76-வது ஆண்டு சுதந்திர தினம்.. கூகுள் டூடுல் எப்படி இருக்கு பார்த்தீங்களா.. பட்டம் பறக்கவிட்டு அசத்தல்
வாஷிங்டன்: இந்தியாவின் 76-வது ஆண்டு சுதந்திர தினத்தை ஒட்டி இன்று கூகுல் அசத்தலான டூடுலை வடிவமைத்துள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் முடிவடைந்து 76-வது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு சுதந்திர தினத்தை மக்கள் ஒரு பண்டிகை மனநிலையில் கொண்டாடி வருகின்றனர். வீடுகள் தோறும் தேசியக் கொடிகளை ஏற்றியும், அக்கம்பக்கத்தினருக்கு இனிப்புகள் வழங்கியும் சுதந்திர தினத்தை மக்கள் கொண்டாடி வருகின்றனர். பல இடங்களில் பட்டாசுகளை வெடித்தும் மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், இந்தியா சுதந்திரம் அடைந்து 75-வது ஆண்டை நிறைவு செய்வதை குறிக்கும் விதமாக கூகுல் சூப்பரான டூடுலை வெளியிட்டுள்ளது. சுதந்திர தினத்தன்று ஒரு குடும்பத்தில் தாயார் பட்டங்களை தயாரித்து தருவது போலவும், அவற்றை பிள்ளைகள் பறக்கவிடுவது போலவும் வண்ணமயமாக கூகுல் டூடுல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பட்டங்களில் 75, அன்பை குறிக்கும் ஹார்ட்டின் ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன.

சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் இந்த நாளில், கூகுள் வெளியிட்டுள்ள டூடுல் இந்தியர்களை மேலும் உற்சாகமடைய செய்துள்ளது. இந்த கூகுல் டூடுலை கூகுல் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தலைப்பாகையை கவனித்தீர்களா..! செங்கோட்டையில் சுதந்திர தின விழா கோலாகலம்