Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசாளும் யோகம் யாருக்கு இருக்கு? ஜாதகத்தில் இந்த அம்சங்கள் இருந்தால் கோடீஸ்வர யோகம் வீடு தேடி வரும்

அரசாள வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் ஜாதக கட்டத்தில் அதற்கேற்ப அம்சம் இருந்தால் பதவியும் பட்டமும் வீடு தேடி வரும்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சக்கரவர்த்தியாகவோ, ஜனாதிபதியாகவோ, பிரதமராகவே வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பிறந்த ஜாதகத்தில் சில அமைப்புகள் இருக்க வேண்டும். உங்களுடைய ஜாதகத்தில் என்னென்ன யோகங்கள் இருக்கிறது என்று தெரிந்து கொண்டு அரச பதவிக்கு முயற்சி செய்யலாம். கஜகேசரி யோகம், சக்கரவர்த்தி யோகம் என பல யோகங்கள் உள்ளன. எந்த மாதிரியான யோகம் அரச பதவியைத் தேடித்தரும் என்று பார்க்கலாம்.

சூரியனும் சந்திரனும் ஒரு ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால்தான் அனைத்து நல்ல பலன்களும் ஜாதகர் அனுபவிக்க முடியும். சந்திரனால் ஏற்படும் சுப யோகங்களில் முக்கியமானது குரு சந்திர யோகமாகும். குருவும், சந்திரனும் ஒருவரின் ஜாதக கட்டத்தில் சேர்ந்திருந்தால் நல்ல யோகங்கள் ஏற்படும். ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்தில் குரு சேர்ந்திருந்தாலோ அல்லது குரு இருக்கக்கூடிய இடத்திலிருந்து குருவின் பார்வை விழக்கூடிய 5, 7, 9 ஆகிய இடங்களில் சந்திரன் இருந்தாலும் இந்த குரு சந்திர யோகம் உண்டாகும். இதனால் செல்வம், செல்வாக்கு, புகழ் தேடி வரும்.

ஜாதகத்தில் அகண்ட சாம்ராஜ்ய யோகம் இருந்தால் அடுத்த வேளை சோற்றுக்கே வழியில்லாதவர் கூட அரசனாகும் யோகம் தேடி வரும். இந்த யோகங்கள் மட்டுமில்லாமல் இன்னும் நூற்றுக்கணக்கான யோகங்கள் மூலநூல்களில் சொல்லப்பட்டுள்ளன. இவைகள் உங்கள் ஜாதகத்தில் இருந்தாலும், அரசு கிரகமான சூரியனும், சந்திரனும் நல்ல நிலையில் இருந்தால் கோடீஸ்வர யோகம் வீடு தேடி வரும் அவை என்னென்ன யோகங்கள் என்று வரிசையாக பார்க்கலாம்.

கஜகேசரி யோகம்

கஜகேசரி யோகம்

சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து 4,7,10ஆம் இடங்களில் குரு இருப்பின் அது கஜகேசரி யோகம் ஆகும். எதிரிகளை சிங்கம் போல எதிர் கொண்டு அழிக்கக்கூடியவர்கள். தைரியமும், தன்னம்பிக்கையும் சொன்னதை செய்யக்கூடிய செயலாற்றல் கொண்டவர்களாகவும் இவர்கள் இருப்பார்கள். குருவும், சந்திரனும் ஆட்சி, உச்சம், நட்பு என்கிற நிலையில் இருந்தால் மட்டுமே இந்த யோகம் முழு பலனை அளிக்கும். இல்லையெனில், இதற்கான பலன் குறையக்கூடும்.

தலைமைப்பதவி தேடி வரும்

தலைமைப்பதவி தேடி வரும்

இந்த யோகம் அமையப்பெற்ற நபர்கள், எந்த கஷ்டங்களையும் எளிதில் கடந்துவிடுவார்கள். துன்பங்களெல்லாம் தூசி தான் இவர்களுக்கு. வாழ்க்கையில் மிக உயரிய இடத்திற்கு செல்லக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள். செல்வம், செல்வாக்கு, புகழ், அந்தஸ்து ஆகியவற்றுடன் கூடிய தலைமைப் பதவி இவர்களைத்தேடி தானே வரும்.

வீடி தேடி வரும் அரசாளும் யோகம்

வீடி தேடி வரும் அரசாளும் யோகம்

உங்கள் பிறந்த ஜாதகத்தில் 2, 9, 11 ம் பாவாதிபதிகள் சந்திரனுக்கு 1, 4, 7, 10 எனப்படும் கேந்திரத்தில் இருக்க, குரு 5, 11 ம் பாவாதிபதியாகி 2 ம் இடத்தில் இருக்க வேண்டும். இந்த யோகம். இன்றைய காலகட்டத்தில் அமைச்சர், முதலமைச்சர், கவர்னர், பிரதமர் என்பது போன்ற உச்சகட்ட பதவிகளை இது குறிக்கிறது. அல்லது குரு 2, 5, 11 ம் இடத்தில் இருக்க, குரு நின்ற வீட்டின் அதிபதி, சந்திரனுக்கு 1, 4, 7, 10, 5, 9 ஆகிய ஏதோ ஓரிடத்தில் இருக்க வேண்டும். மேற்குறிய இரண்டுவித அமைப்புகளில் எது இருந்தாலும் அது அகண்ட சாம்ராஜ்ய யோகமே.

அரசியலில் ஜெயிக்க வைக்கும் யோகும்

அரசியலில் ஜெயிக்க வைக்கும் யோகும்

ஜாதகத்தில் அரசாட்சி யோகம் இருந்தால் அரசியலில் மிகப்பெரிய பெரிய பதவிகள் வகிக்கலாம். அரசாட்சி யோகத்தின் மூலம் அரசாங்க உயரதிகாரியாகவும் ஆகலாம். குரு நின்ற ராசியாதிபதி, சந்திரனுக்கு கேந்திரம் எனப்படும் 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் நின்றாலும், சந்திரன் நின்ற ராசியாதிபதி சுக்கிரனுக்கு கேந்திரத்திலும் இருந்தால் இந்த யோகம் ஏற்படும். பிறந்த ஜாதகத்தில் ராகு நின்ற ராசியாதிபதி லக்கினத்திற்கு, சுக்கிரனுக்கு கேந்திரத்தில் இருந்தாலும் இந்த யோகம் உண்டு என்று சொல்லப்படுகிறது.

அரச கேந்திர யோகம்

அரச கேந்திர யோகம்

பிறந்த ஜாதகத்தில் லக்கனத்திற்கு 1, 4, 7, 10ல் அனைத்து கிரகங்களும் இருந்து அவை ஆட்சி உச்சம் என்கிற உயரிய நிலையில் இருந்தால் உருவாவது அரச கேந்திர யோகம். பெரிய அளவில் மக்கள் சக்தியை தன்பால் ஈர்க்கும் வல்லமையும் கொண்டது. இந்த யோகம் அமையப்பெற்ற ஜாதகருக்கு கோடீஸ்வர யோகம் வீடு தேடி வரும்.
வாழ்க்கையில், நினைத்துப் பார்க்க முடியாத அளவு அனைத்து வசதிகளையும் பெற்றுத் தரும்.

 கலாநிதி யோகம்

கலாநிதி யோகம்

பிறந்த ஜாதகத்தில் குரு 2 அல்லது 5 ம் வீட்டில் இருந்து புதன், சுக்கிரனுடன் சேர்ந்திருந்தாலும் அல்லது 2, 5 ம் இடங்கள் புதன், சுக்கிரனின் ஆட்சி வீடாக இருந்தாலும் கலாநிதி யோகம் ஏற்படும். அறிவுக்கு பஞ்சம் இருக்காது. நல்ல திறமையையும் புத்திசாலித்தனத்தையும் கொடுக்கும். அரசியலில் பிரகாசிக்கும் வாய்ப்போ அல்லது அரசாங்க உயர் பதவிகள் வகிக்கும் வாய்ப்போ பெற்றுத்தரும் யோகம் இது.

சக்கரவர்த்தி யோகம்

சக்கரவர்த்தி யோகம்

லக்கினாதிபதி உச்சம் பெற்று, அவருடன் 2, 9 ம் பாவாதிபதிகள் இணைந்து 10 ம் அதிபதி பலம் பெறுவது சக்கரவர்த்தி யோகம். ஆட்சி செய்வதற்குரிய அத்தனை தகுதிகளையும் சக்கரவர்த்தி யோகம் கொடுக்கும். ஒருவேளை ஆட்சிப் பொறுப்பில் இல்லாவிட்டாலும் அதற்கு நிகரான அந்தஸ்தை தந்துவிடும்.

சக்கர வியூக யோகம்

சக்கர வியூக யோகம்

தலைமைப் பதவிக்கு தகுதியான யோகம் சக்கரவியூக யோகமாகும். சிறந்த அறிவாளியாகவும், சாதுர்யம் மிக்கவராகவும் இவர்கள் இருப்பார்கள். செல்வமும், செல்வாக்கும் குறைவில்லாமல் இவர்களிடம் இருக்கும். சக்கர வியூக யோகம் யோகம் அரிதிலும் அரிதான ஒன்று. ராகு, கேது தவிர மற்ற ஏழு கிரகங்களும் ரிஷபம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளில், ராசிக்கு ஒரு கிரகம் வீதம் இருந்து, இந்த ராசிகளில் ஏதோ ஒன்று லக்கினமாக அமைவது சக்கர வியூக யோகம்.

சக்கர யோகம்

சக்கர யோகம்

ராகு, கேது தவிர மற்றைய ஏழு கிரகங்களும் ஒற்றைப்படை ராசி எனும் ஆண் ராசிகளில் இருக்க அது சக்கர யோகத்தை தருகிறது. எம்.எல்.ஏ முதல் ஜனாதிபதி வரை எந்த பதவி வேண்டுமென்றாலும் இந்த யோகம் உள்ளவர்களுக்கு கிடைக்கலாம். ஜாதகத்தில் 10 ம் இடத்தில் ராகு இருக்க, அந்த வீட்டின் அதிபதி லக்கினத்தில் இருக்க, லக்கினாதிபதி 9 ல் இருக்க, இவர்கள் சுபகிரகங்களால் பார்க்கப்பட வேண்டும். 10 ல் ராகு இருக்க, அவ்வீட்டுக்குடையோன், 1, 5 லிருக்க 9 ம் பாவாதிபதி 7 ல் இருக்க வேண்டும். இந்த அமைப்பு இருப்பவர்களுக்கு அரச பதவி தேடி வரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+