டேக் ஆப் செய்யும் போது 'டிரக்' மீது மோதி விபத்து.. தீப்பிடித்த விமானம்.. பதறிய பயணிகள்! 2 பேர் பலி
வாஷிங்டன்: பெரு தலைநகர் லிமா நகரில் விமானம் டேக் ஆப் செய்யும் போது ஓடுபாதையில் நிறுத்தப்பட்டு இருந்த தீ அணைப்பு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதோடு விமானமும் தீப்பிடித்ததால் கரும்புகை கிளம்பியதால் விமான நிலையத்தில் பெரும் பீதியும் பரபரப்பும் ஏற்பட்டது. இந்த விபத்தில் தீ அணைப்பு வீரர்கள் 2 பேர் பலியாகினர்.
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று பெருவின் பெரு தலைநகர் லிமாவில் இருந்து ஜூலைகா நகருக்கு LATAM Peru என்ற நிறுவனத்திற்கு சொந்தமான எல்.ஏ 2213 என்ற விமானம் புறப்பட தயாராக இருந்தது.
விமானத்தில் 102 பயணிகளும் 6 விமான சிப்பந்திகளும் இருந்தனர். விமானம் புறப்படுவதற்கு தயாராக டேக் ஆப் செய்ய ஓடுபாதையில் சீறிப்பாயத் தொடங்கியது.

டிரக் மீது மோதிய விமானம்
அப்போது அவசரகால தேவைக்காக ஓடுபாதை பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த டிரக் மீது விமானம் மோதியது. இந்த விபத்தில் ஒரு நிமிடம் குலுங்கிய விமானம் தொடர்ந்து ஓடுபாதையில் தீப்பிளம்புகளை கிளப்பிய படி சிறிது தூரம் சென்றது. கரும்புகையும் வெளியேறியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகளும் அச்சத்தில் உறைந்தனர். சினிமா காட்சிகள் போல நடைபெற்ற இந்த சம்பவம் விமான நிலைய ஊழியர்களையும் பதற வைத்தது.

தீ அணைப்பு வீரர்கள் இருவர் பலி
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டவில்லை. எனினும் தீ அணைப்பு வாகனத்தில் இருந்த இரண்டு தீ அணைப்பு வீரர்கள் பலியாகினர். இந்த விபத்து தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உரிய நேரத்தில் விமானம் நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக சமூகவலைத்தளத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

சுகாதாரத்துறை விளக்கம்
இந்த விபத்தை அடுத்து விமான நிலையத்தின் அனைத்து செயல்பாடுகளும் உடனடியாக நிறுத்தப்பட்டது. இந்த விபத்து நேரிட்டதற்கான காரணம் குறித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பெருநாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

61 பயணிகள் ஆஸ்பத்திரியில் அனுமதி
20 பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இருவரின் உடல் நிலை மட்டும் சற்று அச்சப்படும் படி இருக்கிறது. பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகள் யாரும் பலியாகவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 61 பயணிகள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது.

காயம் காரணமாக அனுமதியா?
எனினும் காயம் காரணமாக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்களா.. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்களா என்ற விவரங்கள் வெளியாகவில்லை. டேக் ஆப் செய்வதற்காக ஓடுபாதையில் சென்றுகொண்டிருந்த போது டிரக் மீது மோதி விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications