வச்சார் பாரு ஆப்பு..! ட்விட்டர் யூசர்களுக்கு ஷாக் கொடுத்த எலான் மஸ்க்! இனி ட்விட்டருக்கும் கட்டணமா?
வாஷிங்டன் : சாதாரண பயனாளர்களுக்கு டுவிட்டர் எப்போதும் இலவசமாக இருக்கும் எனவும், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ட்விட்டரை பயன்படுத்த சிறிது கட்டணம் வசூலிக்கலாம் என ட்விட்டரை வாங்கியுள்ள எலான் மஸ்க் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ், டெல்ஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் நிறுவன தலைவரும், தற்போதைய நிலையில் உலகின் நம்பர் ஒன் பணக்காரருமான எலான் மஸ்க் கடந்த சில மாதங்களாக தனது பார்வையை உலக அளவில் பிரபல சமூக வலைதளமான ட்விட்டரின் பக்கம் திருப்பினார்
கடந்த நில நாட்களுக்கு முன்னர் ட்விட்டர் பயனர்களுக்கு முழு சுதந்திரத்தை வழங்கவில்லை எனவும், தனியுரிமை என்ற பெயரில் கருத்துரிமையை பாதிக்கிறது எனவும் அவர் குற்றம் சாட்டியிருந்த நிலையில் அவர் எடுத்த அதிரடி முடிவுதான் ட்விட்டரை முழுமையாக கைப்பற்றுவது.

எலான் மஸ்க் அதிரடி
சுமார் 44 பில்லியன் டாலர் மதிப்பில் ட்விட்டரை கைப்பற்றிய எலான் மஸ்க் அதில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக ட்விட்டர் ப்ளு, ஊழியர்களுக்கு கட்டுப்பாடுகள், கருத்துரிமை, எழுத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட பல சீர்திருத்தங்கள் இருக்கும் என பயனர்கள் எதிர்பார்த்தனர்.

ட்விட்டருக்கு கட்டணம்
ஆனால் அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக புது குண்டை தூக்கிப் போட்டுள்ளார் எலான். அதாவது ட்விட்டரை பயன்படுத்த நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் அதிலும் ஒரு ஆறுதலான விஷயம் என்னவென்றால் சாதாரண பயனர்களுக்கு கட்டணம் இல்லை. இனிவரும் காலங்களில் டுவிட்டரை இலவசமாகப் பயன்படுத்த முடியாது என எலோன் மஸ்க் ட்வீட் மூலம் சுட்டிக்காட்டியுள்ள எலான், சில பயனர்கள் பணம் செலுத்த வேண்டியிருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

சாதாரண பயனர்களுக்கு இலவசம்
அதே நேரத்தில் சாதாரண பயனர்களுக்கு ட்விட்டர் முற்றிலும் இலவசம் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "சாதாரண பயனர்களுக்கு ட்விட்டர் எப்போதும் இலவசமாக இருக்கும், ஆனால் வணிக/அரசு பயனர்களிடம் சிறிது கட்டணம் வசூலிக்கப்படும்." என பதிவிட்டுள்ளார்.
Recommended Video

புதிய திட்டம்
அதே நேரத்தில் கட்டணம் என்பது புதிய திட்டமாக இல்லாமல், ட்விட்டர் ப்ளூ போன்ற புதிய அம்சமாக இருக்கும் எனவும், பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பிரீமியம் , பிரத்யேக அணுகல் உள்ளிட்டவை சிறிய மாதாந்திர கட்டணத்தில் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ட்விட்டர் ப்ளூ தனது பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக அம்சங்களை வழங்கினாலும், வணிக மற்றும் அரசாங்க பயனர்களுக்கு அடிப்படை தளத்தை கட்டண அடிப்படையில் வழங்கப்போவதாக எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
-
ஈரானின் உச்ச தலைவராக.. என்னை பொறுப்பேற்க சொன்னார்கள்! நான்தான் வேண்டாம் என சொல்லிட்டேன் - டிரம்ப் -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
போர் ஒருபக்கம் இருக்கட்டும்.. 10 கப்பல்களில் எண்ணெய் பரிசாக கொடுத்த ஈரான்! டிரம்ப் பெருமிதம் -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு












Click it and Unblock the Notifications