வெள்ளியின் சாயம் வெளுத்தது!! 2 நாட்களில் தாறுமாறாக சரிந்த விலை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!
ஜனவரி மாதம் முழுவதுமே Talk of the townஆக இருந்தது தங்கம், வெள்ளி விலை தான். ஏழை மக்களின் தங்கம், எதிர்கால தங்கம் என பல்வேறு புனைப்பெயர்களை பெற தொடங்கியது வெள்ளி. இதற்கு முக்கிய காரணம் வெள்ளியின் விலை ஒரு கடந்த ஓராண்டில் பல மடங்கு உயர்ந்துவிட்டது. அதுவும் ஜனவரி ஒன்றாம் தேதி தொடங்கி இந்த மாதத்தில் மட்டும் வெள்ளியின் விலை நினைக்க முடியாத உயரங்களை எல்லாம் ஈட்டியது.
சென்னையில் சில்லறை விற்பனையில் ஜனவரி 1ஆம் தேதி தேதி அன்று ஒரு கிராம் வெள்ளி 256 ரூபாயாக இருந்தது அதாவது ஒரு கிலோ வெள்ளி 2, 56,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் ஒவ்வொரு நாளும் படிப்படியாக உயர்ந்து வந்த வெள்ளியின் விலை ஜனவரி 29ஆம் தேதி அன்று இதுவரை இல்லாத வரலாற்று உச்சமாக ஒரு கிராம் 425 ரூபாயை தொட்டது ஒரு கிலோ வெள்ளி 4,25,000 ரூபாய்க்கு விற்பனையானது. ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து ஜனவரி 29ஆம் தேதி வரையிலான இந்த 29 நாட்களில் மட்டும் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 169 ரூபாயும் ஒரு கிலோவுக்கு 1, 69,000 ரூபாயும் உயர்ந்தது.

சர்வதேச சூழல்களே வெள்ளியின் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் . ஒரு புறம் தங்கத்தின் விலை பல மடங்கு உயர்ந்து இருந்ததால் பெரும்பாலான முதலீட்டாளர்கள் வெள்ளியில் அதிக முதலீடு செய்ய தொடங்கியது, சீனா வெள்ளிக்கான ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்தது மற்றும் தொழில்துறை ரீதியாக வெள்ளிக்கான தேவை அதிகரித்து சப்ளை குறைவாக இருப்பது ஆகிய காரணங்கள் தான் வெள்ளியின் விலை உயர்வுக்கு காரணமாக இருந்தன.
இருந்தாலும் பல்வேறு முதலீட்டு நிபுணர்களும் வெள்ளியின் விலை அபரிவிதமாக உயர்கிறது மக்கள் இதில் முதலீடு செய்யும் முன்பு மிக கவனமாக இருக்க வேண்டும் ஏனெனில் அதிக ஏற்ற இறக்கம் கொண்ட ஒரு உலோகமாக வெள்ளி மாறி வருகிறது என தொடர்ச்சியாக எச்சரித்து வந்தனர். அதாவது வெள்ளியின் விலை எவ்வளவு வேகமாக ஏறுகிறதோ அவ்வளவு வேகமாக சரியும் திறன் கொண்டது ஒரே நாளில் உங்களுடைய மொத்த முதலீட்டையும் இழக்க கூட நேரிடலாம் என தொடர்ச்சியாக எச்சரித்து வந்தனர். அப்படி நிபுணர்களின் எச்சரிக்கை கடந்த இரண்டு நாட்களாக உண்மை என நிரூபணம் ஆகி வருகிறது.
பட்ஜெட்டில் இந்த அறிவிப்பு மட்டும் வந்தா போதும்..!! தங்கம், வெள்ளி விலை மேலும் குறையும்..!!
சென்னையில் ஜனவரி 29ஆம் தேதி அன்று ஒரு கிராம் வெள்ளி 425 என வரலாற்று உச்சபட்ச விலை தொட்டது. அதுவே ஜனவரி 30 ஆம் தேதியான நேற்று ஒரு கிராமுக்கு 20 ரூபாய் சரிந்து 450 ரூபாய் என விற்பனையானது. அதாவது ஒரு கிலோவுக்கு 20000 ரூபாய் விலை குறைந்து 4,05,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதே வெள்ளி இன்றைய தினம் காலை ஒரு கிராமுக்கு 55 ரூபாய் குறைந்து 350 ரூபாய்க்கும் ஒரு கிலோவுக்கு 55 ஆயிரம் ரூபாய் குறைந்து 3,50,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று மாலை நேரத்தில் வெள்ளியின் விலை மீண்டும் குறைக்கப்பட்டு இருக்கிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை தற்போது 320 ரூபாயாக இருக்கிறது. அதாவது இன்று காலை மாலை என இரண்டு வேளையில் மட்டும் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 85 ரூபாய் சரிவடைந்து இருக்கிறது ஒரு கிலோவுக்கு 85,000 ரூபாய் என தடாலடியாக விலை குறைந்திருக்கிறது.
பட்ஜெட் முடிஞ்ச கையோடு அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் சர்ப்பிரைஸ்!!கணக்கு போட்டு ரெடியா இருக்கு!!
நேற்று காலை முதல் தற்போது வரை இந்த இரண்டு நாட்களில் பார்க்கும் போது வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 105 ரூபாயும் ஒரு கிலோவுக்கு 1, 05,000 ரூபாயும் விலை குறைந்திருக்கிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் வெள்ளி விலையில் மாற்றம் இருக்காது. நாளை இந்திய பட்ஜெட் மற்றும் உலக நிகழ்வுகளை பொறுத்து திங்கள்கிழமை வெள்ளியின் விலை ஏறலாம் அல்லது இறங்கலாம்.
Credit: Goodreturns
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications