Donald Trump: சொந்த காசில் சூனியம் வைத்த டிரம்ப்.. ஈரான் மீதான போரால்.. ரஷ்யாவுக்கு கொட்ட போகுது பணமழை
வாஷிங்டன்: ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்கினால் உக்ரைன் போர் முடிவுக்கு வரும் என்று கூறி வந்த டிரம்ப் (Donald Trump), ஈரான் மீது போர் தொடுத்த பிறகு நிலமை தலைகீழாக மாறியிருப்பதால், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க விதிக்கப்பட்ட தடையை விலக்கியிருக்கிறது. கச்சா எண்ணையை தள்ளுபடி வழங்கி வந்த ரஷ்யா தற்போது விலையை உயர்த்தி லாபம் பார்க்க தயாராகி வருகிறது. டிரம்பின் முடிவு கடைசியில் ரஷ்யாவுக்கே லாபமாக மாறிவிட்டதாக சர்வதேச நோக்கர்கள் கூறிவருகிறார்கள்.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு போர் வெடித்தது. உக்ரைன் நேட்டோ படையில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போரை ரஷ்ய அதிபர் புதின் தொடுத்தார். 4 ஆண்டுகள் ஆகியும் முடிவில்லால் உக்ரைன் - ரஷ்யா போர் நீடித்து கொண்டு இருக்கிறது.

டிரம்புக்கு நேர்ந்த நிலைமை
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு இந்த போரை முடிவுக்கு கொண்டு வர தீவிரம் காட்டினார். ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை டிரம்ப் விதித்தார். இதனால், ரஷ்யா தள்ளுபடி விலையில், இந்தியா, சீனாவுக்கு கச்சா எண்ணெயை வாங்கி வந்தது. இந்தியாவும் சீனாவும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி, அந்த நாட்டை வளப்படுத்துவதாகவும் அதுவே உக்ரைன் மீதான போர் நீடிப்பதற்கும் காரணம் என்று டிரம்ப் கடுமையாக விமர்சித்தார்.
மேலும் ரஷ்யாவுடன் எண்ணெய் கொள்முதல் செய்வதற்காகவே 25 சதவீத வரியையும் டிரம்ப் விதித்தார். ரஷ்யாவை பொருளாதார ரீதியாக நெருக்கடிக்கு உள்ளாக்கி போரை முடிவுக்கு கொண்டு வருவதே டிரம்பின் வியூகமாக இருந்தது. எந்த டிரம்ப் இப்படியெல்லாம் சொல்லி, நெருக்கடி கொடுத்தாரோ, தற்போது அவரது வாயில் இருந்தே ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல் செய்யுங்கள் என சொல்ல வைத்துள்ளது உலக நாடுகள்.
ஹார்மூஸ் நீரிணையை மூடல்
உலக நாடுகள் வலியுறுத்தலால் இந்த நிலைம சில மாதங்களிலேயே டிரம்புக்கு ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால், கோபம் அடைந்த ஈரான், ஹார்மூஸ் நீரிணையை மூடுவதாக அறிவித்தது. ஹார்மூஸ் நீரினை என்பது உலக வர்த்தகத்தின் உயிர்நாடி என்று சொல்லும் அளவிற்கு மிக முக்கியமான இடமாக உள்ளது.
இந்த வழியாகவே பெருமளவு எண்ணெய் கப்பல்கள் பயணித்து வருகின்றன. தற்போது இந்த நீரிணை மூடப்பட்டதால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஈரானின் எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் இந்த வார இறுதியில் குண்டுவீச்சில் சேதமடைந்ததைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் பெஞ்ச்மார்க் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 100 டாலரைத் தாண்டி உயர்ந்தது.
கூடுதல் விலையில் ரஷ்யா விற்க வாய்ப்பு
இது 2022ஆம் ஆண்டு கோடைக்காலத்திற்குப் பிறகு ஏற்பட்ட மிக உயர்ந்த விலையாகும். அப்போது ரஷ்யா உக்ரைனில் முழுமையான படையெடுப்பு தொடங்கியபோது சந்தைகளில் எண்ணெய் விலை திடீரென உயர்ந்தது. இந்த எண்ணெய் விலை உயர்வு, உக்ரைன் போரின் செலவு காரணமாக உள்நாட்டு பொருளாதார நெருக்கடி உருவாகும் அபாயத்தை சந்தித்துக் கொண்டிருந்த ரஷ்யாவுக்கு முக்கியமான பொருளாதார பலனாக அமைந்துள்ளது.
உலகளாவிய எண்ணெய் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ரஷ்ய கச்சா எண்ணெயை இனி தள்ளுபடி விலையில் அல்ல, கூடுதல் விலையில் விற்கப்படும் வாய்ப்பு உள்ளது. மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள தடைகள் இருந்தாலும், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றன.
எண்ணெய் பற்றாக்குறையை குறைக்க
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பேசிய பிறகு, டொனால்டு டிரம்ப் "எண்ணெய் பற்றாக்குறையை குறைக்க சில நாடுகளுக்கு எண்ணெய் தொடர்பான தடைகளை தற்காலிகமாக தளர்த்துவோம்" என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. நேற்று டிரம்ப், புதினுடன் தொலைபேசி மூலம் பேசி, போர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்தார்.
புதினின் வெளிநாட்டு கொள்கை ஆலோசகர் யூரி உஷாகோவ் இது குறித்து கூறுகையில், "வளைகுடா நாடுகளின் தலைவர்கள் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆகியோருடன் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, மோதலை விரைவாக அரசியல் மற்றும் தூதரக வழியில் தீர்க்க சில யோசனைகளை புதின் முன்வைத்தார் என்று கூறியுள்ளார்.
மிகப்பெரிய தவறான முடிவு
புதினின் செய்தி தொடப்ராளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது:- "ரஷ்யா எப்போதும் போலவே எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் நம்பகமான விநியோகஸ்தராக உள்ளது. ரஷ்ய எரிசக்தி பொருட்களுக்கு தேவை அதிகரித்துள்ளது" என்றார்.
ரஷ்ய அதிபர் மாளிகை உதவியாளர் கிரில் திமித்ரியேவ் தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், "எண்ணெய் அதிர்ச்சி சுனாமி இப்போதுதான் தொடங்குகிறது. ரஷ்ய எரிசக்தியைத் தவிர்க்க வேண்டும் என ஐரோப்பா எடுத்த முடி மிகப்பெரிய தவறு" என்று விமர்சித்துள்ளார்.
-
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
ஒரு வழியாக டிரம்ப் எடுத்த முடிவு.. ஈரான் போரில் மாபெரும் ட்விஸ்ட்.. சஸ்பென்ஸ் வைக்கும் அமெரிக்கா! -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
வளைகுடாவின் மிக பெரிய பாலத்தை தாக்கி அழித்த அமெரிக்கா.. அதிர்ச்சியில் ஈரான்! உச்சக்கட்ட பதற்றம் -
நேட்டோவில் இருந்து விலகும் அமெரிக்கா? உலக நாடுகளுக்கே அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்.. இப்படி ஆகிடுச்சே -
சோப்பு, சீப்பு, எண்ணெய் எல்லாம் விலை உயரபோகுது.. வார்னிங் கொடுக்கும் ரிப்போர்ட்! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம்












Click it and Unblock the Notifications