நடிகை கௌசல்யாவின் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய சோகமா? பலருக்கும் தெரியாத மற்றொரு பக்கம்
சென்னை: வெள்ளி திரையில் பலருக்கும் பரீட்சையமான கெளசல்யா பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சின்ன திரையில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் நிலையில் அவரைப் பற்றிய பல தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் பல வருடங்களுக்குப் பிறகு நடிக்க வந்த கௌசல்யா சுந்தரியை மிரட்டி அவருடைய திறமையை கொண்டு வரும் ஒரு கேரக்டராக அறிமுகம் ஆகி இருக்கிறார்.

நிஜப் பெயர் கவிதா
எப்போதுமே சிரித்த முகமாக இருக்கும் நடிகை கௌசல்யா வெள்ளி திரையில் கதாநாயகியாக இருக்கும்போது இருந்த அதே அழகு அப்படியே மெயின்டனன்ஸ் பண்ணி கொண்டு இருக்கிறார். இவருக்கு மட்டும் வயது ஆகவில்லையா? என்று பார்ப்பவர்கள் கேட்கும் வகையில் தான் இவருடைய அழகு இப்பவும் குறையாமல் இருந்து வருகிறது. கௌசல்யாவின் சொந்த பெயர் அவருடைய வீட்டில் வைத்த பெயர் கவிதா தானாம். அவர் மலையாள சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் முதல் திரைப்படத்தில் இவர் நந்தினி என்று கேரக்டரில் நடித்ததால் இவரை நந்தினி என்றுதான் அழைத்து வருகிறார்களாம்.

நடிகர் முரளியுடன் முதல் திரைப்படம்
அதே நேரத்தில் தமிழில் இவர் முரளி நடித்த காலமெல்லாம் காதல் வாழ்க எனும் திரைப்படத்தில் இவர் கௌசல்யா எனும் கேரக்டரில் அறிமுகமானதாலே இவரை தமிழில் பலரும் கௌசல்யா என்று அழைத்து வருகிறார்கள். முதல் திரைப்படமே இவர் எதிர்பார்க்காத அளவில் இவருக்கு வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்ததாக இவர் விஜய் கூட இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். விஜய்யுடன் கதாநாயகியாக நடித்த நிலையில் ஒரு சில வருடங்களில் விஜய்க்கு அக்காவாகவும் அண்ணியாகவும் நடிக்க தொடங்கி விட்டார். அது மட்டும் இல்லாமல் சந்தோஷ் சுப்பிரமணியம் திரைப்படத்தில் ஜெயம் ரவியின் அக்கா கேரக்டரில் நடித்திருக்கிறார். கதாநாயகியாக நடித்து கெஸ்ட் ரோலில் நடிக்கும் நிலைக்கு வந்தாலும் இவர் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

திடீரென ஏற்பட்ட உடல்நிலை பிரச்சனை
இந்த நிலையில் திடீரென சினிமா உலகை விட்டு இவர் சில நாட்கள் விலகியே இருந்திருக்கிறார். அப்போது வெளியான புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியாகும் வகையில் தான் இருந்திருக்கிறது. உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாத வகையில் இவர் இருந்திருக்கிறார். இவர் திடீரென உடல் எடை கூடுவதற்கு காரணம் இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்த நேரத்தில் இவர் எடுத்த மெடிசின் தானாம். அதனால் உடல் எடை திடீரென அதிகரித்து விட்டதாம். அந்த நேரத்தில் இவர் 105 கிலோ வரைக்கும் இருந்தாராம். அதற்குப் பிறகு மீண்டும் முயற்சி எடுத்து பழைய நிலைக்கு வந்து பூஜை திரைப்படத்தில் விஷாலுக்கு சித்தியாக இவர் நடித்திருக்கிறார்.

மோட்டிவேஷன் கொடுக்கும் நபர்
தற்போது இவர் ஒரு நடிகையாகவும், பலருக்கு ஹெல்ப் செய்யும் ஒரு நபராகவும் இருந்து வருகிறாராம். ஆனால் இவர் இப்ப வரைக்கும் திருமணம் செய்து கொள்ளாமல் தான் இருந்து வருகிறாராம். இந்த நிலையில் தான் எவ்வளவு எடை அதிகரித்து இருந்தாலும் என்னால் மீண்டும் பழைய நிலைக்கு வர முடிந்தது. உங்களால் ஏன் முடியாது என்று பலருக்கு முன்மாதிரியாகவும் இவர் இருந்து வருகிறாராம். என்னுடைய திரைப்பட வாழ்க்கைக்காகத்தான் நான் மீண்டும் உடல் எடையை குறைத்தேன் என்று அவர் கூறியிருக்கிறார். ஆனாலும் உடல் எடையை குறைத்து பிறகு ஆரோக்கியமும் அதில் அடங்கி இருக்கிறது இந்த நாள் அதை நீங்களும் செய்யலாம் என்று பலருக்கு கூறி வருகிறார் .இந்த நிலையில் தற்போது மீண்டும் இவர் பல வருடங்களுக்குப் பிறகு சுந்தரி சீரியலில் அறிமுகம் ஆகி இருக்கிறார். இந்த சீரியலில் சுந்தரிக்கு தைரியம் ஊட்டி அவருடைய வெற்றிப் பாதையில் பயணிக்க வைப்பதற்காக ஒரு கேரக்டராக இவரும் வந்திருக்கிறார் .இவர் வந்த பிறகு இந்த சீரியலில் விறுவிறுப்பு அதிகரித்து இருப்பாதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
-
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications