காதலே பொறாமை கொள்ளும் காதல்...லைவ்வில் சினேகன், கன்னிகா செய்த செயல்
சென்னை: என்னதான் காதல் என்றாலும் இப்படியா??என்று நெட்டிசன்கள் சினேகன், கன்னிகா ஜோடியை கலாய்த்து வருகின்றனர்.
Recommended Video
புதியதாக திருமணம் முடித்து இருந்தால் இப்படி எல்லாம் பொதுவெளியில் செய்யலாமா??என்று பலர் அறிவுரைகளை வழங்கி வருகிறார்கள்.
இன்று போல என்றும் காதலோடு வாழ்க என்று ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை வழங்கி வருகிறார்கள்.

பிரபலமான தம்பதிகள்
திரை துறையில் புதுமண தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் கன்னிகா, சினேகன் தம்பதிகளை ரசிகர்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர். இவர்கள் இருவரும் மனமொத்த தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் சமூக வலைத்தளத்தில் இவர்கள் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். அடிக்கடி செய்யும் சிறு சிறு விளையாட்டு குறும்புகளை கூட சமூக வலைத்தளத்தில் தங்களுடைய ரசிகர்களிடம் பகிர்ந்து வருகிறார்கள். சோகங்கள் மட்டுமல்லாமல் சுகங்களையும் பகிர்ந்து வரும் இவர்களுக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகிறார்கள்.

விட்டுக்கொடுக்கும் குணம்
என்னதான் காதலித்து திருமணம் செய்து இருந்தாலும் இவர்கள் இருவருக்கும் இருக்கும் வயது வித்தியாசத்தை இப்ப வரைக்கும் பல நெட்டிசன்கள் கூறி கலாய்த்து வருகின்றனர். காதலுக்கு வயது மதம் மொழி எதுவும் தேவை இல்லை என்று இவர்கள் ஜோடியாக நிரூபித்து வருகின்றனர். விட்டுக்கொடுக்கும் குணம் இருந்தால் எந்த சூழ்நிலையிலும் ஜெயித்து வாழலாம் என்று இவர்கள் நிரூபித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருந்து தங்களுடைய துறைகளில் முன்னேறி கொண்டிருப்பதை பார்க்கும் போது இவர்களை பல ரசிகர்கள் பின்பற்ற தொடங்கி இருக்கிறார்கள்.

கட்டிப்பிடி வைத்தியர்
ஒரு பாடலாசிரியராக சினேகன் இருந்தாலும் இவருடைய பாடல்கள் ரசிகர்களை கவர்ந்த அளவிற்கு இவருடைய முகம் பலருக்கும் பரிச்சயம் இல்லாமல் தான் இருந்தது. ஆனால் அவருக்கு என்று ஒரு தனி அடையாளத்தை கொடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் அனைவரிடமும் இணக்கமாக செல்வது மட்டும் அல்லாமல் ஒருவர் கவலையில் இருக்கும் போது அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதம் அனைவரையும் கவர்ந்திருந்த.து இவர் அதிக நாட்கள் இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்தாலும், இவர் ஜெயிக்க வில்லையே என்று ரசிகர்கள் ஃபீல் பண்ணி வந்தனர். ஒருசில நெட்டிசன்கள் இவரை கட்டிப்பிடி வைத்தியர் என்று கலாய்த்து வருகின்றனர்.

லைவ்வில் ரொமான்ஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் தன்னுடைய பணியில் தீவிரமாக இருந்த இவர் இந்த வீட்டிற்குள் இருக்கும் போதே ஒரு பெண்ணை காதலிக்கும் விஷயத்தையும் அவர் தான் தன்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு வெற்றிக்கும் காரணம் என்றும் கூறியிருந்தார். ஆனால் அந்த பெண் யார் என்று பலருக்கும் தெரியாமல் இருந்தது. இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு தான் இவர்களுடைய காதல் வெளி உலகத்திற்கு தெரிய ஆரம்பித்தது. தெரிந்ததும் முதலில் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் பின்பு வாழ்த்துக்களை கூறிவந்தனர். தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை கன்னிகா வெளியிட்டுள்ளார். அதில் அவர் சீட்டுகளை கையில் வைத்தபடி மேஜிக் செய்து கொண்டிருக்கும்போது திடீரென்று வந்த சினேகன் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கிறார். அதை பார்த்ததும் ஒரு சில ரசிகர்கள் வெட்கத்தோடு இவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். ஆனால் நெட்டிசன்கள் இப்படியா பொதுவெளியில் உங்களுடைய ரொமான்ஸை செய்து எங்களை வெறுப்பு ஏற்றுவீர்கள் என்று கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
