ஓரணியில் இந்தியா, சீனா.. அதிர்ந்த அமெரிக்கா - ரஷியாவுக்கு எதிரான ஐநா தீர்மானத்தில் ஒரே முடிவு
வாஷிங்டன்: உக்ரைனின் 4 மாகாணங்களை தங்கள் நாட்டுடன் இணைக்கும் ரஷியாவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா, அல்பேனியா ஆகிய நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்திலிருந்து இந்தியா, சீனா ஆகிய நாடுகள் விலகின.
கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைனில் படையெடுப்பை தொடங்கிய ரஷியா, இடைவிடாமல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இருப்பினும் உக்ரைன் விட்டுக்கொடுத்துவிடாமல் நட்பு நாடுகளின் உதவியோடு ரஷியாவுடன் மோதி வருகிறது.
சுமார் 7 மாதங்களாக நடத்தப்பட்டு வரும் ரஷியாவின் தொடர் தாக்குதல்களால் உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் உருக்குலைந்து காட்சியளிக்கின்றன. மக்கள் வாழும் நிலை பல நகரங்கள் இழந்துவிட்டன.

உருக்குலைந்த உக்ரைன்
பல லட்சக்கணக்கான மக்கள் உக்ரைனைவிட்டு அகதிகளாக வேறு நாடுகளுக்கு தப்பிச்சென்றுள்ளனர். உக்ரைனுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் ரஷியாவுக்கு எதிராக ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.. இருப்பினும் ரஷியாவும் தனது முடிவிலிருந்து பின்வாங்காமல் தாக்குதலை தொடர்கிறது.

4 மாகாணங்கள்
7 மாதங்கள் தொடர் தாக்குதல்களை நடத்திய பிறகும் உக்ரைனை முழுமையாக ரஷ்யாவால் கைப்பற்ற முடியவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியால் உக்ரைன் இன்னும் தாக்குபிடித்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைனில் இருக்கும் டொனெட்ஸ், லுஹான்ஸ், கெர்சன், ஜபொரிஸ்யா ஆகிய 4 மாகாணங்களை ரஷ்யாவில் இணைக்க முடிவு செய்த விளாதிமிர் புதின் இதற்காக வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்தார்.

ஐநா கண்டனம்
ரஷ்யாவின் இந்த முடிவுக்கு ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து கூறிய அவர், "ஒரு நாடு பிற நாட்டை அச்சுறுத்தியோ அல்லது தங்களின் பலத்தை பயன்படுத்தியோ தங்களோடு இணைத்துக்கொள்வது சர்வதேச சட்டத்தை மீறுவதாகும். இதனை மக்களின் விருப்பமாக ஏற்க முடியாது." என்று தெரிவித்துள்ளார்.

கண்டன தீர்மானம்
இந்த நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது ரஷியாவின் இந்த முடிவுக்கு எதிராக அமெரிக்கா, அல்பேனியா ஆகிய நாடுகள் கண்டன தீர்மானம் கொண்டு வந்தன. ரஷியா தனது படைகளை வாபஸ் பெற வேண்டும் என்றும், உக்ரைன் எல்லையில் ரஷியா செய்த மாற்றங்களை நிராகரிக்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு ரஷியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்தியா புறக்கணிப்பு
நேற்று இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், அமெரிக்கா, அல்பேனியாவின் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து 10 நாடுகள் வாக்களித்தன. இந்த வாக்கெடுப்பில் இந்தியா, சீனா, பிரேசில், கபான் ஆகிய நாடுகள் விலகுவதாக அறிவித்தன. உக்ரைனில் நடந்துவரும் சம்பவங்கள் வருத்தம் தருவதாகவும், உயிர்களை எடுப்பது எதற்கும் தீர்வு கிடையாது என்றும் இந்தியா தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications