எல்லா நாளும் இல்லை..வார இறுதி நாட்களில் இப்படித்தான்..நெட்டிசன்களை ரசிக்க வைத்த ஆனந்த் மகிந்திரா
வாஷிங்டன்: எல்லா நாளும் இல்லை.. வார இறுதி நாட்களில் இப்படித்தான் என்ற கேப்ஷனுடன் நாய் ஒன்று தூக்கத்தில் இருந்து எழும் வீடியோவை வெளியிட்டு பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா ட்விட் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவின் பிரபல தொழில் அதிபர்களில் ஒருவரான ஆனந்த் மகிந்திரா ட்விட்டரில் படு ஆக்டிவாக இருக்கக் கூடியவர்.
மகிந்திரா குழுமங்களின் தலைவராக இருக்கும் இவரது ட்விட்களுக்கே தனி ரசிகர் பட்டாளம் இணையத்தில் இருக்கிறது. அந்த அளவுக்கு ஆனந்த் மகிந்திராவின் ட்விகள் இணையத்தில் பிரபலம்.

ஆனந்த் மகிந்திரா ட்விட்கள்
சுமார் 10 மில்லியனுக்கும் மேற்பட்ட பாலோயர்களை கொண்டுள்ள ஆனந்த் மகிந்திரா, தனது ட்விட் பக்கத்தில் தனக்கு கிடைக்கும் சுவாரசியமான தகவல்கள், துணுக்குகள், தன்னம்பிக்கையூட்டும் நபர்களின் கதைகள், வீடியோக்களை அடிக்கடி வெளியிடுவார். இந்த வீடியோக்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஹிட் அடித்து வரும் என்று கூட சொல்லலாம். சமீபத்தில் கூட இமாச்சல பிரதேச தேர்தலில் தேர்தல் அதிகாரிகளின் அளப்பரிய பணியை பாராட்டும் வகையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படமும் இணையத்தில் வேகமாக பரவி இருந்தது.

படுக்கையில் இருந்து எழும் நாய்
இந்த நிலையில், வார இறுதி நாளான இணையத்தில் தற்போது பரவி வரும் வீடியோ ஒன்றை பகிர்ந்து தனது ட்விட் பக்கத்தில் ஆன்ந்த மகிந்திரா பதிவிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் நாய் ஒன்று படுக்கையில் இருந்து மிகவும் கஷ்டப்பட்டு எழுந்து இருக்கவே மனம் இல்லாமல் எழுகிறது. இந்த வீடியோவுக்கு கேப்ஷனாக "ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து இருக்க முயற்சிக்கும் போது இப்படித்தான் நடக்கும்" என்று பதிவிட்டு இருந்தார்.

வார இறுதி நாட்களில்..
இந்த வீடியோவை பகிர்ந்து இருக்கும் ஆனந்த் மகிந்திரா... "எல்லா நாளும் கிடையாது.. ஆனால், வார இறுதி நாட்களில் நிச்சயமாக இதைப்போலத்தான் இருக்கும்" என்று பதிவிட்டு இருக்கிறார். ஆனந்த் மகிந்திரா இந்த வீடியோவை பகிர்ந்து சில மணி நேரங்களில் ஆயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர். நெட்டிசன்கள் பலரும் தொடர்ந்து தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சாதாரண நபர்கள்தான் இப்படி இருப்பார்கள்
ஆனந்த் மகிந்திராவின் இந்த பதிவும் இணையத்தில் பலராலும் ரசிக்கப்பட்டு இருந்தது. மற்றொரு நெட்டிசன் கூறுகையில், சாதாரண நபர்கள்தான் இப்படி இருப்பார்கள் என்று நான் நினைத்தேன். ஆனால், இந்த பூமியில் உள்ள அனைவரும் இப்படித்தான் என்று இப்போதுதான் உணர்கிறேன்" என்று பதிவிட்டு இருக்கிறார்.

பூமியில் உள்ள அனைவரும்..
நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "வார இறுதி நாட்களில் ஏன் படுக்கையை விட்டு எழுந்து இருக்க வேண்டும்" என்று பதிவிட்டு இருக்கிறார். அதுபோல மற்றொரு நெட்டிசன் கூறுகையில், இதுபோன்ற ஸ்ட்ரெட்சிங் செய்வது முதுகெலும்புக்கு நல்லது என்று பதிவிட்டு இருக்கிறார். மற்றொரு நெட்டிசன் கூறுகையில், சாதாரண நபர்கள்தான் இப்படி இருப்பார்கள் என்று நான் நினைத்தேன். ஆனால், இந்த பூமியில் உள்ள அனைவரும் இப்படித்தான் என்று இப்போதுதான் உணர்கிறேன்" என்று பதிவிட்டு இருக்கிறார்.

அருமையான புகைப்படம்
அதேபோல் நேற்று காலை ஆனந்த் மகிந்திரா தனது ட்விட் பதிவில், "அதிகாலையில் கடல் பகுதிக்கு மேலே பறவைகள் பறந்து செல்லும் அழகான காட்சிகளை பகிர்ந்து இருந்தார். இந்த பதிவோடு அருமையான புகைப்படம்" என்று கூறியிருந்தார். ஆனந்த் மகிந்திராவின் இந்த பதிவும் இணையத்தில் பலராலும் ரசிக்கப்பட்டு இருந்தது. அதேபோல் நேற்று காலை ஆனந்த் மகிந்திரா தனது ட்விட் பதிவில், அதிகாலையில் கடல் பகுதிக்கு மேலே பறவைகள் பறந்து செல்லும் அழகான காட்சிகளை பகிர்ந்து இருந்தார். இந்த பதிவோடு அருமையான புகைப்படம்" என்று கூறியிருந்தார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications