'இருளில் ஒளிரும் வியாழன்'.. படம்பிடித்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி...மனிதன் வாழ சான்ஸ் இருக்கா?
வாஷிங்டன்: நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வியாழன் கிரகத்தின் சமீபத்திய புகைப்படத்தை அனுப்பியுள்ளது. இதை வைத்து வியாழனில் மனிதர்கள் வாழும் சூழ்நிலை உள்ளதா என விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி மையங்களுடன் இணைந்து அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா, விண்வெளியை ஆய்வு செய்வதற்காக ஜேம்ஸ் வெப் என்ற தொலைநோக்கி ஒன்றை உருவாக்கியுள்ளது.
இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் பெயருக்கு ஒரு காரணம் உண்டு. முதல்முறையாக மனிதனை நிலவுக்கு அனுப்பும் அமெரிக்காவின் அப்பல்லோ திட்டத்தை முன்னின்று நடத்தியவர் ஜேம்ஸ் வெப். எனவே அவரின் பெயர் தான் இந்த தொலைநோக்கி திட்டத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி
இந்த 'ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கியானது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரஞ்ச் கயானாவில் இருந்து 5 ராக்கெட்டுகள் உதவியுடன் விண்ணில் ஏவப்பட்டது. இந்த தொலைநோக்கி சூரியனை சுற்றிய புவி வட்டப்பாதையில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 7 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 7 ஆயிரத்து 950 கோடி) செலவிலும், 20 ஆண்டுகள் கடுமையான உழைப்புக்கும் பிறகு இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி உருவாக்கப்பட்டது. மிக நவீன அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட இந்த தொலைநோக்கி படம்பிடித்த பிரபஞ்சத்தின் துவக்க காலங்கள் குறித்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.

வியாழன் கோள்
மிக நவீன அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அண்மையில் பிரபஞ்சத்தின் துவக்க கால படங்களை வெளியிட்டு இணைய உலகை பிரம்மிக்க வைத்திருந்தது. ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி எடுக்கும் படங்களை வைத்து பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்த ஆராய்ச்சில் விஞ்ஞானிகள் மூழ்கியுள்ள நிலையில், இந்த வாரம் சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோள்களில் ஒன்றான வியாழனை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்துள்ளது. அகச்சிவப்பு தொழில்நுட்ப கேமார மூலம் எடுக்கப்பட்ட ரா இமேஜை நாசா விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

இருளில் ஒளிரும்
கருப்பு மற்றும் வெள்ளை படமாக வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் சூரிய குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய கிரகமான வியாழன் இருளில் ஒளிரும் என்பதைக் காட்டும் வகையில் உள்ளது. வியாழனின் வளிமண்டலம் மற்றும் அதை சுற்றி நடைபெறும் அறிவியல் மாற்றங்கள் பற்றிய ஆய்வில் விஞ்ஞானிகள் குழு ஈடுபட்டுள்ளது. நிலவு அமைப்பைக் கொண்ட வியாழனில் மனிதர்கள் உயிர்வாழ்வதற்கான சாத்தியகூறுகளை கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கையும் விஞ்ஞானிகள் மத்தியில் உள்ளது. வியாழன் கிரகத்தின் வெப்பநிலை எப்படி உள்ளது, காற்று, பொழுதுகள் மற்றும் பிற தனித்துவமான நிகழ்வுகளை கண்டறிய இந்த தொலைநோக்கி பயன்படுத்தப்படுகிறதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video

முதல் முறை அல்ல
வியாழன் கிரகத்தை தொலைநோக்கி படம் பிடிப்பது இது முதல் முறை அல்ல. சோதனை முயற்சியாக ஏற்கனவே வியாழன் கிரகத்தை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்து உள்ளது.15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தொலைநோக்கி, கிரகத்தைச் சுற்றியிருக்கும் தனித்துவமான வளையங்களையும், வியாழன் கிரகத்தில் வீசும் பெரும்புயல் அதாவது பூமியை விழுங்கும் அளவுக்குப் பெரிய புயலயும் பிடித்துள்ளது. அகச்சிவப்புப் படம் என்பதால் இந்த படத்தில் அது வெண்மையாக தெரிகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications