Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அசத்தலாக மாறப்போகும் 'வாட்ஸ்-அப்'.. வருகிறது 5 புதிய அப்டேட்கள்.. அடடே! என்னென்ன வசதிகள்!

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப் பயனர்களுக்கு அவ்வப்போது புதுப்புது அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலகின் முன்னணி சமூக வலைத்தள நிறுவனனங்களில் ஒன்றாக திகழும் வாட்ஸ் அப் தனது யூசர்களுக்கு அவ்வப்போது புதுப் புது அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சூப்பரான 5 புதிய அப்டேட்களை வாட்ஸ் அப் விரைவில் வெளியிட இருக்கிறதாம். அந்த அப்டேட்கள் என்ன என்பதை இங்கே காணலாம்.

உலக அளவில் அதிகம் பேர் பயன்படுத்தக்கூடிய சமூக வலைத்தளங்களில் ஒன்றாக வாட்ஸ் அப் உள்ளது.

இணையம் மூலமாக இன்று உலகமே உள்ளங்கைக்குள் சுருங்கி விட்டது என்று சொல்லும் அளவுக்கு தகவல் தொடர்பு பரிமாற்றங்கள் மிகவும் எளிதாகிவிட்டது. அதுவும் ஸ்மார்ட் போன்கள் வருகைக்கு பிறகு தகவல் தொடர்பு அபரிமிதமான வளர்ச்சியை கண்டுவிட்டது.

வாட்ஸ் அப்

வாட்ஸ் அப்

வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்கள் மூலமாக நொடிப்பொழுதில் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் தகவல்களை பரிமாற முடிகிறது. குறுஞ்செய்தி அனுப்புவதற்கு பல சமூக ஊடக செயலிகள் இருந்தாலும் வாட்ஸ் அப் உலக அளவில் முன்னணி தளமாக உள்ளது. காலையில் விழித்ததும் இப்போதெல்லாம் எல்லோரும் முதலில் பார்ப்பது வாட்ஸ் அப் ஆகத்தான் இருக்கும் என்றும் சொல்லும் அளவுக்கு ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களின் மத்தியில் வாட்ஸ் அப் பிரபலம் ஆகிவிட்டது.

புகைப்படங்கள், வீடியோக்கள்

புகைப்படங்கள், வீடியோக்கள்

உலகம் முழுவதும் 2.26 பில்லியன் பேர் வாட்ஸ் அப்பை பயன்படுத்துகின்றனர். வெறும் குறுஞ்செய்தி அனுப்புவது மட்டுமோடு நிறுத்தி விடாமல், புகைப்படங்கள், வீடியோக்கள், பைல்கள் என பல வசதிகளை வாட்ஸ் அப் அளித்து வருகிறது. சந்தைகளில் நிலவும் போட்டியை சமாளிக்கவும் வாடிக்கையாளர்களுக்கு புது அனுபவங்களை கொடுக்கும் வகையிலும் வாட்ஸ் அப் அடிக்கடி அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.

மேசேஜ்கள் மட்டும் இன்றி

மேசேஜ்கள் மட்டும் இன்றி

முதலில் வெறும் குறுஞ்செய்தி (மெசேஜ்) அனுப்பும் செயலியாக கால் பதித்த வாட்ஸ் அப் நாளடைவில் கொடுத்த அப்டேட்கள்தான் அது இன்றளவும் சமூக வலைத்தளங்களில் ஜாம்பவான் நிறுவனமாக தன்னை நிலை நிறுத்திக்கொள்ள காரணமாக உள்ளது. மேசேஜ்கள் மட்டும் இன்றி வாய்ஸ் மெசேஜ் அனுப்புவது, ஸ்டேடஸ் வைப்பது என சமூக வலைத்தள பயனர்களுக்கு அசத்தல் வசதிகளை கொடுத்து வருகிறது.

 விரைவில் 5 புதிய அப்டேட்கள்

விரைவில் 5 புதிய அப்டேட்கள்

அந்த வகையில் வாட்ஸ் அப் செயலியில் விரைவில் புதிய 5 அப்டேட்கள் வர இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. அதன்படி, வாட்ஸ் அப் குரூப் தலைப்புக்கு (சப்ஜெக்ட்) தற்போது அதிகபட்சமாக 25 எழுத்துக்களை மட்டுமே வைக்க முடியும். இந்த வார்த்தைகளின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்த வாட்ஸ் அப் பரிசீலித்து வருகிறது. இந்த அப்டேட் விரைவில் பயனர்களுக்கு கிடைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

டிராயிங் டூல்

டிராயிங் டூல்

* வாட்ஸ் அப் மூலமாக இமேஜ் ஷேர் செய்யும் போது இமேஜின் அசல் தரம் பாதிக்கப்படுவதாக பயனர்கள் பலரும் ஆதங்கப்படுவதுண்டு. விரைவில் இந்த குறையையும் போக்க வாட்ஸ் அப் தயாராகி வருகிறது. படத்தின் குவாலிட்டி குறையாமல் பிறருக்கு ஷேர் செய்யும் வசதியை வாட்ஸ் அப் தற்போது சோதனை செய்து வருகிறது.
* விரைவில் டெக்ஸ்ட் எடிட்டர் என்ற ஆப்ஷனை வாட்ஸ் அப் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிகிறது. டிராயிங் டூல் என்ற அம்சம் சேர்க்கப்பட்டு மெசேஜ் டைப் செய்யும் போதே.. Font களை மாற்றுவது.. பேக்கிரவுண்ட் கலர் மாற்றுவது, ஹைலைட் செய்யும் வசதி ஆகியவற்றை கொண்டு வர உள்ளதாம்.

 டெக்ஸ்ட்களை எடிட் செய்ய முடியும்

டெக்ஸ்ட்களை எடிட் செய்ய முடியும்

* அதேபோல், அலைன்மெண்ட்கள் மற்றும் பேக்கிரவுண்ட்கள் மட்டும் இன்றி புதிய Fonts- களை டெக்ஸ்ட் எடிட்டரில் சேர்க்கும் பணியை வாட்ஸ் அப் செய்து வருகிறது. இதன் மூலம் பயனர்கள் இமேஜ் மற்றும் வீடியோக்கள், ஜிப் பைல்ஸ்களுக்கு உள்ளாகவே டெக்ஸ்ட்களை எடிட் செய்ய முடியும். அதேபோல் புதிய விதவிதமான எழுத்துருக்கள் டெஸ்ட்டில் சேர்க்க முடியும்.
* கம்யூனிட்டி குரூப் செய்திகளுக்கு ரியாக்ட் செய்யும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த வசதி IOS - மட்டுமே கிடைக்கும். இதற்போது கம்யூனிட்டி குரூப் செய்திகளுக்கு பயனாளர்களால் ரியாக்ட் செய்ய முடியாது. விரைவில் இந்த வசதி அறிமுகம் ஆக உள்ளது. வாட்ஸ் அப்பில் வெளியாகக் கூடிய புதிய அப்டேட்கள் குறித்து டிராக் செய்யும் WAbetainfo இந்த தகவல்களை தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+