இன்னையோட முடிஞ்சுது! ஈரான் மீது பெரிய தாக்குதல் நடத்த முடிவு? மோசமான நாளாக இருக்கும்! அமெரிக்கா எச்சரிக்கை
வாஷிங்டன்: ஈரான் ராணுவ திறனை குறைப்பதில் அமெரிக்கா வெற்றி பெற்றுள்ளதாகவும், இன்று ஈரான் மீது மீண்டும் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலர் பீடே ஹெக்சேத் கூறியுள்ளார். அமெரிக்கா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பெரிய அளவில் ஈரான் மீது தாக்குதல் நடத்த உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதல் 11-வது நாளை எட்டியுள்ளது. ஈரானும் அமெரிக்காவின் ராணுவ தளங்களை குறிவைத்து பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக வளைகுடாவில் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதுவரை இல்லாத அளவு இருக்கும்
போர் நீடித்து வருவதால் சர்வதேச அளவில் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் இந்த போரின் தாக்கம் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இதனால், ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் எப்போது முடிவுக்கு என்ற எதிர்பார்ப்பு உலக அளவில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆனால் இருநாடுகளும் மாறி மாறி எச்சரிக்கை விடுத்து வருவதால் நிலமை மோசமாகி கொண்டேதான் செல்கிறது.
இதற்கிடையே ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்துள்ளது. அமெரிக்க பாதுகாப்பு செயலர் பீட்டர் ஹெக்சேத் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:- ஈரானுக்குள் இன்று நாம் நடத்தும் தாக்குதல்கள் இதுவரை இல்லாத அளவுக்கு தீவிரமாக இருக்கும்.
ஏவுகணைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது
இன்றும் ஈரானுக்குள் நமது தாக்குதல்கள் மிகவும் தீவிரமான தாக்குதலாக இருக்கும். அதிகளவிலான போர் விமானங்கள், குண்டுவீச்சு விமானங்கள் இடம் பெறும். உளவுத் தகவல் முன்னெப்போதையும் விட மிகவும் துல்லியமானது மற்றும் சிறந்தாக உள்ளது. ஈரான் மீதான போரில் அமெரிக்கா, முடிவெடுக்கும் விதத்தில் வெற்றி பெற்று வருகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்ணயித்த இலக்குகளை அடைந்து வருகிறது. ஈரான், கடந்த 24 மணி நேரத்தில் ஏவிய ஏவுகணைகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது என்பதால், ஈரானின் ராணுவ திறனை, அமெரிக்கா குறிப்பிடத்தக்க அளவில் பாதித்துள்ளது" என்றும் அவர் கூறியுள்ளார்.
-
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
கோதாவில் இறங்கும் இங்கிலாந்து.. 35 நாடுகளை திரட்டி ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு? எகிறும் டென்ஷன் -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
அமெரிக்காவால் ஏன் ஈரான் போரில் ஜெயிக்க முடியவில்லை.. உலகத்தையே முடக்கிய இஸ்ரேலின் தவறு -
கண்கள் சிவந்த டிரம்ப்.. அமெரிக்க ராணுவ தளபதி அதிரடியாக நீக்கம்! ஈரான் போரில் தடுமாறுவது தான் காரணம்? -
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா? -
வளைகுடாவின் மிக பெரிய பாலத்தை தாக்கி அழித்த அமெரிக்கா.. அதிர்ச்சியில் ஈரான்! உச்சக்கட்ட பதற்றம் -
துபாய்க்கு இப்போ தான் உசுரே வந்துருக்கு..ஈரானை முடக்கிய அமெரிக்கா? டிரம்ப் சொன்ன வார்த்தை.. அடுத்து? -
வளைகுடாவில் அமெரிக்காவுக்கு இன்னொரு தலைவலி.. ஈராக்கில் சர்வதேச செய்தியாளர் கடத்தல்.. ஷாக் வீடியோ -
நிலவில் மீண்டும் கால் வைக்கும் மனிதர்கள்.. 53 ஆண்டுக்கு பிறகு மற்றொரு சரித்திரம் படைக்கும் அமெரிக்கா -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
நேட்டோவில் இருந்து விலகும் அமெரிக்கா? உலக நாடுகளுக்கே அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்.. இப்படி ஆகிடுச்சே












Click it and Unblock the Notifications