மகாலட்சுமி வெளியிட்ட ஒற்றை பதிவு.. வாயடைத்துப் போன நெட்டிசன்கள்.. வேற லெவல் தான்
சென்னை: சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி திருமண முடிந்த ஒரு சில நாட்களுக்குப் பிறகு தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவு பலருடைய கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
மகாலட்சுமி வெளியிட்ட பதிவில் அவருடைய காதல் கவிதை ஆறாக ஓடுவதை பார்த்த நெட்டிசன்கள் வாயடைத்து போயிருக்கிறார்களாம்.
இதுவரைக்கும் கலாய்த்து வந்த நெட்டிசன்கள் தற்போதைய மகாலட்சுமியின் காதல் மழையைப் பார்த்து... கலாய்த்தது போதும் என்று நிறுத்தி விட்டார்கள் போல. பல பாசிட்டிவ் கமாண்டுகள் தான் குவிந்து வருகிறது.

ட்ரெண்டிங் புகைப்படங்கள்
வெள்ளித்திரை நடிகர்களான நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணத்தை மிஞ்சும் அளவிற்கு சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி இயக்குனர் ரவீந்தர் திருமணம் வேற லெவலில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மகாலட்சுமியின் திடீர் திருமணம் பலருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்திருந்தது. மகாலட்சுமியின் திருமணம் 90ஸ் கிட்ஸ்களை வெகுவாக பாதித்துவிட்டது போல. அதனாலே சமூக வலைத்தளங்களில் பொங்கி வருகிறார்கள். மகாலட்சுமி திருமண புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங்கில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

ரசிகர்களின் ஏக்கம்
திடீர் பரபரப்பை ஏற்படுத்திய சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் திருமண புகைப்படங்கள் மீம்ஸ்களாகவும் அதிகமாக வலம் வந்து கொண்டிருக்கிறது. என்னதான் நெட்டிசன்கள் தங்களைப் பற்றி கலாய்த்து வந்தாலும் அதைப்பற்றி கண்டு கொள்ளாத காதல் தம்பதியான ரவீந்தர் மகாலட்சுமி தினமும் தாங்கள் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போடுவதற்கு மறக்கவே இல்லையாம் ஆனால் திருமணத்திற்கு பிறகு ஒரு சில போஸ்ட்கள் மட்டுமே வெளியிட்டு வந்த மகாலட்சுமி தற்போது ரவீந்திரரோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு மேலும் ஏக்கத்தை கொடுத்திருக்கிறாராம்.

வாழ்த்துக்கள் மட்டும்தான்
மகாலட்சுமி திருமணத்திற்கு பிறகு பதிவிடும் புகைப்படங்களில் எல்லாமே காதல் கவிதைகள் கண்ணா பின்னாவென அலைபாயுது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் தற்போதைய லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு மகாலட்சுமி வெளியிட்ட கேப்ஷன் தான் வேற லெவல் என்று நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். "என் கையைப் பிடித்து, என் இதயத்தை பிடித்து, என்றென்றும் என்னை பிடித்துக் கொள்ளுங்கள்" என்று ரவீந்திரனை மகாலட்சுமி டேக் செய்திருக்கிறார். இந்த கேப்ஷன் பார்த்ததும் நெட்டிசன்கள் இதற்கு மேல் உங்களை கலாய்த்து ஒன்றுமே இல்லை என்று முடிவு செய்து விட்டார்கள் போல. அதனாலே இந்த போஸ்ட்க்கு வாழ்த்துக்கள் மட்டும்தான் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.

ரசிகர்களின் கேள்வி
தொகுப்பாளராக அறிமுகமாகி சின்னத்திரையில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் மகாலட்சுமி தற்போது ரவீந்தர் இயக்கும் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் திடீர் திருமணம் செய்திருந்தாலும் திருமணத்திற்கு பிறகு ரவீந்திரரோடு வெளியிடங்களுக்கு சென்று கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது மகாலட்சுமி நடிக்கும் அன்பே வா சீரியலில் மீண்டும் இவர் தொடர்வாரா?? அல்லது தனது கணவரோடு இணைந்து திரைப்படங்களை இயக்குவதில் மும்பரம் காட்டப் போகிறாரா?? என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications