Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெனிசுலா குடுமி இனி டிரம்ப் கையில்.! கச்சா எண்ணெய்யை முழுமையாக கண்ட்ரோலில் எடுக்கும் அமெரிக்கா

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: வெனிசுலாவின் கச்சா எண்ணெய்யைச் சர்வதேச சந்தையில் விற்கத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மேலும், எதிர்காலத்தில் வெனிசுலா கச்சா எண்ணெய் விற்பனையை அமெரிக்காவே கட்டுப்படுத்தும் என்றும் டிரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது. இது தொடர்பாக டிரம்ப் நிர்வாகம் சில விரிவான தகவல்களையும் பகிர்ந்துள்ளது.

வெனிசுலாவைத் தாக்கி அந்நாட்டு அதிபர் மதுரோவை கடந்த வாரம் அமெரிக்கா நாடுகடத்தியிருந்தது. இருப்பினும், வெனிசுலா கச்சா எண்ணெய் விவகாரத்தில் இதுவரை தெளிவற்ற ஒரு சூழலே நிலவி வந்தது. இதற்கிடையே இது தொடர்பாக இப்போது அமெரிக்கா தெளிவான ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளது.

US Declares Indefinite Control Over Venezuela Oil Exports Post-Maduro Capture What it really means

வெனிசுலா கச்சா எண்ணெய்

அதாவது வெனிசுலாவின் எண்ணெய் விற்பனையை எதிர்காலத்தில் அமெரிக்கா தான் கட்டுப்படுத்தும் என்பதை அந்நாட்டின் எரிசக்தித்துறை அமைச்சர் கிறிஸ் ரைட் உறுதி செய்துள்ளார். மேலும், அதன் மூலம் கிடைக்கும் வருவாய் அமெரிக்க வங்கிக் கணக்குகளில் வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். வறுமையில் வாடும் வெனிசுலாவின் கச்சா எண்ணெய்யைச் சந்தைக்குக் கொண்டு வந்து, அதன் மிக மதிப்புமிக்க வளங்களைக் கட்டுப்படுத்த அமெரிக்கா போட்டுள்ள திட்டங்களையே இது காட்டுகிறது. அமெரிக்காவின் மியாமி நகரில் கோல்ட்மேன் சாக்ஸ் குழுமம் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்ட கிறிஸ் ரைட் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

திட்டம் என்ன

அவர் மேலும் கூறுகையில், "முதற்கட்டமாக வெனிசுலா சேமித்து வைத்துள்ள கச்சா எண்ணெய் பயன்படுத்தப்படும். அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் இந்த கச்சா எண்ணெய்யை இவ்வளவு காலம் அவர்களால் விற்க முடியவில்லை. இந்தக் கச்சா எண்ணெய் சேமிப்பு நிரம்பி, உற்பத்திப் பணிகள் சில நிறுத்தப்படும் சூழல் கூட ஏற்பட்டு இருந்தது. முதலில் இந்தக் கச்சா எண்ணெய்யைச் சந்தைக்குக் கொண்டு வந்து, விற்பனை செய்ய உள்ளோம்

வெனிசுலாவிலிருந்து வரும் கச்சா எண்ணெய்யை நாங்கள் சந்தைப்படுத்துவோம்.. முதலில் இந்தச் சேமிக்கப்பட்ட எண்ணெய்யை விற்போம். எதிர்காலத்திலும் எப்போதும் வெனிசுலாவில் கிடைக்கும் கச்சா எண்ணெய்யை அமெரிக்காவே விற்பனை செய்யும்" என்றார்.

வெனிசுலா

உலகில் அதிக எண்ணெய் வளமிக்க நாடுகளில் ஒன்றாக இருக்கும் வெனிசுலாவின் கச்சா எண்ணெய் செட்அப், கடந்த பல ஆண்டுகளாகவே ஊழல் உள்ளிட்ட காரணங்களால் மிக மோசமான நிலையில் இருக்கிறது. சீரழிந்த இந்த எண்ணெய் உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்பவும், அதன் உற்பத்தித் திறனைப் புதுப்பிக்கவும் அமெரிக்கக் கச்சா எண்ணெய் நிறுவனங்களை டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக வெனிசுலாவின் எண்ணெய் துறையின் மீதான தடைகளையும் அமெரிக்க படிப்படியாகத் தளர்த்தி வருகிறது.

சமீபத்தில் தான் டிரம்ப் கூட வெனிசுலாவில் இருந்து 50 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய்யை விற்கவுள்ளதாக டிரம்ப் கூறினார். இதன் மதிப்பு சுமார் $2.8 பில்லியன் ஆகும். இதன் மூலம் கிடைக்கும் வருவாய் அமெரிக்க டிரஷரி கணக்குகளில் வரவு வைக்கப்படுமாம். வெனிசுலாவை நம்பி முதலீடு செய்வோருக்குப் பாதுகாப்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும் வகையில் இந்தக் கணக்குகள் பராமரிக்கப்படும் என்றும் இந்த நிதி அமெரிக்க மற்றும் வெனிசுலா மக்களுக்குப் பலனளிக்கும் என்றும் அமெரிக்கா தரப்பில் கூறப்படுகிறது.

அமெரிக்கா கட்டுப்படுத்தும்

அமெரிக்க எரிசக்தி துறை அமைச்சர் ரைட் மேலும் கூறுகையில், "நாங்கள் யாருடைய எண்ணெய்யையும் திருடவில்லை. சர்வதேச சந்தைகளில் வெனிசுலா கச்சா எண்ணெய்யை மீண்டும் விற்பனை செய்யத் தொடங்குவோம். அதை வெனிசுலாவின் பெயரிலேயே வங்கிக் கணக்கில் சேமிப்போம். தேவைப்படும் நேரத்தில் அந்தத் தொகையை வெனிசுலா மக்களுக்குப் பலனளிக்கும் வகையில் அந்நாட்டிற்கே கொண்டு செல்வோம்" என்றார்.

பின்னணி

வெனிசுலாவில் 2000கள் வரையே பல அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. அப்போது அதிபராக இருந்த ஹ்யூகோ சாவேஸால் திடீரென அமெரிக்க நிறுவனங்களின் சொத்துகளை நாட்டுடைமையாக்குவதாக அறிவித்தார். இருப்பினும், அதற்கு எந்தவொரு இழப்பீடும் வழங்கப்படவில்லை. இப்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வெனிசுலா வந்துள்ள நிலையில், அந்த அமெரிக்க நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்கப்படுமா என்று கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பதை ரைட் ஒப்புக்கொண்டாலும் கூட, இது ஒரு "நீண்டகாலப் பிரச்சனை" என்று அவர் குறிப்பிட்டார். வெனிசுலாவின் எண்ணெய் கட்டமைப்பை மீட்டெடுப்பதில் முதலில் கவனம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+