ஊரறிய திருமணம் செய்ய ஆசைப்பட்டேன்... இப்படி ஆயிருச்சு..!! உருக்கமாக பேசிய நடிகர் முனீஸ் ராஜா
சென்னை: சின்னத்திரை நடிகரான முனீஸ் ராஜா தன்னுடைய திடீர் திருமணத்தை குறித்து பேசிய வீடியோ ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
ஜீ தமிழில் ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகரான முனீஸ் ராஜாவின் திருமணத்தை வெகு விமர்சனமாக நடத்தியுள்ளனர்.
திடீர் திருமணம் மற்றும் சர்ச்சைகளால் சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த முனீஸ் ராஜா பேசிய வார்த்தைகள் தற்போது ரசிகர்களின் அனுதாபங்களை பெற்று வருகிறது.

பிரபலமான சம்மந்தம்
சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியலில் சம்மந்தம் கேரக்டரின் மூலமாக பலருக்கும் பரீட்சையமான முனிஸ் ராஜா திடீர் திருமணம் செய்து கொண்டது ஒரு சில வாரங்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இவர் நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளை திருமணம் செய்து இருக்கிறார் என்ற செய்தி பலருக்கும் வியப்பை கொடுத்து இருந்தது. ஆரம்பத்தில் ராஜ்கிரணின் மகளை இவர் திருமணம் செய்து விட்டார் என்று சமூக வலைதளத்தில் பல வீடியோக்கள் பரவி வந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்து ராஜ்கிரண் அது என்னுடைய மகள் அல்ல வளர்ப்பு மகள் என்று தெளிவுபடுத்தி இருந்தார்.

திடீர் திருமணத்திற்கான காரணம்
நடிகர் முனீஸ் ராஜா மற்றும் அவருடைய மனைவி இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருதரப்பிலும் இவர்களுடைய காதலுக்கு ஆரம்பத்தில் சம்மதம் தெரிவிக்காமல் இருந்துள்ளனர். ஆனால் அதற்கு பிறகு முனீஸ் ராஜாவின் வீட்டில் சம்மதித்து விட்டார்களாம். ஆனால் ராஜ்கிரணின் வீட்டில் இவர்களுடைய காதல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காமல் இருந்துள்ளனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறி இவர்கள் இருவரும் திடீர் திருமணம் செய்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு ராஜ்கிரண் தன்னுடைய வளர்ப்பு மகளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தன்னுடைய பெயரை அந்த நடிகர் எந்த இடத்திலும் உபயோகிக்க கூடாது என்று எல்லாம் கூறி இருந்தார்.

பதில் வீடியோ
காதலித்து திருமணம் செய்து கொண்ட முனீஸ் ராஜா தன்னை பற்றி ராஜ்கிரண் பேசியதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்காமல் ஒரு சில நாட்கள் கழித்து தான் தன்னுடைய மனைவியின் பெயரில் வீடு ஒன்று கட்டிக் கொண்டிருப்பதாகவும், மனைவி ஆசைப்பட்ட மாதிரி அவருக்கு ஒரு பிசினஸ் ஏற்படுத்தி கொடுத்திருப்பதாகவும் தன்னுடைய ரசிகர்களிடம் தெளிவுபடுத்தி இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் இது ராஜ்கிரணுக்கான பதிலடியா? என்று கேள்விகளை எழுப்பி இருந்தனர். இந்த நிலையில் ஜீ தமிழில் முனீஸ் ராஜா திருமணம் வெகு விமர்சனமாக கொண்டாடப்பட்டுள்ளது.

நெகிழ்ச்சியான வார்த்தை
தற்போது முனீஸ் ராஜா ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அமுதாவும் அன்னலட்சுமி என்னும் சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சி ஆக சீதாராமன் நிகழ்ச்சியில் நடிகர் முனீஸ் ராஜா மற்றும் அவருடைய மனைவிக்கு ஊரறிய திருமண நடக்கிறது. இதற்கு சீரியலில் உள்ள பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை முடித்து இருக்கின்றனர். அப்போது கண்ணீரோடு அவருடைய மனைவி கையெடுத்து கும்பிட்டு இருக்கிறார். நான் ஊரறிய செய்யணும் என்று நினைத்ததை உலகம் அறிய ஜீ தமிழ் செய்து விட்டார்கள் என்று தழுதழுத்த குரலால் முனீஸ் ராஜா பேசியிருக்கிறார். இந்த நிகழ்ச்சி நாளை மாலை 4:30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. இந்தப் ப்ரோமோ வெளியான ஒரு சில நிமிடங்களில் ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications