அடித்து துன்புறுத்திய "செல்லம்மா சீரியல் கதாநாயகன்” பேசிய ஆடியோவை வெளியிட்ட சீரியல் நடிகை திவ்யா!!
சென்னை: சீரியல் நடிகை திவ்யா கர்ப்பமாக இருக்கும் நிலையில் தன்னுடைய கணவரான செல்லம்மா சீரியலின் கதாநாயகன் அர்னாவ் பற்றி பரபரப்பு குற்றச்சாட்டுகளை வெளியிட்டு இருக்கிறார்.
சில ஒரு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் முடிந்த செய்தியை சமூக வலைத்தளத்தில் திவ்யா பதிவிட்டதும் அதை டெலிட் செய்ய சொல்லி அர்னாவ் பேசிய ஆடியோவை தற்போது வெளியிட்டுள்ளார்.

லிவ்விங் ரிலேஷன்ஷிப் வாழ்க்கை
திவ்யா தமிழ் கன்னடம் என பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் தற்போது செவ்வந்தி எனும் சீரியலில் நடித்து வருகிறார். அதுபோல அர்னாவ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலின் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் எளிமையாக திருமணத்தை செய்து முடித்திருக்கின்றனர். தற்போது திவ்யா கர்ப்பமாக இருக்கும் செய்தியை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக ரசிகர்களுடன் பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் திவ்யா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் அதில், சமீபத்தில் தான் எனக்கும் அர்னாவ்க்கும் திருமணம் முடிந்திருந்தது. அவர் செல்லமா சீரியலில் நடித்து வருகிறார். சில வருஷத்துக்கு முன்னாடி சீரியல் ஒன்றில் நாங்கள் நடித்தோம்.அதற்குப் பிறகு நாங்க லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் தான் வாழ்ந்து வந்தோம். இரண்டு வருஷத்துக்கு முன்னாடி நாங்க ஒரு வீடு வாங்கினோம். அதற்கு பைனான்ஸ் எல்லாமே நான் தான் செட்டில் பண்ணி இருந்தேன். அப்போ கல்யாணப்பரிசு சீரியல் முடிந்த பிறகு அர்னாவ்க்கு எந்த ஒரு சீரியலும் இல்லாமல் தான் இருந்தார். நான் தான் மகராசி சீரியல் முடிச்சுகிட்டு இஎம்ஐ எல்லாம் கட்டிக்கிட்டு இருந்தேன்.

கதறும் நடிகை
அது மட்டுமில்லாமல் அர்னாவ் தனியாகவும் லோன் வாங்கி இருந்தார். அதையும் நான் தான் கட்டியிருந்தேன். அவருக்கு எந்த ஒரு கஷ்டத்தையும் கொடுக்காமல் நான் பார்த்துக்கொண்டு இருந்தேன். வேலை இல்லை என்பதை அவர் ஃபீல் பண்ண கூடாது என்பதற்காக நான் பார்த்து பார்த்து பண்ணுனேன். ஆனா என் ஹஸ்பண்ட் என்னை அடிச்சதால நான் கீழே விழுந்ததில் என்னுடைய வயிறுக்கு அடிபட்டு இருக்கு. என்னுடைய காலில் அவர் மிதித்ததால் நான் மயங்கி விழுந்துட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சு தான் நான் முழித்து பார்த்தேன். அப்போது அவர் அங்கே இல்லை. என்னால் ஹாஸ்பிடலுக்கு வர முடியவில்லை. வயிறு வலி வந்துடுச்சு. ப்ளீடிங் ஆகிவிட்டது என்று திவ்யா கதறி அழுத வீடியோ தற்போது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

வெளியான ஆடியோ
இந்த நிலையில் தான் திருமணம் செய்த செய்தியை முதலில் இன்ஸ்டாகிராம் மூலமாக ரசிகர்களிடம் திவ்யா பகிர்ந்து இருக்கிறார். அப்போது அந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் டெலிட் செய்ய சொல்லி அர்னாவ் கூறி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் அந்த வீடியோ புகைப்படங்கள் எல்லாமே விளம்பரத்திற்காக எடுத்தது என்று விளக்க வீடியோ ஒன்றையும் பேச சொல்லி அந்த ஆடியோவில் அர்னாவ் பேசியிருக்கிறார். திருமணத்தை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் அர்னாவ்வின் கருத்தாக இருந்துள்ளது.

பிரச்சனைக்கு காரணம்
ஆனால் செல்லம்மா சீரியலில் அவரோடு நடிக்கும் நடிகையோடு நெருங்கி பழகி வருவதாக திவ்யாவிற்கு தகவல்கள் வந்துள்ளது. இதனால் இவர்கள் வீட்டிலும் பிரச்சனை ஏற்படவே தற்போது கர்ப்பமாக இருக்கும் திவ்யா தன்னுடைய திருமண விஷயங்களையும், கர்ப்பமாக இருக்கும் செய்தியையும் இன்ஸ்டாகிராம் மூலமாக பதிவிட்டிருந்தார். இதற்கு பிறகு தான் இவர்களுடைய வாழ்க்கையில் பெரிய பிரச்சனை ஏற்பட்டு தற்போது இந்த அளவிற்கு வந்துள்ளது என்று திவ்யா கூறியுள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications