கிரீன்லாந்தில் ராணுவத்தை இறக்கும் டிரம்ப்.. வெனிசுலா முடிந்த கையோடு அடுத்த ஆபரேஷன் ரெடி? பகீர்
வாஷிங்டன்: வெனிசுலா நாட்டில் அமெரிக்க படைகள் இறங்கியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்த சூழலில், அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் இதோடு முடியாது என்றே தெரிகிறது. டிரம்ப் தரப்பு அடுத்தகட்டமாக கிரீன்லாந்து நாட்டிற்கும் ராணுவத்தை அனுப்ப ரெடியாகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவின்படி அந்நாட்டின் படைகள் கடந்த வாரம் வெனிசுலா மீது தாக்குதலை நடத்தியது. கடந்த சனிக்கிழமை வெனிசுலா மீது தாக்குதலை நடத்திய அமெரிக்கப் படைகள், அந்நாட்டின் அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவியைக் கைது செய்து நாடு கடத்தியது. இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

டிரம்ப்
போர் கூடாது என உலக நாடுகளுக்குப் பாடம் எடுக்கும் டிரம்ப் இதுபோல உத்தரவிட்டது தவறானது என்ற விமர்சனங்களும் கடுமையாக எழுந்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க வெனிசுலாவைப் போலவே டிரம்ப் கிரீன்லாந்திற்கும் கூட ராணுவத்தை அனுப்பலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான தகவல் வெள்ளை மாளிகையில் இருந்து வந்துள்ளது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்து தங்களுக்குத் தேவை என்று பல காலமாகவே சொல்லி வருகிறார். அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே அமைந்துள்ள முக்கியமான நிலப்பரப்பாக இருப்பதால் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து முக்கியமானதாக இருக்கும் என டிரம்ப் கருதுகிறார். இதன் காரணமாகவே பல ஆண்டுகளாக இது தொடர்பாகப் பேசி வருகிறார்.
காரணம் என்ன
ஆர்க்டிக் பகுதியில் அமைந்துள்ள கிரீன்லாந்தைத் தனது கண்ட்ரோலில் கொண்டு வர டிரம்ப் தரப்பு பல்வேறு ஆப்ஷன்கள் குறித்து தீவிரமாகப் பரிசீலிப்பதாக வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்க ராணுவத்தைப் பயன்படுத்துவதும் கூட ஒரு ஆப்ஷனாகவே இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆர்க்டிக் பகுதியில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் போட்டியைக் காரணமாக எப்படியாவது கிரீன்லாந்தை அமெரிக்கா கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்பதில் டிரம்ப் எந்தளவுக்கு உறுதியாக இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது.
சுமார் 57,000 மக்கள் தொகை கொண்ட கிரீன்லாந்து, டென்மார்க் நாட்டின் கீழ் இருக்கும் ஒரு தன்னாட்சி கொண்ட பிரதேசமாகும். அமெரிக்காவுடன் இணைக்கும் யோசனையை கிரீன்லாந்து மக்கள் தொடர்ந்து நிராகரித்தே வருகிறார்கள். அந்தத் தீவு விற்பனைக்கு இல்லை என்று டென்மார்க்கும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஆனால், டிரம்ப் தனது முடிவில் பிடிவாதமாகவே இருக்கிறார்.
டென்மார்க்
இது சர்ச்சையாக மாறியுள்ள நிலையில், இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் மீட்டிங்கிற்கு டென்மார்க் முயன்று வருகிறது. இது தொடர்பாக டென்மார்க் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் மோட்ஸ்ஃபீல்ட் தனது சோஷியல் மீடியாவில், "கிரீன்லாந்து பற்றி அமெரிக்கா சொல்வதை ஏற்க முடியாது. அது குறித்து விவாதிக்க ரூபியோவுடன் மீட்டிங்கிற்கு முயன்று வருகிறோம். கடந்தாண்டே இதற்கான முயற்சிகளை ஆரம்பித்துவிட்டோம். இருப்பினும், இதுவரை மீட்டிங்கிற்கு தேதி ஒதுக்கவில்லை" என்றார்.
இரண்டு முக்கியமான வழி
கிரீன்லாந்தைக் கையகப்படுத்துவது குறித்து டிரம்பும் அவருடைய ஆலோசகர்களும் பல வழிகளை ஆராய்வதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது. வெள்ளி மாளிகை தரப்பு இது தொடர்பாகக் கூறுகையில், "இது தொடர்பாக அதிபரும் அவரது குழுவும் பல ஆப்ஷன்களை விவாதிக்கின்றனர். அமெரிக்க ராணுவத்தைப் பயன்படுத்துவதும் ஒரு சிறந்த வழிதான். அதை நிராகரிப்பதற்கு இல்லை" என்றார்.
கிரீன்லாந்தை நேரடியாக அமெரிக்கா வாங்குவது அல்லது அத்துடன் சுதந்திர சங்கம் (Compact of Free Association - COFA) அமைப்பது போன்ற திட்டங்களும் இதில் அடங்கும். இந்த COFA ஒப்பந்தம் போட்டால் அமெரிக்காவின் ஒரு பகுதியாக கிரீன்லாந்து மாற்றாது என்றாலும், பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை விஷயங்களில் அமெரிக்காவுக்குக் குறிப்பிடத்தக்கச் செல்வாக்கு கிடைக்கும்.
விட மாட்டார்
கிரீன்லாந்தை வாங்கும் டிரம்ப்பின் முடிவுக்கு நேட்டோ தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும், டிரம்ப்பின் ஆர்வம் குறையவில்லை என்று வெள்ளை மாளிகை அதிகாரி கூறினார். டிரம்ப் பதவிக்காலம் 3 ஆண்டுகள் இருக்கும் நிலையில், கடைசி வரை இதை முயல்வார் என்றும் அந்த அதிகாரி கூறினார்.
ஆர்க்டிக் பிராந்தியத்தில் ரஷ்யாவும் சீனாவும் தங்கள் இருப்பை அதிகரித்து வரும் நிலையில், கிரீன்லாந்தை முக்கியமான நிலப்பரப்பாக டிரம்ப் கருதுகிறார். கிரீன்லாந்தின் அமெரிக்கா வசம் வந்துவிட்டால் ஆர்க்டிக் பிராந்தியத்தில் உள்ள எதிரிகளைத் தடுப்பது ஈஸியாகும் என டிரம்ப்பின் அதிகாரிகள் சொல்கிறார்கள். இந்த நேரத்தில் ராணுவ செயல்பாடு குறித்தும் அவர்கள் பேசியுள்ளது முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது.
-
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications