எப்ஸ்டீன் பைல்ஸ்: அடுத்தடுத்து சிக்கும் தலைகள்.. இங்கிலாந்து இளவரசரை தொடர்ந்து தூதரக அதிகாரி கைது
சென்னை: அமெரிக்காவில் ஜெப்ரி எப்ஸ்டீன் விவகாரம் பெரிதாகியுள்ளது. இந்த விவகாரத்தில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மகனும் தற்போதைய மன்னர் மூன்றாம் சார்லசின் சகோதரருமான முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு மவுண்ட் பேட்டன் விண்ட்சர் கைதாகினார். இதனை தொடர்ந்து தற்போது அமெரிக்காவுக்கான முன்னாள் இங்கிலாந்து தூதர் பீட்டர் மண்டேல்சனும் கைதாகியுள்ளார்.
அமெரிக்காவில் சிறுமிகளை கடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதற்காக ஜெப்ரின் எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டார். பெரும் பணக்காரரான இவர் தனது தனித்தீவிற்கு பல்வேறு பிரபலங்களை அழைத்து சென்றதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகின.

மின்னஞ்சல்கள், வீடியோக்கள்
ஜெப்ரி எப்ஸ்டீன் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவரது மின்னஞ்சல் உரையாடல்கள் வெளியாகி அதிரவலையை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் உரையாடிய மின்னஞ்சல்கள், வீடியோக்கள் ஆகியவை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த விவகாரத்தில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மகனும் தற்போதைய மன்னர் மூன்றாம் சார்லசின் சகோதரருமான முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு மவுண்ட் பேட்டன் விண்ட்சர் மீது குற்றசாட்டுகள் எழுந்தது. இதையடுத்து, இளவரசர் ஆண்ட்ரு கடந்த 19ஆம் தேதி கைதானார்.
இங்கிலாந்து தூதர் பீட்டர் மண்டேல்சன்
அரசுப் பதவி துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யபட்டார். பிரிட்டன் வரலாற்றில் ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்குப் பிறகு, அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டது இதுவே முதல் முறை நிகழ்வாகும். இந்த நிலையில் அமெரிக்காவுக்கான முன்னாள் இங்கிலாந்து தூதர் பீட்டர் மண்டேல்சனும் எப்ஸ்டீன்ஸ் பைல் விவகாரத்தில் கைதாகியுள்ளார்.
பொது அலுவலகத்தில் சந்தேகத்திற்கிடமான செயலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் லண்டன் போலீசார் அவரை கைது செய்தனர். இங்கிலாந்து அரசு அலுவல் மெயில்கள் மற்றும் முக்கியமான தகவல்களை எப்ஸ்டீனுடன் பகிர்ந்த குற்றச்சாட்டு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications