திமுகவினர் வயிறு எரிகிறார்கள்.. என்ன துரைமுருகன் இப்படி சொல்லிட்டாரே !
வேலூர்: திமுகவினர் வயிறு எரிகின்றனர் என தமிழக நீர் பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். என்னவாக இருக்கும்! துரைமுருகன் இப்படி சொல்லிவிட்டாரே. வாங்க பார்ப்போம்.
ஜூன் 21 ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் வேலூர் வருகை தருகிறார். அதை முன்னிட்டு வேலூர் அரியரில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 7 லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்து விட்டு சென்றனர். அந்த கடன் சுமையுடன் ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் அமர்ந்துள்ளார்.

நிதி கஷ்டம்
நிதி கஷ்டத்தை மக்களிடம் கூற முடியாது. நிதியை சமாளிக்க முதல்வருக்கு தெரியும். தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பும் தீர்மானங்களில் கையெழுத்து போட மாட்டேன் என்கிறார் ஆளுநர். கூட்டுறவுத் துறையின் பதவிக்காலம் 3 ஆண்டு என குறைத்து மூன்று முறை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினோம்.

கூட்டுறவுச் சங்கங்கள்
இதுவரை கூட்டுறவுச் சங்கங்கள் கலைப்பு கூட்டத்தில் அவர் கையொப்பமிடவில்லை. அதனால் எதிர்க்கட்சியினரே அந்தப் பதவிகளில் உள்ளனர். நம் கட்சிக்காரர்கள் வயிறு எரிகின்றனர். ஆளுநர் கையொப்பமிடவில்லை என்றாலும் கூடிய விரைவில் அதற்கு ஒரு நல்ல முடிவை நாங்கள் எட்டுவோம் என்றார்.

குடியரசுத் தலைவர்
குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஜூலை 18 இல் நடக்கவுள்ளது. பாஜக நிறுத்தும் வேட்பாளருக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன. இது தொடர்பாக ஆலோசனை நடத்த 22 கட்சிகளுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சிகள்
இது தொடர்பாக இன்றைய தினம் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடத்தின. இந்த கூட்டத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பங்கேற்கவில்லை. அதே போல் திமுக ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பில்லை என்பதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
-
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
6 சீட் கேட்டு அடம் பிடிக்கும் மார்க்சிஸ்ட்.. 5ல் உறுதியாக ஸ்டாலின்! இன்று திமுகவுடன் மீண்டும் பேச்சு -
திமுக கூட்டணியில் 7 சீட்டா? எந்தெந்த தொகுதிகள்? நாளை மேஜர் மீட்டிங்.. இறுதி முடிவெடுக்கும் விசிக!












Click it and Unblock the Notifications