வீட்டு பூஜை அறையில் இப்படி விளக்கேற்றுங்கள்..லட்சுமி குபேரன் அருள் கூடவே வரும்!!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீட்டில் அள்ள அள்ள செல்வம் பெருக தினசரி விளக்கேற்றி வழிபட வேண்டும். விளக்கேற்றுவது மன அமைதிக்காக மட்டுமல்ல செல்வத்திற்கு அதிபதியான அன்னை மகாலட்சுமியை மகிழ்ச்சிப்படுத்தவும்தான். செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது சிறப்பு.

வெள்ளிக்கிழமை நாட்களில் பூஜை அறையில் மகாலட்சுமிக்கு நெய் தீபம் போட்டு, சிவப்பு மற்றும் வெள்ளை நிற வாசனை மிக்க மலர்களால் அர்ச்சனை செய்து மகாலட்சுமி மந்திரம், கனகதாரா ஸ்தோத்திரம் படித்து வழிபட்டு வர வேண்டும்.

வீட்டிற்குள் உள்ள பெண்கள் தலைவிரி கோலத்துடன் காட்சியளிக்கக் கூடாது. விளக்கேற்றும் போது நன்றாக தலை பின்னல் போட்டு இருக்க வேண்டும். எப்பொழுதுமே இரண்டு கைகளால் தலையை சொரிய கூடாது. தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது. வீட்டின் பூஜை அறையில் சுவாமி படங்களுடன் இறந்தவர்களின் படங்களை சேர்த்து வைக்கக் கூடாது.

குபேரன்

குபேரன்

குபேரனுக்கு தாமரை திரி போட்டு விளக்கேற்றி வழிபட்டால் பணம் வரும். வியாழக்கிழமை மாலையில் விளக்கேற்றி குபேர பூஜை செய்யலாம். யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது காலை மாலை வேளைகளில் விளக்கேற்றக்கூடாது. மாலை ஆறுமணிக்கே பூஜை அறையில் திருவிளக்கு ஏற்றி விட வேண்டும். நமது வீட்டில் நெய் அள்ள அள்ள குறையாமல் வீட்டில் வைத்திருந்தால் பணமும் அள்ள அள்ள குறையாமல் சேரும் என்பது நம்பிக்கை

பூஜை அறையில் நறுமணம்

பூஜை அறையில் நறுமணம்

வியாழன் அன்று காலையில் பூஜை பொருட்களை விலக்கி வைப்பது நல்லது. மகாலட்சுமியும் குபேரனும் செல்வதிற்கு அதிபதியாக விளங்கக்கூடியவர்கள். இவர்களை சுற்றி எப்போதும் நறுமணம் வீசுமாறு பார்த்து கொள்வது மிக பெரிய பலன்களை தரும். பச்சை கற்பூரம், துளசி சேர்த்த தீர்த்தம் வைக்கலாம். ஏலக்காய் மாலை சாற்றி வழிபடலாம். பூஜைக்கு உகந்த நல்லெண்ணெய் மற்றும் நெய் மட்டுமே விளக்கேற்ற பயன்படுத்த வேண்டும்.

குத்துவிளக்கு

குத்துவிளக்கு

ஏற்றிய விளக்கில் இருந்து கற்பூரத்தை ஊதுபத்தியை ஏற்றக்கூடாது. சனி பகவானுக்கு வீட்டில் விளக்கு ஏற்றக்கூடாது. அக்னியை வாயால் ஊதி எழுப்பவோ அணைக்கவோ கூடாது,நகத்தை வீட்டிற்குள் கிள்ளி வீட்டில் போட்டால் வறுமை உண்டாகும். விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும். அணைப்பது என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது அமங்கலச் சொல்லாகும்.

விளக்கை மலையேற்றுதல்

விளக்கை மலையேற்றுதல்

விளக்கை தானாக மலையேற விடக்கூடாது, ஊதியும் அமர்த்தக்கூடாது. புஷ்பத்தினாலும் மலையேற்றக்கூடாது. தீபத்தை எப்போதும் அதற்கென்று உள்ள குச்சி, மலர்கள், நாணயம், கல்கண்டை கொண்டு தான் அமர்த்தவேண்டும். வீடுகளில் பூஜை அறை என்று தனியாக வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து வைக்காதீர்கள் இது இறை சக்தியைக் குறைக்கும். வீட்டின் நிலைகளில் குங்குமம் மஞ்சள் வைக்க வேண்டும். இதனால் தீய சக்திகள் பயந்து ஓடும். வீட்டில் சண்டை, சச்சரவு இருக்கக்கூடாது. அமங்கலச் சொற்கள் பேசவே கூடாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+