ரசிகர்களின் கூட்டத்தில் மாட்டிக்கொண்ட ஆரி...கடைசியில் நடந்தது தான் ட்விஸ்ட்
சென்னை: பெண் ரசிகர்களின் கூட்டத்தில் ஆரி மாட்டிக்கொண்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
ரசிகர்களின் அன்பை பார்த்து ஆரி மெய்சிலிர்த்து போயுள்ளாராம்.
இதுதான் அவர் சம்பாதித்த புகழ் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

திக்குமுக்காடிப் போன ஆரி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனின் வின்னராக வெற்றி பெற்ற ஆரிக்கு கிடைத்திருக்கும் புகழை பார்த்து சக பிரபலங்களும் வியந்து போயுள்ளனர். ரசிகர்களின் பேராதரவினை பார்த்து தற்போது ஆரியும் திக்குமுக்காடிப் போயுள்ளாராம். என்னதான் பாசம் இருக்கிறது என்றாலும் ரசிகர்கள் இந்த அளவிற்கு செய்யலாமா??என பலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். தான் பெற்ற பெரிய செல்வமாக இதைத் தான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

கல்லூரி பெண்களை கவர்ந்தவர்
நடிகர்களாக இருந்தாலும் சரி பிரபலங்களாக இருந்தாலும் சரி ரசிகர்களுக்கு பிடித்துவிட்டால் அவர்களை தலையில் வைத்துக் கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள். அந்த மாதிரிதான் தற்போது ஆரிக்கும் ரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள். வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பட்டிதொட்டியெல்லாம் பிரபலமடைந்த ஆரி கல்லூரி பெண்கள் மத்தியிலும் அதிக அளவில் பிரபலம் அடைந்துள்ளார். நடிகர்கள் என்றாலே அவர்கள் செல்லும் இடங்களில் கூட்டங்கள் அலை மோதத் தான் செய்யும் தற்போதும் அப்படித்தான் நடந்துள்ளது.

ஆரி அப்படி இல்லை
ஆரி தற்போது கல்லூரி ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக சென்றிருக்கும் நேரத்தில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு வெளியே வரும் போது ரசிகர்கள் அனைவரும் அவரை சூழ்ந்துகொண்டு செல்பி எடுப்பதற்கு முண்டியடித்துக் கொண்டு இருக்கின்றனர். ஒவ்வொரு ரசிகர்களின் செல்போனுக்கும் சிரித்த வண்ணமாகவே ஆரி செல்பிக்கு போஸ் கொடுத்துள்ளார். பலர் பிரபலமானதும் ஓவரா சீன் போட்டு அனைவரையும் மதிக்காமல் நடந்து வருவார்கள் ஆனால் ஆரி அப்படி அல்ல என்று அவருடைய ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.
Recommended Video

பாசம் குறையாது
பிக்பாஸ் வெற்றிக்கு பிறகு ஆரி அதிகமான திரைப்படங்களில் கலக்குவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமாக தான் இருந்து வருகிறது. அவர் நடித்து முடித்திருக்கும் திரைப்படங்கள் பல வெளியாகாத நிலையில் அவர் மீது வைத்திருக்கும் பாசம் குறையவே இல்லை என்று ரசிகர்கள் வெளிக் காட்டி வருகின்றனர். தற்போது ரசிகர்களின் அன்பை பார்த்து ஆரியும் மெய்சிலிர்த்துப் போனார். தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் இவருடன் செல்பி எடுத்த வீடியோக்களை பகிர்ந்துள்ளார். அதைப் பார்த்ததும் மெர்சலான ஆரியின் ரசிகர்கள் வாழ்த்துக்களையும் இன்னும் நீங்கள் அதிகமாக வளர்ச்சி அடைய வேண்டுமென்று ஆசீர்வாதங்களையும் வழங்கி வருகிறார்கள்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications