'எவ்வளவு சொல்லியும் கேட்கல'... தனியார் மதுபான கூடத்தை சல்லி, சல்லியாக நொறுக்கிய மக்கள்.. பரபரப்பு!
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அன்னபூர்ணாயாபுரத்தில் கடந்த 30-ம் தேதி தனியாருக்கு சொந்தமான மதுபான கூடம் திறக்கப்பட்டது. கோவில் மற்றும் பள்ளி அருகில் இந்த தனியார் மதுபான கூடம் அமைந்துள்ளதாக கூறப்டுகிறதது.
Recommended Video
இதனால் பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் தீங்கு விளைவிக்கும் எனக்கூறி அந்த கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தி[ல் ஈடுபட்டு வருகின்றனர்.

தனியார் மதுபான கூடம்
இந்த மதுபான கூடத்தை மூடக்கோரி வெம்பக்கோட்டை தாசில்தார் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர். ஆனால் மக்கள் கொடுத்த மனு மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று திரளாக தனியார் மதுபான கூடத்துக்கு சென்றனர்.

சல்லி, சல்லியாக நொறுக்கினார்கள்
மதுபான கூடத்தை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் திடீரென மதுபான கூடத்தை அடித்து நொறுக்க ஆரம்பித்தனர். தனியார் மதுபானகூடம் மற்றும் 50 ஆயிரம் ருபாப் மதிப்புள்ள மதுபாட்டில்கள் மற்றும் கடையில் பொருத்தப் பட்டிருந்த சிசிடிவி கேமராவையும் பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மண்ணெண்ணெய் கேனுடன் போராட்டம்
மேலும் தனியார் மதுபான கூடத்தை நிரந்தரமாக மூடக்கோரி அதன் முன்பு மண்ணெண்ணெய் கேனுடன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் வெம்பக்கோட்டை தாசில்தார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மண்ணெண்ணெய் கேனுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

'சீல்' வைத்தனர்
மதுபான கூடத்தை நிரந்தரமாக மூடினால்தான் அங்கு இருந்து செல்வோம் என்று மக்கள் கூறினார்கள். இதனை தொடர்ந்து தனியார் மதுபான கூடத்தை பூட்டி வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர். மேலும் தனியார் மதுபான கூடத்தை அடித்து நொறுக்கிய அன்னபூர்ணியாபுரம் கிராம மக்கள் 50 பேர் மீது வெம்பக் கோட்டை போலீசார் வழக்கு பதிவுப்செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அன்னபூர்ணாயாபுரத்தில் நீண்ட நேரம் பதற்றம் நிலவியது. அந்த பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
-
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications