வயதான நோயாளிகளை மகிழ்விக்க இப்படியா?.. எல்லை மீறிய நர்சிங் ஹோம்.. தீயாக பரவும் வீடியோ
வாஷிங்டன்: தைவானில் உள்ள நர்சிங் ஹோம் ஒன்றில் அங்கு கவனிக்கப்பட்டு வரும் வயதான முதியவர்களை மகிழ்விப்பதற்காக ஆபாச நடனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தைவான் நாட்டின் வடமேற்கு பகுதியில் தையுன் என்ற நகரம் உள்ளது. இந்த நகரத்தில் அந்த நாட்டின் அரசால் நர்சிங் ஹோம் ஒன்று நடத்தப்பட்டு வருகிறது.
ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்காக இந்த நர்சிங் ஹோம் செயல்பட்டு வருகிறது. நர்சிங் ஹோமில் தங்கியிருக்கும் முதியவர்களை உற்சாகப்படுத்த பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் அவர்களுக்குள் சிறு.. சிறுபோட்டிகளும் நடத்தப்படுவதும் வழக்கம் என்று சொல்லப்படுகிறது.

அறுவடை பண்டிகை
நர்சிங் ஹோமிலேயே இருப்பதால் மன உளைச்சலில் இருந்து மீள இத்தகைய வசதிகளை நர்சிங் ஹோம் செய்து கொடுக்கிறது. அதிலும் குறிப்பாக இலையுதிர்காலத்தின் நடுவே அந்த நாட்டில் அறுவடை பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை சமயத்தில் நர்சிங் ஹோமில் சிறப்பு கொண்டாட்டங்களும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும் என கூறப்படுகிறது. ஆனால், கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தைவானில் கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது.

களைகட்டும் கொண்டாட்டங்கள்
இதனால், பெரிய அளவில் கொண்டாட்டங்கள் நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை. தைவான் அரசின் இந்த கட்டுப்பாட்டு காரணமாக நர்சிங் ஹோமிலும் எந்த நிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை. தற்போது கொரோனா பரவல் உலகம் முழுவதும் குறைந்துவிட்டதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதேபோல் தைவானிலும் பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தபட்டன. இதனால் பண்டிகை கொண்டாட்டங்கள் களை கட்டி வருகின்றன.

ஆபாச நடனம்
இந்த நிலையில், தையுன் என்ற நகரத்தில் உள்ள நர்சிங் ஹோமில் உள்ள முதியவர்களை மகிழ்விக்கும் வகையில் ஆபாச நடனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் அரைகுறை ஆடையும் பெண் ஒருவர் ஆபாச நடன அசைவுகளுடன் முதியவர்கள் முன் ஆடுகிறார். இதை ரசித்து பார்க்கு அங்குள்ள முதியவர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்கின்றனர்.

வருத்தம் தெரிவித்த நர்ஷிங் ஹோம்
வீல் சேரில் இருந்த படி முதியவர்கள் ஆரவாரம் செய்யும் காட்சிகளும், அப்பெண் ஆபாசமாக ஆடுவது போன்ற காட்சிகளும் முகம் சுழிக்கும் வகையில் இருந்தது. இதனால் இந்த வீடியோவுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதையடுத்து, நர்சிங் ஹோம் மன்னிப்பு கோரியுள்ளது. மேலும், நர்சிங் ஹோமில் உள்ள முதியவர்களை மகிழ்விக்கும் நோக்கத்துடன் மட்டுமே இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் இந்த குற்றத்திற்காக மிகுந்த வருத்தம் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications