ஐநா சபையில் இந்தி மொழிக்கு புதிய அங்கீகாரம்! எதிர்ப்புக்கு மத்தியில் நடந்தது என்ன? முழுவிபரம்
வாஷிங்டன்: ஐநா பொதுச்சபையில் பன்மொழித்தீர்மானத்தின் அடிப்படையில் இந்தி உள்ளிட்ட 6 மொழிகள் அதிகாரப்பூர்வமற்ற மொழிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் ஐநாவில் இந்தி மொழியின் பயன்பாடு அதிகரிக்க உள்ளது. இந்தியாவில் இந்தி திணிக்கப்படுவதாக தமிழகம் உள்பட தென்மாநிலங்கள் குற்றம்சாட்டிய நிலையில் அந்த மொழிக்கு புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐநா பொதுச்சபை உள்ளது. உலக நாடுகள் இடையே அமைதியை ஏற்படுத்தும் வகையில், மனித உரிமைகள் மீறலை கண்டித்து நடவடிக்கையை செயல்படுத்துவதில் இது முக்கிய பங்கு வகித்து வருகிறது.
இங்கு அனைத்து நாடுகளுக்கும் சம உரிமை வழங்கப்பட்டு வருகிறது. 193 நாடுகள் இந்த சபையில் உள்ளன. இங்கு நிரந்தர உறுப்பினர்களாக அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் உள்ளன.

அதிகாரப்பூர்வ 6 மொழிகள்
இந்த சபையில் ஆங்கிலம், சைனீஸ், பிரெஞ்சு, ரஷ்யன், ஸ்பானிஷ், அரபு என 6 மொழிகள் அதிகாரப்பூர்வ மொழிகளாக உள்ளன. இதனால் ஐநா பொதுச்சபையில் தீர்மானங்கள் உள்பட அனைத்து செயல்பாடுகள் தொடர்பான விபரங்கள் இந்த மொழிகளில் மட்டுமே வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் சபையின் செயல்பாட்டை உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் கொண்டு செல்ல வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

பன்மொழி தீர்மானம்
இதையடுத்து 193 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐநா பொதுச்சபையில் பன்மொழி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தை அன்டோர்ரா, கொலம்பியா நாடுகள் கொண்டு வந்து முன்மொழிந்தன இந்தியா உள்ளிட்ட 80 நாடுகள் வழிமொழிந்தன. இதையடுத்து ஐநாவின் அதிகாரபூர்வ 6 மொழிகளோடு அதிகாரபூர்வமற்ற 6 மொழிகளை சேர்க்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தி உள்ளிட்ட 6 மொழிகள்
இந்த தீர்மானம் மூலம் அதிகாரப்பூர்வமற்ற மொழிகளாகவும், தகவல்களை வெளியிடும் மொழிகளாகவும் போர்த்துகீஷ், பாரசீகம், பங்களா, உருது மற்றும் இந்தி ஆகியவை தேர்வாகின. இதன்மூலம் வரும் நாட்களில் ஐநா பொதுசபை பொதுச்செயலாளர் வெளியிடும் அறிவிப்புகள், முக்கிய தகவல்கள் ஐநா பொதுச்சபையின் அதிகாரப்பூர்வ மொழிகளோடு, இந்தி உள்ளிட்ட அதிகாரப்பூர்வமற்ற மொழிகளிலும் இடம்பெற உள்ளது. மேலும் இதுபோன்று கூடுதலாக மொழிகளை இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தியா வரவேற்பு
இதனை ஐநாவுக்கான இந்திய தூதரும் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியுமான டிஎஸ் திருமூர்த்தி வரவேற்றுள்ளார். இதுபற்றி அவர் ஐநா பொதுச்சபையில் நன்றி தெரிவித்து பேசியதாவது: இந்த ஆண்டு முதன்முறையாக தீர்மானத்தில் இந்தி மொழி குறிப்பிடப்பட்டுள்ளது. பங்களா, உருது மொழிகளும் சேர்க்கப்பப்பட்டுள்ளது. இதனை நாங்கள் வரவேற்கிறோம்.

உலகின் பல பகுதிகளுக்கு...
ஐநா பொதுச்சபையில் செயல்பாட்டை பல மொழிகளில் கொண்டு செல்ல வேண்டும் என முடிவெடுத்த பொதுச்செயலாளருக்கு நன்றி. மேலும் 1946 பிப்ரவரி 1ல் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் முதல் அமர்வில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதாவது ஐநா உலக மக்களுக்கு அதன் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து முழுமையாக தெரிவிக்கப்படாவிட்டால் ஐக்கிய நாடுகள் சபையால் அதன் நோக்கங்களை அடைய முடியாது. தற்போதைய பன்மொழி தீர்மான நடவடிக்கையில் ஐநாவின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் எளிமையாக உலகின் பல பகுதிகளை சென்றடையும்'' என்றார்.

8 லட்சம் அமெரிக்க டாலர்
முன்னதாக கடந்த 2018 ம் ஆண்டில் இருந்து ஐநாவின் டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டகிராம் பக்கங்களில் இந்தி மொழியில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இருப்பினும் ஐநா பொதுச்சபையில் இந்தி மொழியின் பயன்பாட்டை தொடர்ந்து அதிகரிக்க இந்தியா சார்பில் நடவடிக்கை எடுத்து வரப்பட்டது. கடந்த மாதம் இந்தியா சார்பில் இந்தி மொழி பயன்பாட்டுக்கு 8,00,000 அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்ட நிலையில் தற்போது இந்தி மொழிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

எதிர்ப்புக்கு மத்தியில் புதிய அங்கீகாரம்
இந்தியாவில் இந்தி பேசாத மாநிலங்களில் மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக சமீபத்தில் பெரும் சர்ச்சைகள் எழுந்தன. இதுதொடர்பாக பாஜகவினர் மற்றும் எதிர்க்கட்சியினர் இடையே வார்த்தைப்போர் வெடித்தது. இந்நிலையில் தான் இந்தி மொழிக்கு ஐநாவின் பொதுச்சபையில் புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications