வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

5 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் உட்பட 1.1 கோடி பேருக்கு யு.எஸ். குடியுரிமை வழங்குவார் ஜோ பிடன்?

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: 5 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் உட்பட 1.1 கோடி பேருக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கும் திட்டத்தை புதிய அதிபராக தேர்வாகி உள்ள ஜோ பிடன் செயல்படுத்தக் கூடும் என கூறப்படுகிறது.

அமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி வகித்த காலத்தில் குடியேற்ற விதிகள், விசா உள்ளிட்டவைகளில் கடுமை காட்டினார். ஈரான், சிரியா நாட்டு முஸ்லிம்கள் அமெரிக்காவில் குடியேற தடை விதித்தார்.

Joe Biden to Provide US Citizenship to Over 5 Lakh Indians?

அகதிகளின் குடும்பங்களைப் பிரிக்கின்றன மனித உரிமை மீறல்களை மேற்கொண்டார். இவை அனைத்தையும் கடுமையாக எதிர்ப்பதாக தேர்தல் பிரசாரத்தில் ஜோ பிடன் தெரிவித்திருந்தார். இதனால் ஜோ பிடனுக்கு அமெரிக்கர் அல்லாத பிற நாட்டவர் ஆதரவு அதிகமாக இருந்தது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் தேர்வாகி உள்ளார் ஜோ பிடன். அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய முதல் உரையிலேயே தமது ஆட்சிக் காலம் எப்படியானதாக நெகிழ்வுத் தன்மை கொண்டதாக இருக்கும் என சுட்டிக்காட்டியிருந்தார்.

இதுதான் ஒரு நல்ல தலைவனுக்கு அழகு.. மக்களை கவர்ந்த ஜோ பிடனின் மாஸ் பேச்சு! இதுதான் ஒரு நல்ல தலைவனுக்கு அழகு.. மக்களை கவர்ந்த ஜோ பிடனின் மாஸ் பேச்சு!

இதனிடையே ஜோ பிடன் அதிபராகப் பதவியேற்ற பின்னர் 5 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் உட்பட 1.1 கோடி பேருக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தக் கூடும் என கூறப்படுகிறது. அத்துடன் பிற நாட்டவர் குடியேற டிரம்ப் விதித்திருந்த பல்வேறு கட்டுப்பாடுகளில் ஜோ பிடன் தளர்வுகளைக் கொண்டுவரக் கூடும் என்கிற எதிர்பார்ப்ப்பும் நிலவுகிறது.

English summary
Joe Biden likely to Provide US Citizenship to Over 5 Lakh Indians.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X