நான் உங்களுக்கு என்ன துரோகம் பண்ணுனேன்...கண்ணீரோடு கதறிய கூல் சுரேஷ்.. குவியும் கருத்துக்கள்
சென்னை: நடிகர் கூல் சுரேஷ் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கிறதாம். ஒரு சில நெட்டிசன்கள் இந்த வீடியோவை கூட விட்டு வைக்காமல் அவரை கலாய்த்து வருகிறார்கள்.
நடிகர் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு திரைப்படம் ஆரம்பித்த நாளிலிருந்து இப்ப வரைக்கும் ப்ரமோஷன் கொடுத்தவர்களில் முதன்மையானவராக கூல் சுரேஷ் இருந்து வருகிறார்.
வெந்து தணிந்தது காடு திரைப்பட வெளியான நாளில் அவருடைய காரை ரசிகர்கள் பலர் உடைத்து விட்டதற்கு நெட்டிசன்கள் தெரிவித்த கருத்துகளுக்குத் தான் தற்போது கூல் சுரேஷ் உடைந்த அழுது இருக்கிறாராம்.

சாக்லேட் படத்தின் மூலம் அறிமுகம்
பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த சாக்லேட் படத்தின் மூலம் அறிமுகமான கூல் சுரேஷ், அதன் பிறகு தான் நடித்த ஸ்ரீ, காக்க காக்க, மச்சி,எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தேவதையை கண்டேன், போன்ற திரைப்படங்களில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து பிரபலமானார். புள்ளிங்கோ கெட்டப் எல்லாம் பிரபலமாவதற்கு முன்பே அந்த காலத்திலேயே புள்ளிங்கோ கெட்டப் போன்று டிசைன் டிசைனா ஹேர் ஸ்டைலிலும், கலர் கலர் காஸ்டியூம் போட்டு கலக்கியவர். தான் நடிக்கும் படங்களில் நெகட்டிவ் கேரக்டர் என்று அளவு எடுத்து செய்தார் போல் கெட்டப்பிலும்,உடல் மொழியிலும் நடிப்பதில் கெட்டிக்காரர்.

சிம்புவின் தீவிர ரசிகர்
அவ்வப்போது ஏதாவது சமூக சேவைகள் ஈடுபட்டு வரும் இவர் சமுக வலைதளங்களில் கருத்து சொல்வதாக நினைத்துக்கொண்டு ஏதேனும் வீடியோ போட்டு பார்ப்பவர்களை காண்டாக்கி வந்தார் என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். சிம்புவின் தீவிர ரசிகரான இவர் சிம்புவின் பிஆர்ஓ போல் செயல்பட்டு வருகிறார். கொஞ்ச நாட்களாகவே மைக்கை பார்த்தாலே கூல் சுரேஷ் குழப்ப சுரேஷ் ஆக மாறி எதையாவது உளறிக்கொட்டி டிரெண்ட் ஆகி வருகிறார். இவர் நிதானமாகத்தான் பேசுகிறாரா!!? அல்லது போதையில் உளறுகிறாரா!!? என்று இவர் முன்பு மைக்கை நீட்டுபவர்கள் குழம்ப வேண்டியிருக்கிறது என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

சிம்புவின் திரைப்படம்
தற்போது வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியான நாளில் இவருடைய காரை ரசிகர்கள் உடைத்து விட்டனர். அதற்கு நெட்டிசன்கள் பலர் சமூக வலைத்தளத்தில் பல நெகடிவ் கமெண்ட்களை வெளியிட்டு இருக்கிறார்கள்.அதை குறித்து கூல் சுரேஷ் ,"ஒரு பெரிய ஹீரோவுக்கு கொடுக்க வேண்டிய வரவேற்பு சிம்புவின் ரசிகர்களும் என்னுடைய ரசிகர்களும் எனக்கு கொடுத்து வருகிறார்கள். கமெண்டில் எல்லோரும் திட்டி இருக்கீங்க. காரை மட்டும் தான் அடிச்சி இருக்கீங்க, அவனை இன்னும் கொழுத்தலையா, நொறுக்கலையா என்று கேட்டு இருக்கீங்க. நான் உங்களுக்கு என்னையா அப்படி துரோகம் பண்ணுனேன். !!??

கண்ணீரோடு வேண்டுகோள்
நான் சோசியல் மீடியாவில் இவ்வளவு பிரபலமாக இருந்தாலும் கஷ்டப்பட்டு கிட்டு தான் இருக்கேன். வாடகை கொடுக்க முடியாமல் காருக்கு டியூ கட்ட முடியாமல் எனக்கு எவ்வளவு கஷ்டங்கள் இருக்கு தெரியுமா??அதனால என்ன பத்தி இனி எதுவும் அவதூறு பேசாதீங்க. அவ்வளவு கஷ்டம் எனக்குள்ள இருக்கு. 25 வருஷம் ஆகுது, இன்னும் பேயருக்கும் புகழுக்கும் எவ்வளவு பேரு கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள் என்று, நானும் இதுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன். அதனால் இப்படி செய்யாதீங்க என்று கண்ணீரோடு இவர் வெளியிட்ட வீடியோ தற்போது ரசிகர்கள் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications