற நகைகளை கொள்ளையடித்தது தெரிய வந்தது.
வேலூர்: நகைக்கடை சுவற்றில் சத்தம் வராமல் ஓட்டை போட்டு திருடுவது எப்படி என்றும் கொள்ளையடித்த நகைகளை உருக்குவது எப்படி என்றும் யுடுயூப் பார்த்து கற்றுக்கொண்டு அதன்படியே ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளை சம்பவத்தை தனி ஒருவனாக அரங்கேற்றியுள்ளார் டீக்காராமன். காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட டீக்காராமன் தற்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.
சிங்கமுகமூடி அடையாளம் தெரியாத அளவிற்கு விக் வைத்து பிபி கிட் உடை அணிந்த ஒல்லியான உருவம் நகைக்கடையில் இருந்து 15 கிலோ நகைகளை கொள்ளையடித்துச் சென்றதை சிசிடிவி காட்சிகளில் பார்த்த காவல்துறையினர் திகைத்துத்தான் போனார்கள்.
கொள்ளையடித்தது எத்தனை பேராக இருக்கும் என்று விசாரித்த காவல்துறையினருக்கு இவ்வளவு பெரிய கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது ஒரே ஒரு நபர் என்றும் அவர் உள்ளூர்காரர் டீக்காராமன்தான் என்பதும் தெரியவரவே ஸ்கெட்ச் போட்டு தூக்கினர்.

செட்டில் ஆக நினைத்த ராமன்
சின்னச் சின்ன திருட்டு சம்பவங்களை செய்து அலுத்துப்போன டீக்காராமனுக்கு பெரிய அளவில் கொள்ளையடித்து விட்டு செட்டில் ஆக வேண்டும் என்பது ஆசை. அதற்காக அவர் தேர்வு செய்துதான் நகைக்கடை. சுவற்றில் சத்தம் வராமல் ஓட்டை போடுவது எப்படி என்று யுடுயூப் மூலம் கற்றுக்கொண்டு அதனை அரங்கேற்றியுள்ளார்.

காட்டிக்கொடுத்த ருத்ராட்சம்
சிவ பக்தரான டீக்கா ராமன், நகைக் கடையில் முதலில் தங்கத்தினால் ஆன ருத்ராட்சத்தை திருடி அணிந்து கொண்டு பிறகு மற்ற நகைகளை கொள்ளையடித்திருக்கிறார். அத்தனை நகைகளையும் புதைத்து வைத்து விட்டு ருத்ராட்சத்தை மட்டும் அணிந்திருந்தார். அதுவே அவரை காட்டிக்கொடுத்து விட்டது.

தனிப்படைகள் அமைப்பு
மீட்கப்பட்ட நகைகளுடன் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஐ.ஜி பாபு, கடந்த 15-ம் தேதி அதிகாலை, கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. இது தொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த தனிப்படையினர் மிகக் கடினமாக புலன் விசாரணை செய்து, ஐந்து நாள்களுக்குள்ளேயே குற்றவாளியை கைது செய்து, கொள்ளையடிக்கப்பட்ட 15.9 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை மீட்டெடுத்தனர். இதன் மொத்த மதிப்பு 8 கோடி ரூபாய் என்றார்.

100 சதவிகித நகைகள் மீட்பு
தனிப்படையினர் விஞ்ஞான பூர்வமாகவும், பழைய முறையைப் பின்பற்றியும் தூங்காமல் இரவு பகலாக உழைத்து, 100 சதவிகித நகைகளையும் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட டீக்காராமன். இவர் பள்ளிகொண்டா காவல் நிலையத்துக்குஉட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர். ஒடுகத்தூர் அருகே அவர் கைது செய்யப்பட்டார். நகைகளை ஒடுகத்தூர் பகுதியிலுள்ள சுடுகாட்டிலேயே புதைத்துவைத்திருந்தார். அவரை அங்கு அழைத்துச்சென்று, மாலையில் நகைகளை மீட்டனர் என்று டிஐஜி பாபு கூறினார்.
Recommended Video

கம்பி எண்ணுவது எப்படி
கொள்ளையன் டீக்கா ராமன் வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 4-இல் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது குற்றவாளியின் கை, கால்களில் ஏற்பட்டுள்ள காயம் குறித்து, போலீசாரிடம் நீதிபதி கேள்வி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட போது தவறி விழுந்ததில் காயம் ஏற்பட்டதாக காவல்துறையினர் விளக்கம்
கொள்ளையன் டீக்கா ராமனும், கீழே விழுந்ததில் அடிபட்டதாக வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து டீக்காராமனை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். யுடுயூப் பார்த்து நகைகளை கொள்ளையடிக்கவும் உருக்குவது எப்படி என்றும் கற்றுக்கொண்ட டீக்கா ராமனுக்கு சிறையில் கம்பி எண்ணுவது எப்படி என்று காவலர்கள் கற்றுக்கொடுத்துக்கொடுத்துக்கொண்டுள்ளனர்.
-
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா?












Click it and Unblock the Notifications