Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியா மீது பயங்கர கோபத்தில் டிரம்ப்? ஒரே ஒரு டீலால் மாறும் உலக அரசியல்! என்ன நடக்கிறது?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் சூழலில், இது அமெரிக்காவைக் கடுமையாக ஆத்திரப்படுத்தியதாகவே தெரிகிறது. டிரம்ப் நிர்வாகத்தில் இருக்கும் ஸ்காட் பெஸ்ஸென்ட் இது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் செயல்பாடுகளை விமர்சிக்கும் வகையில் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தக டீல் பல காரணங்களால் தாமதமாகி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்கும்போது ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக டீலை இந்தியா முடித்துள்ளது. இன்றைய தினம் இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்தாக இருக்கிறது.

Trump Team Warns EU India Deal Funds War Against Itself Why US is not happy over India EU deal

அமெரிக்கா அதிருப்தி

இருப்பினும், இந்த ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதாகத் தெரியவில்லை. டிரம்ப் தரப்பு இது தொடர்பாக வெளிப்படையாகவே தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியம் தனக்கு எதிரான போருக்கு தானே நிதியளிப்பது போன்றது டிரம்ப் தரப்பு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

உக்ரைன் ரஷ்யா மோதல் தொடரும் நிலையில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதாகச் சொல்லியே இந்தியா மீது அமெரிக்கா வரிகளை விதித்திருந்தது. எனவே, இந்தியா உடன் ஐரோப்பிய ஒன்றியம் டீல் போடுவது தனக்கு எதிரான போருக்குத் தானே நிதியளிப்பது போல என வித்தியாசமான ஒரு விளக்கத்தை டிரம்ப் தரப்பு கூறியுள்ளது.

டிரம்ப் நிர்வாகம்

உக்ரைன் மோதலுக்குப் பிறகு ரஷ்யாவிடம் இருந்து நேரடியாக எரிசக்தியை வாங்குவதை ஐரோப்பிய ஒன்றியும் குறைத்திருந்தாலும், இந்தியாவில் சுத்திகரிக்கப்படும் ரஷ்ய எண்ணெய் பொருட்களை வாங்குவதன் மூலம் மறைமுகமாக ரஷ்யா-உக்ரைன் போருக்கு நிதியளிப்பதாக அமெரிக்கக் கருவூல துறை அமைச்சர் ஸ்காட் பெஸ்ஸென்ட் கூறியுள்ளார்.

உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா அதிக தியாகம் செய்யும் நிலையில், நட்பு நாடுகள் அதைச் செய்யத் தவறுவதாகவும் அவர் தெரிவித்தார். ரஷ்யாவின் எரிசக்தி வர்த்தகத்தைச் சீர்குலைக்க அமெரிக்க முயன்ற போதிலும், உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் இருக்கும் ஓட்டைகளால் அது முழுமையாகவில்லை என்றும் பெஸ்ஸென்ட் வாதிட்டார்.

சரியானது இல்லை

இது தொடர்பாக அமைச்சர் ஸ்காட் பெஸ்ஸென்ட் மேலும் கூறுகையில், "ரஷ்ய எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது நாங்கள் 25% வரி விதித்துள்ளோம். அப்படியிருக்கும்போது ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தம் போட்டுள்ளனர். இந்த இடத்தில் நான் மீண்டும் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திக் கொள்கிறேன். ரஷ்ய எண்ணெய் இந்தியாவிற்குச் செல்கிறது, அங்கிருந்து சுத்திகரிக்கப்பட்ட பொருட்கள் ஐரோப்பாவுக்கு வருகின்றன. ஐரோப்பியர்கள் அவற்றை வாங்குகிறார்கள். அவர்கள் தங்களுக்கு எதிராகவே போருக்கு நிதியளித்துக் கொண்டிருக்கிறார்கள்" என்றார்.

ரஷ்யா உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டு வர டிரம்ப் எடுத்து வரும் முயற்சிகள் குறித்த கேள்விக்கு, அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அது முடிவுக்கு வரும் என்றும் தெரிவித்தார்.

இந்திய ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம்

இந்தியா ஐரோப்பிய ஒன்றியம் இடையே கடந்த 15 ஆண்டுகளாகவே வர்த்தகப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வந்தது. 2007ம் ஆண்டு ஆரம்பித்த இந்த வர்த்தகப் பேச்சுவார்த்தை பல்வேறு காரணங்களால் வர்த்தகப் பேச்சுவார்த்தை இழுபறியில் இருந்தது. இந்தச் சூழலில் தான் இப்போது டீல் இறுதியாகியுள்ளது. இதன் மூலம் இந்தியா- ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான வர்த்தகம் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வர்த்தக ஒப்பந்தத்தால் இரு தரப்பிற்குமே நன்மை கிடைக்கும் என்றே சொல்லப்படுகிறது.!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+