மூணு தங்கச்சிங்க ... ஒவ்வொண்ணும் ஒவ்வொரு தினுசு.. சீரியல்களில் இது ரொம்பப் புதுசு!
சென்னை: சன் டிவியின் பவுர்ணமி, கல்யாண வீடு, கண்மணி இந்த மூணு சீரியல்களிலும் அக்கா -தங்கச்சின்னு ரெண்டு பேர் இருக்காங்க.ஒவ்வொரு தங்கச்சியும் ஒவ்வொரு தினுசுல இருக்காங்க.
பவுர்ணமி பாப்பா தங்கச்சி மூணு நாலு வயசுதான் இருக்கும். பவுர்ணமிக்கே எட்டு வயசுதான். அக்கா மேல தங்கைக்கும், தங்கை மேல அக்காவுக்கும் கொள்ளை பாசம்.
கல்யாணவீடு தங்கச்சி ஐயோ கொலைகாரி.. கண்மணி சீரியல் தங்கச்சி இருக்குதே அது புத்திசாலி. பாசக்காரி, அக்காவுக்கு நல்லது கெட்டதைக் கூட எடுத்து சொல்லுது.

சித்தி, பாட்டி
ராசி இல்லாதவள்னு அப்பா திட்ட, சாப்பாடு வேண்டாம்னு படுத்துக்குது பவுர்ணமி பாப்பா. சித்தியும், பாட்டியும் என்ன செய்யறது, எத்தனை நாளைக்குத்தான் பவுர்ணமிகிட்ட அப்பா உன்மேல பாசமா இருப்பார்னு பொய் சொல்றதுன்னு செய்வதறியாது திகைச்சு நிக்கறாங்க.

தங்கச்சி பாப்பா
சித்திக்குப் பிறந்த பவுர்ணமி அப்பாவின் இரண்டாவது மகள், அக்கா சாப்பிடாமல் இருப்பதை பார்த்து, தட்டில் சாப்பாடு எடுத்து வந்து, சாப்பிடு அக்கான்னு சொல்ல, எனக்கு பசிக்கலை பாப்பா நீ சாப்பிடுன்னு சொல்றா. நீ சாப்பிடலேன்னா நானும் சாப்பிட மாட்டேன்னு முகத்தை திருப்பிக்குது பாப்பா. சரி நான் சாப்பிடறேன்னு பவுர்ணமி சொல்ல, குட்டி பாப்பா அக்காவுக்கு ஊட்டி விடுகிறாள், அக்கா பாப்பா தங்கச்சி பாப்பாவுக்கு ஊட்ட, அவள் இவளுக்கு ஊட்ட என்று இரு குழந்தைகளின் எமோஷனல் சீன் சூப்பர்.

தங்கச்சி ரோஜா
யம்மா...ஊருல உலகத்துல பார்க்க முடியாத இப்படியும் ஒரு தங்கச்சிங்க. அக்காவை பொண்ணு பார்க்க வந்த, தன்னுடன் வேலை பார்க்கும் ராஜாவை, தான்தான் கல்யாணம் செய்துக்கனும்னு பண்ணின அட்டூழியத்துக்கு அப்பவே தண்டிச்சு இருக்கணும். விட்டதுனால. எப்படியோ வீட்டுக்குள்ள மறைஞ்சு வந்து சேர்ந்துருச்சு.

விதவைதான்
வீட்டுக்குள் ஒளிஞ்சுக்கிட்டு இருந்த ரோஜாவை அக்கா சூரியா கண்டுபிடிச்சுட்டா, கொஞ்சமும் பயமில்லையே ரோஜாகிட்ட. நீங்க சொல்ற மாதிரி நான் வாழறேன்..ஆனா, ராஜா என் கூட இருக்கணும்னு சொல்றா. உனக்கு ராஜா வேணும்னா, அவர் நீ வேணும்னு கேட்க வேணாமான்னு அக்கா கேட்கறா. லூசு லூசு...கோபி கோபின்னு அலையறியே அவனை மறந்துரு. . அவனை நான் கொல்ல போறேன். மீறி கோபிதான் வேணும்னு கல்யாணம் செஞ்சுக்கிட்ட நீ விதவைதான்னு சொல்லி தங்கச்சிக்காரி அக்கா வயத்துல பகீரை கிளப்புறா.

சோத்துல விஷம்
மூதேவி, லூசுங்களாடி நீங்க எல்லாம்... ராஜாகிட்ட பேசி எனக்கு கட்டி வைக்கறதை விட்டுட்டு, வியாக்கியானம் பேசறீங்க... அப்பனா அந்தாளு, எவனாவது பெத்த பொண்ணை போலீஸ்ல புடிச்சு குடுப்பேன்னு சொல்லுவானா.. அவன் இப்படியே செய்துகிட்டு இருந்தா சோத்துல விஷத்தை வச்சுருவேன்னு சொல்றா.

கேக் வெட்டணும்
கண்மணி சீரியலில் முத்து செல்விக்கு ஒரு தங்கச்சி, பத்து வயசு இருக்கும். அக்காவுக்கு பிறந்த நாள்னு மல்லி பூ தன் கையால கட்டி, அக்காவுக்கு பரிசா குடுக்குது. அக்கா உன் பிறந்த நாளை சிறப்பா கொண்டாடணும்க்கா.. கேக் வெட்டணும்க்கா...எனக்கு மட்டும் ஆசை இல்லையா... நம்ம இந்த ஊருக்கு பஞ்ச்ம பொழைக்க வந்தவங்க.. நமக்கு எங்கடி கேக் வெட்ட வக்குன்னு சொல்றா

முட்டை இருக்கே
அப்பாகிட்ட போயி, அப்பா அக்காவுக்கு இன்னிக்கு பிறந்த நாள், அவளுக்கு பிடிச்ச நக பாலீஷ், வளையல் வாங்கி குடுத்து கேக் வெட்டி கொண்டாடலாம்ப்பா.. காசு குடுங்கன்னு கேட்கறா. எவ்ளோ ஆகும்மான்னு அப்பா கேட்க, ஒரு அம்பது ரூபா ஆகும்ப்பான்னு சொல்லுது பாப்பா. என்கிட்டே அஞ்சு ரூபா கூட இல்லியேம்மான்னு கைவிரிக்கிறார். எப்படியாவது அக்காவுக்கு கேக் வெட்டியே ஆகணும்.. ஐ நாட்டு கோழி முட்டை இருக்கே.. அதை வித்துட்டு வரும்போது அக்காவுக்கு கேக் வாங்கிட்டு வருவோமுனு நடையை காட்டுகிறாள் சிறுமி.

நல்லதோ கெட்டதோ
இதுல என்ன பியூட்டின்னா. கொலைகாரியா வக்கிர புத்தியோட பேசற தங்கச்சி கல்யாண வயசுக்கு நிக்கற பொண்ணு. மத்தவங்க ரெண்டு தங்கச்சிங்களும் அறியாத பிஞ்சு. மனசு மட்டும் இலவம் பஞ்சு... நல்லதோ கெட்டதோ சீரியல்களும் தெரியாத பல விஷயங்களை சொல்லுதுங்க...
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications