ஆனது ஆச்சு.. நாளை வரை பொறுத்து பார்த்துட்டு.. பெட்ரோல், டீசல் விலை உயருமா ?
டெல்லி : நாடு முழுவதும் ஏறக்குறைய 2 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றங்களையும் எண்ணெய் நிறுவனங்கள் செய்யவில்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மாற்றம் ஏற்பட்ட போதிலும் விலையை உயர்த்தவோ, குறைக்கவோ இல்லை.
பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதை காரணம் காட்டி, பல அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல தொழில்கள் முடக்கப்பட்டு, பலர் வேலையிழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதும், அதை காரணம் காட்டி மற்ற பொருட்களின் விலை ஏற்றப்படுவது மக்களுக்கு கூடுதல் சுமையாக அமைந்துள்ளது.

முடிவுகள் வெளியானதும் விலை உயர்வு
ஆனால் 2 மாதமாக உயர்த்தப்படாத பெட்ரோல், டீசல் விலை, 4 மாநில மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 2 ம் தேதி வெளியிடப்பட்ட பிறகு, பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2 மாதங்களாக விலையில் மாற்றம் கொண்டு வராமல் இருந்ததால் ஏற்பட்ட இழப்பை சரி செய்வதற்காக விலையை படிப்படியாக உயர்த்த மாநில எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதல் வாரத்திலேயே துவங்கும்
பெட்ரோல், டீசல் விலை குறைந்தபட்சம் லிட்டருக்கு ரூ.2 முதல் 3 வரை உயர்த்த வாய்ப்புள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் விலை 67 டாலர்களை எட்டி உள்ளது. ரூபாயின் மதிப்பும் சரிவடைந்துள்ளது. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்யும் விதமாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த உள்ளன. இந்த புதிய விலை ஏற்றம் மே மாதம் முதல் வாரத்தில் இருந்து துவங்கும் என கூறப்படுகிறது. சர்வதேச சந்தை நெருக்கடிக்கு ஈடுகொடுக்க உயர்த்தப்படும் இந்த விலை ஏற்றத்தை குடிமக்கள் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தேர்தலுக்காக விலையேற்றமில்லை
பிப்ரவரி 27 ம் தேதிக்கு பிறகு நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. அதாவது தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்பிருந்து, இந்த விலை ஏற்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாறாக தேர்தல் நடைபெற்ற காலமான மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் 4 முறை பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. மத்திய மற்றும் மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கும் வரியை தாங்கிக் கொள்ள முடியாதால் விலையை ஏற்றுவதை தவிர வேறு வழியில்லை என்கின்றன எண்ணெய் நிறுவனங்கள்.

கறார் காட்டும் மத்திய, மாநில அரசுகள்
பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என பல கோரிக்கைகள் வந்தாலும், தற்போது அதிகரித்து வரும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக, அது மத்திய, மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதி சுமையாக இருக்கும் என கருதுகின்றன. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் கூட, மாநில எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக் கொண்டே செல்கின்றன.

சர்வதேச சந்தையில் குறைந்தால் உண்டு
ஒருவேளை, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்தால, இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு, இழப்பை விரைவில் சரி செய்ய முடியும் என எண்ணெய் நிறுவனங்கள் நினைக்கின்றன. இந்தியா போன்ற முக்கிய எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில், கொரோனா பரவல், ஊரடங்கு காரணமாக பெட்ரோல், டீசல் தேவை குறையலாம். அப்படி குறைந்தால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு ஏற்படும்.

மே மாதத்தில் விலையேற்றம் உறுதி
எப்படி இருந்தாலும் மே மாதத்தில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரவே அதிக வாய்ப்புள்ளது. ஒருவேளை மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு, புதிதாக ஏதாவது முடிவெடுத்தால், சில காலத்திற்கு இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு தள்ளிப் போடப்படலாம்.

26 முறை உயர்த்தப்பட்ட விலை
2021 ம் ஆண்டு துவங்கியது முதல் இதுவரை 26 முறை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7.46 ம், டீசல் விலை லிட்டரூக்கு ரூ.7.60 ம் உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.90.40 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.80.73 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
ஈரான் போர் எதிரொலி.. மத்திய அரசின் அடுத்த வரி குறைப்பு.. பெட்ரோகெமிக்கல் பொருட்களுக்கு ஜீரோ வரி..! -
விமான எரிபொருள் விலை விண்ணை முட்டியது.. கட்டணம் பல மடங்கு உயர வாய்ப்பு! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்?












Click it and Unblock the Notifications