வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே செகண்டில் 19 முறை.. "கை தட்டியே கின்னஸ் சான்றிதழ் பெற்ற அமெரிக்க இளைஞர்"

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பல சாதனையாளர்கள் தங்கள் திறமையை காட்டி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது அமெரிக்காவை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் கைத்தட்டியே கின்னஸ் சான்றிதழ் பெற்று சாதனை படைத்துள்ளார்.

பிரம்மிக்க வைக்கும் செய்கைகள், அசாத்திய திறமைகள், சாகசங்கள் என தனித்துவமான செயல்பாடுகளை சர்வதேச அளவில் அங்கீகரிக்கும் வகையில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் அளிக்கப்படுகிறது.

கடந்த 1955- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் கின்னஸ் புத்தகம் வெளியானது.

கன்னியாகுமரியை சேர்ந்த 11 மாத குழந்தை.. கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை கன்னியாகுமரியை சேர்ந்த 11 மாத குழந்தை.. கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை

கின்னஸ் சாதனை

கின்னஸ் சாதனை

அப்போது முதல் உலகில் நிகழ்த்தப்படும் சாதனைகள் பலவும் இந்த புத்தகத்தில் ஆவணப்படுத்தப்படுகிறது. சாதனைகளை நிகழ்த்தி கின்னஸ் புத்தகத்தில் தங்களின் பெயரும் இடம் பிடிக்க வேண்டும் என்பது பலருடைய விருப்பமாக இருக்கிறது. தங்கள் திறமைகளை உலக அளவில் அங்கீகரிக்கப்படும் என்பதால், இந்த கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவது பலருக்கும் பெரும் கனவு என்றே சொல்லலாம்.

கை தட்டியே கின்னஸ் சாதனை

கை தட்டியே கின்னஸ் சாதனை

அந்த வகையில் பல சாதனையாளர்கள் தங்கள் திறமையை காட்டி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து வருகின்றனர். இதில் தற்போது அமெரிக்காவை சேர்ந்த 20- வயது இளைஞர் கைத்தட்டியே கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஒரு நிமிடத்தில் மட்டும் 1,140 முறை தனது இரு கைகளையும் தட்டி முந்தைய சாதனையை முறியடித்துள்ளார். இதற்கு முன்பாக எலி பிஷப் என்பவர் ஒரு நிமிடத்தில் 1,130 முறை கைகளை தட்டியிருந்ததே கின்னஸ் சாதனையாக இருந்தது.

ஆயிரம் முறைகளுக்கு மேல் கைதட்டி

ஆயிரம் முறைகளுக்கு மேல் கைதட்டி

இந்த சாதனையை தற்போது அமெரிக்காவின் லோவா நகரை செர்ந்த டேல்டன் மேயர் என்ற இளைஞர்தான் முறியடித்துள்ளார். ஒரு நிமிடத்தில் சில நூறுமுறைகள் கைதட்டுவதே கடினமான விஷயமாக தெரியும் நிலையில், ஆயிரம் முறைகளுக்கு மேல் கைதட்டி அசாத்திய திறன்மூலம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது பற்றி டால்டன் மேயர் கூறியிருப்பதாவது:-

Wrist clapping முறையில்

Wrist clapping முறையில்

"இயல்பாகவே எனக்கு இப்படி கைதட்ட முடிந்தது. நான் முறையாக பயிற்சியை கூட எடுக்கவில்லை. கின்னஸ் சாதனை படைப்பதற்காக மணிக்கட்டுகளை பயன்படுத்தி கைதட்டும் முறையான wrist clapping - யுக்தியை பயன்படுத்தினேன்" என்றார். Wrist clapping என்பது உள்ளங்கையை விரல்களாலும் மணிக்கட்டுகளாலும் அடிக்கும் முறையாகும். வழக்கமாக இரண்டு கைகளை முழுமையாக பயன்படுத்தி கை தட்டுவதை விட இதில் அதிக முறை கை தட்ட முடியும்.

 ஒரு நொடியில் மட்டும் 19 முறை

ஒரு நொடியில் மட்டும் 19 முறை

ஒரு நொடியில் மட்டும் 19 முறை கைகளை தட்டி இந்த சாதனையை மேயர் நிகழ்த்தியிருக்கிறார். கின்னஸ் குழுவும் இதை உறுதி செய்து பதிவு செய்துள்ளது. மார்ச் மாதமே இந்த சாதனையை நிகழ்த்த தான் முயற்சித்ததாகவும் ஆனால், அப்போது கின்னஸ் சாதனை குழுவிடம் இருந்து பதில் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் 14-வயது சிறுமி 30 செக்கண்டுகளுக்குள் ஒரே காலில் 22 சாக்ஸ்களை போட்டு கின்னஸ் சாதனை படத்தது நினைவிருக்கலாம்.

English summary
Many achievers have shown their prowess and have entered the Guinness Book of World Records. In that way, a 20-year-old man from America has set a record by getting a Guinness certificate by clapping his hands.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X