வெறுப்பு வாதத்திற்கு எதிரான வெற்றி.. மிச்சிகன் மேயர் தேர்தலில் 3 அரபு வம்சாவளி இஸ்லாமியர்கள் வெற்றி
வாஷிங்டன்: அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் நடைபெற்ற மேயர் தேர்தல்களில் முதல்முறையாக அரபு நாட்டு வம்சாவளியை சேர்ந்த 3 இஸ்லாமியர்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.
அமெரிக்காவில் டிரம்ப் அதிபர் ஆன 2016 முதலே இஸ்லாமிய வெறுப்புவாத கருத்துகள் அங்கு அதிகரித்து வந்தன. இஸ்லாமியர்கள் குறித்த தவறான பரப்புரை அங்கு முன்னெடுக்கப்பட்டன.
இந்தச் சூழலில் மிச்சிகன் மாகாணத்தில் நடைபெற்ற மேயர் தேர்தல்களில் முதல்முறையாக அரபு நாட்டு வம்சாவளியை சேர்ந்த 3 இஸ்லாமியர்கள் வென்றுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

அரபு வம்சாவளி இஸ்லாமியர்கள்
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் டியர்பார்ன், டியர்பார்ன் ஹைட்ஸ் மற்றும் ஹாம்ட்ராம்க் ஆகிய மூன்று நகரங்களில் மேயர் தேர்தல் நடத்தப்பட்டன. அதில் டியர்போர்ன் நகரில் நடைபெற்ற தேர்தலில் 31 வயதான லெபனான்-அமெரிக்கரான அப்துல்லா ஹம்மூத் வென்றுள்ளார். இந்தத் தேர்தலில் அப்துல்லா ஹம்மூத் 55 சதவீத வாக்குகளைப் பெற்று, அந்நகரின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரபு வம்சாவளியைச் சேர்ந்த முதல் மேயர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

சவுதி அரேபியா
அப்துல்லா ஹம்மூத்தின் தந்தை லெபனானில் இருந்து சவுதி அரேபியா வழியாக 1980களில் அமெரிக்கா வந்தவர். அவரது தாயார், தெற்கு லெபனானில் உள்ள பின்ட் ஜ்பீலில் இருந்து, 1974இல் டியர்பார்னுக்கு குடிபெயர்ந்தார். இந்த வெற்றி மக்களின் மகத்தான தீர்ப்பு என்றும் மக்களின் மாற்றத்தை விரும்பிய தன்னை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் அப்துல்லா ஹம்மூத் குறிப்பிட்டுள்ளார்.

ஏமன் வம்சாவளி
மிச்சிகனின் ஹாம்ட்ராம்க்கில் நடைபெற்ற தேர்தலில் ஏமனில் வம்சாவளியைச் சேர்ந்த அமர் காலிப் மேயர் பதவிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 42 வயதான காலிப் 68 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கள் வெற்றி அமெரிக்கக் கனவுக்கு ஒரு சான்று. என்னைப் போன்ற ஒரு புலம்பெயர்ந்தவர், இங்குத் தேர்தலில் வென்று மேயர் ஆகியுள்ளார் என்றால் அது அமெரிக்காவில் மட்டுமே முடியும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

3ஆவது மேயர்
அதேபோல டியர்பார்ன் ஹைட்ஸில் நடைபெற்ற தேர்தலில் லெபனானில் பிறந்த 58 வயதான பில் பாஸி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பில் பாஸிக்கு 10 வயது இருக்கும்போது, அவரது குடும்பத்தினர் அமெரிக்காவில் குடிபுகுந்துள்ளனர். பள்ளிக் கல்வியை முடித்த பிறகு பில் பாஸி, பல ஆண்டுகள் அமெரிக்க ராணுவம் மற்றும் புலனாய்வுத் துறையில் பணிபுரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏன் முக்கியம்
அமெரிக்காவில் சமீக ஆண்டுகளாக சிறுபான்மையினர்களுக்கு எதிரான வெறுப்புவாத பரப்புரை அதிகரித்து வரும் நிலையில், இந்த வெற்றி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஒரே மாகாணத்தில் நடைபெற்ற மேயர் தேர்தலில் சிறுபான்மை இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்த மூவர் வென்றுள்ளது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இவர்களின் வெற்றிக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
-
ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்களுக்கு நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பு! -
"நடக்க கூட முடியல.." ரொம்பவே மோசமாகி போன டிரம்ப் உடல்நிலை? பெரிய விவாதமான வீடியோ -
டிரம்ப் சொன்னது பொய்யா? பேச்சுவார்த்தையே நடக்கவில்லை.. பின்வாங்கிட்டாங்க! எகிறி அடிக்கும் ஈரான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
இரண்டாக பிளந்த விமானம்.. விமான நிலையத்தில் மோசமான விபத்து.. திடீர் பரபரப்பு! -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
சிவகார்த்திகேயனுக்கு சனி பிடித்துவிட்டது.. நாஞ்சில் சம்பத் சர்ச்சை பேச்சு.. மீண்டும் சிக்கிய தவெக -
ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி -
முடிவுக்கு வந்தது இழுபறி! புதுச்சேரி, கேரளா, அசாமில் வேட்புமனுத் தாக்கல் ஓவர்! யாருக்கு வெற்றி? -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி












Click it and Unblock the Notifications